Thursday, January 22, 2009

Week 8(எட்டாவது வாரம்)

இந்த வாரம் கருவின் கண்,காதுகள் நல்ல வளர்ச்சியடைந்து காணப்படும். கண்களின் மேல் ஒரு மெல்லிய தோல் மூடி இருக்கும். இத தோல் நாளடைவில் பிரிந்து கண் இமைகளாக வளர்ச்சிபெறும். இருதயம் இப்பொழுது ஒரே சீராக அடிக்கும். கருவின் நீளம் சுமார் 15 mm இருக்கும்.

உங்களுக்கு இன்னும் காலை வாந்தி நீடித்தால் travel band வாங்கி உபயோகித்து பார்க்கலாம். அது 24 மணி நேரத்துக்கும் நல்ல மற்றதை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. Ginger biscuit அல்லது plain crackers காலை எழுந்தவுடன் சாப்பிட்டால் காலை வாந்தி குறையலாம். முடிந்தவரை முதல் 3 மாதங்களுக்கு மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நலம். எனவே வாந்தியை நிறுத்த தரப்படும் மருந்துகளையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எப்படியோ 8 வாரங்களை ஓட்டி விட்டீர்கள். இன்னும் சில வாரங்களில்(3 மாத முடிவில்) அநேகர்களுக்கு காலை வாந்தி பிரச்சினை முடிவுக்கு வரும். எனவே மனம் தளராதீர்கள்!!!

2 comments:

Unknown said...

மேடம் என் மனைவிக்கு இரண்டு மாதம் முடிந்து இப்பொழுது மூன்றாம் மாதம் தொடங்கியுள்ளது, மருத்துவர், ஹார்மோன் மாத்திரை, போலிக் ஆசிட் மாத்திரை, மற்றும் வாந்தி மாத்திரையை தந்துள்ளார், சாப்பிடலாமா?

Thaai said...

Folic acid tab is a must. Vomit medicine vomit rombe irundhaal saapidalaam. Thavarillai. Hormone tab doc advice padi saapidavum. She is the best person to assess her health. Moreover, I am not a medical doctor. I am here to just share whatever I learnt through my pregnancy.

Goodluck to you both!!!