Monday, November 9, 2009

பழங்களை எவ்வாறு எப்பொழுது சாப்பிட வேண்டும்?

கர்ப்ப காலத்தில் பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது பொதுவான கருத்து. பழங்களை உண்பதற்கு இயற்க்கை வைத்தியத்தில் ஒரு முறை உள்ளது.
 • காலையில் உண்ணும் பழங்கள் தங்கத்திற்கு சமம் மதியம் உண்ணும் பழங்கள் வெள்ளிக்கு சமம். இரவில் உண்ணும் பழங்கள் பித்தளைக்கு சமம்.
 • உணவிற்கு பின் அல்லது உணவுடனோ பழங்களை உண்டால் ஜீரணிப்பது சிரமம். எனவே பழங்களை தனியாக உண்பதே நல்லது. சிலர் உணவு உண்ட உடன் வாழைபழம் உண்பார்கள். அது ஜீரண கொழறையே உருவாக்கும் என்று சொள்ளபட்டுளது.
 • ஒரு நேரத்திற்கு ஒரு வகையான பழத்தை மட்டுமே உண்ண வேண்டும். பல வகை பழங்களை கலந்து உண்பது சரியான முறை அல்ல.

இருபத்திஆறாவது வாரம் (Week 26)

இப்பொழுது குழந்தையால் வெளி சத்தத்தையும், உங்கள் இதய துடிப்பு, வயற்றுக்குள் ஏற்படும் சத்தங்களையும் ஓரளவு கேட்க முடியும். சிறிதளவு வெளி வெளிச்சத்தையும் காண முடியும். இந்த வார முடிவில் குழந்தையின் எடை சுமார் 660 gms இருக்கும். உயரம் சுமார் 34 cms இருக்கும்.

இப்பொழுது சிலருக்கு stethascope வயற்றின் மேல் வைத்தால் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும். உங்களுக்கு கேட்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். சிலரிக்கு க்டைசி வரை stethascope மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியாது. இது சாதரணமானது தான். stethascopeஐ விட doppler கருவி மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை சுலபமாக கேட்க முடியும்.

வயறு பெரிதாகி கொண்டு வருவதனால் படுப்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஒரு பக்கம் படுக்கும் பொழுது வயற்றின் கீழ்( வயிர்டிற்கு சப்போர்ட் ஆகவும்) மற்றும் தொடைகளுக்கு நடுவில்(,இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வலி குறையும்) ஒரு தலையணையை வைத்து படுத்தால் சற்று சிரமம் குறையும். மல்லாக்க படுப்பது முதுகு தண்டிர்க்கு அதிக எடை ஏற்றுவதால் நல்லதல்ல. பொதுவாக தாய் இடதுபக்கம் திரும்பி படுப்பதே நல்லது. எனினும் இரவு முழுவதும் ஒரு பக்கமே படுப்பது என்பது கடினமானது. எனவே முடிந்தவரை அவ்வாறு படுக்க முயற்சிக்கலாம். மேலும் இடது வலது என்று திரும்பி படுக்கும் பொழுது எழுந்து உட்க்கார்ந்து திரும்பி படுப்பதே இனிமேல் நல்லது. இது குழந்தைக்கு கொடி சுற்றிகொள்வதை தடுக்கும் என்று முன்னோர்கள் சொல்கிறார்கள்.


இருபத்திஐந்தாவது வாரம் (week 25)

இப்பொழுது உங்கள் குழந்தையின் கைகள் நல்ல வளர்ச்சி பெற்று இருக்கும். தன்னை சுற்றி உள்ளவற்றை குழந்தை கைகளினால் ஆராய்ந்து பார்க்கும். குழந்தையின் அசைவுகளை முன்பை விட இப்பொழுது இன்னும்னன்றாக உணர முடியும். குழந்தையின் மூக்கு துவரம் வளர்ச்சிபெற்று இந்த வாரம் திறந்து கொள்ளும் வைப்பு உள்ளது. இந்த வார முடிவில் குழந்தையின் எடை சுமார் 625 gms இருக்கும். உயரம் சுமார் 34 cms இருக்கும்.

25 வாரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் ௧௫ வாரம் காத்திருக்கவேண்டுமா உங்களுக்கு என்ன குழந்தை என்று அறிந்து கொள்ள!!! அதற்குள் ஒரு சின்ன ஜோஷியம் பார்போமா?. கீழ்க்காணும் சீன ஜோஷியத்தை பாருங்கள். இது எனக்கு சரியாகவே வந்தது. Try your luck people :)


நீங்கள் கர்ப்பம் தரித்த போது உங்கள் வயதையும் எந்த மாதத்தில் கர்ப்பம் தரிதீர்கள் என்பதையும் வைத்து என்ன குழந்தை என்று கண்டுகொள்ளுங்கள். Have fun :)

Friday, November 6, 2009

இருபத்திநான்காவது வாரம்

இப்பொழுது குழந்தையின் உள் காது நல்ல வளர்ச்சிபெற்று இருபதால் குழந்தைக்கு தான் நேராக உள்ளோமா அல்லது தலை கீழாக உள்ளோமா என்று உணர முடியும். இப்பொழுது உங்கள் குழந்தை ஒவ்வொரு வாரமும் சுமார் 150 gms எடை கூடும். இப்பொழுது உங்கள் குழந்தையின் எடை சுமார் 575 gms இருக்கும். நீளம் சுமார் 30 cms இருக்கும்.

