Sunday, January 25, 2009

Week 12(பனிரெண்டாவது வாரம்)

இப்பொழுது கருவின் முகம், கை,கால்,விரல்கள் ஆகியவை நல்ல வளர்ச்சியை பெற்று பார்ப்பதற்கு மனித உருவம் போல தெரியும். எனவே இப்பொழுது முதல் நாம் கருவை குழந்தை என்று அழைக்க போகிறோம்!!! :) குழந்தையின் இருதயம் நிமிடத்துக்கு 110-160 முறை துடிக்கும். குழந்தை விரலை சப்புவது, கை,கால்களை நன்றாக ஆடுவது, aminotic fluid-யை முழுங்குவது போன்றவைகளை செய்யும். குழந்தை இந்த வார முடிவில் தலை முதல் பிட்டம் வரையான நீளம் 5cm-உம், முழு நீளம் 6.5 cm நீளம் இருக்கும். எடை சுமார் 18-20gm இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கு மசக்கை(காலை வாந்தி) குறைந்து இருக்கும். சோம்பல் இன்னும் இருக்கலாம். இனி வரும் மருத்துவர் சந்திப்பில் அவருடன் ஆலோசித்து வாக்கிங், ஸ்விம்மிங், pregnancy யோகா போன்ற ஏதேனும் ஒன்றில் ஈடுபடலாம். எனினும் நீண்ட நேரம் நிற்க,நடக்க நேரிட்டால் 2 மணிநேரங்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுப்பது அவசியம் ஏனெனில் நீண்ட நேரம் நிற்கும், நடக்கும் பொழுது கருப்பைக்கு இரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். மிதமான உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும். எக்காரணம் கொண்டும் முச்சிரைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தலை சுற்றல் இருப்பின் உடனடியாக ஓய்வெடுங்கள்.

No comments: