இந்த வாரம் குழந்தையிம் உள் உறுப்புகள் உருவாக ஆரம்பிக்கும். நச்சுக்கொடி, தொப்புள் கொடி உருவாகி இருக்கும்.
சிலருக்கு கரு கருப்பையின் சுவற்றுடன் ஒட்டிக்கொள்ளும் பொழுது implantation bleeding என்று சொல்லப்படும் மிக சிறிய அளவிலான இரத்த போக்கு முன்றாவது அல்லது நான்காவது வாரம் ஏற்படலாம். இதற்காக பயம் கொள்ள வேண்டியது இல்லையென்றாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து கரு நல்ல நிலையில் உள்ளதா என்று உறுதி செய்து கொள்வது நலம். சிலருக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டிய அதே சமயத்தில் சிறிய அளவில் உதிர போக்கு(spotting) ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் முடிந்த அளவு ஓய்வு எடுத்துகொள்ளவும். இதற்க்கு பல காரணங்கள் கூறப்படுவதால் மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது.
மருத்துவரை அணுகும் முன் கீழ்கண்டவற்றை கவனத்தில் கொண்டு உங்கள் மருத்துவரிடம் கூறவும்:
- உதிறபோக்கின் நிறம்: இளம் சிகப்பு, சிகப்பு அல்லது பழுப்பு
- உதிறபோக்கின் அளவு: sanitary napkin உபயோகித்து இருந்தால் எத்தனை உபயோகித்தீர் என்று கணக்கு வைக்கவும்.
- வயிற்று வலி, குளிர், காய்ச்சல், தலை சுற்றல், வேறு ஏதேனும் வலி இருப்பின் அதையும் மருத்துவரிடம் கூறவும்.
கர்ப்ப காலத்தில் எந்த கட்டத்தில் உதிரபோக்கு இருப்பினும், அது எவ்வளவு குறைவாக இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
என் அனுபவம் : எனக்கும் முதல் இரண்டு மாதம் மாதவிடாய் ஏற்படவேண்டிய காலத்தில் சிறிய அளவின் spotting இருந்தது. எனினும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தேன். நான் முதலில் அந்த spotting-ஐ மாதவிடாய் என்று எண்ணி 2 மாதங்கள் விட்டு விட்டேன். இரண்டாம் மாதமும் உதிர போக்கு மிக சிறிய அளவில் இருந்ததால் மாதவிடாய் கோளாறு என்று எண்ணி மருத்துவரை அணுகிய பொழுதுதான் நான் கர்ப்பம் அடைந்துள்ளது தெரிய வந்தது!!!
No comments:
Post a Comment