Breech Birth: இப்பொழுது பலருக்கு குழந்தைகள் தலை கீழ் நிலைக்கு திரும்பி இருக்கும். உங்கள் குழந்தை இன்னும் திரும்பவில்லை எனில் கவலை கொள்ள வேண்டாம். சில குழந்தைகள் பிறபதற்கு சில நாட்கள் முன் தான் திரும்பும். சில குழந்தைகள் திரும்பாமலே போகலாம். அவ்வாறு திரும்பாம்பல் போனால் அதை breech birth என்பார்கள். அவ்வாறான நிலையில் சுகப்ரசவம் மிகவும் கடினம் என்பதால் உங்கள் மருத்துவர் cesarean செய்ய அறிவுருதலாம்.

Premature Birth: 37 வாரங்களுக்கு குழந்தை பிறந்தால் அது preterm birth என்று சொல்லப்படும். 24 வாரங்களுக்கு மேல் குழந்தை பிறப்பின் அது பிழைபதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும் பல மாதங்கள் இன்ட்டேன்சிவே கேர் இல வைத்து இருக்க வேண்டி வரலாம்.

Monday, October 5, 2009

இருபத்திமூன்றாவது வாரம் (week 23 )

இந்தவாரம் குழந்தையின் நுரையீரல் வேகாமான வளர்ச்சி காணும். மூச்சு உள் இழுத்து வெளி விடப்படும் போது நுரையீரல் உப்பி சுருங்கும்போது ஒட்டிகொல்லாமல் இருக்கவும் சுருங்கிவிடாமல் இருக்கவும் உதவ surfactant எனப்படும் திரவத்தை நுரையீரல் உற்பத்திசெய்யும். நுரையீரலில் உள்ள இரத்த குழாய்களும் வேகமாக வளர்ச்சிபெறும். இப்பொழுது குழந்தையின் எடை சுமார் 500 gms இருக்கும்.

பிரசவத்தை எளிதாக்கும் ஹோமியோபதி

ஆம், ஹோமயோபதிஇல் தசைகளை பிரசவதிருக்கு தயார்படுத்த கூடிய மருந்துகள் உள்ளன. அவற்றை ஒரு தேர்ந்த ஹோமயோபதி மருத்துவரின் ஆலோசனைப்படி ஏழாவது மாதம் முதல் பிரசவ நாள் வரை எடுத்து வந்தால் பிரசவம் விரைவாக அமையும். இது என் அனுபவம். என் முதல் குழந்தை induce செய்யப்பட்டு முதல் வலி வந்து இரண்டரை மணி நேரத்தில் பிறந்தது. நான் மூன்று மாதம் முடிந்ததில் இருந்து பிரசவ நாள் வரை ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்தேன். அத்துடன் கடைசி இரண்டு மாதங்கள் squatting exercise செய்தேன். முடிந்தவரை தரையில் சப்பணமிட்டு அமரும்படி என் gynecologist அருவுருதினார். அதையும் செய்து வந்தேன்.மேலும் என் ஹோமயோபதி மருத்துவர் என்னை தினமும் ஒரு 10*10 அறையை பெருக்கி, குத்திட்டு அமர்ந்து துடைக்க சொன்னார். அனால் நான் அதை செய்யவில்லை என்பதை ஒப்புகொள்ளதான் வேண்டும் ;) .

முறையான நடை பயிற்சியுடன் ஹோமயோபதி மருந்து எடுத்துகொண்டல் நல்ல பலன் உண்டு என்பது என் அனுபவம். எனவே ஹோமயோபதி மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் அருகில் உள்ள நல்ல ஹோமயோபதி மருத்துவரை அணுகி பயன் பெறுங்கள்.

Saturday, September 19, 2009

இருபத்திஇரண்டாவது வாரம் (week 22 )

இப்பொழுது உங்கள் குழந்தையின் தைகள் மற்றும் நரம்புகள் ஓரளவு வளர்ச்சிபெற்று இருபதனால் அதன் அசைவும் சமனப்பட்டு இருக்கும் (co-ordinated ). இதுவரை மொழு மொழு என்று இருந்த குழந்தையின் மூளை இப்பொழுது மடுப்புகள் பெற ஆரம்பிக்கும். இது முப்பதினாலவது வாரம் வரை தொடரும். இப்பொழுது குழந்தை aminotic பிளுஇடை சிறுது விழுங்கி அதிலுள்ள சிறிது சர்க்கரை உறிஞ்சும். இது குழந்தையின் digestive system செரிமானம் செய்ய நல்ல பயிற்சியாக அமையும். இப்பொழுது குழந்தையின் எடை சுமார் 425 gms இருக்கும். தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 24 cms இருக்கும்.

கர்ப்ப கால நீரிழிவுக்கான உணவு முறை (Gestational Diabetes Diet)

சர்க்கரை அளவு கட்டுப்பாடு என்பது உணவு உண்பதுக்கு முன் சர்க்கரை அளவு 95 குறைவாகவும் உண வு உண்டு இரண்டு மணி நேரத்துக்கு பின் 120 கு குறைவாகவும் இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் சர்க்கரை கட்டுபாடுக்குள் இருப்பதாக அர்த்தம்.

உணவு கட்டுப்பாட்டின் மூலம் கற்ப கால நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம். எனவே எவ்வாறான உண்வு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
 • 3 முறை வயறு நிரம்ப உண்பதை விட 3 மணித்துளிகளுக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக உண்பது சர்க்கரை அளவை ஒரே சீராக வைக்க உதவும்.
 • முழு தானியங்கள்,தீட்டாத அரிசி சாதம், கோதுமை, ராகி, கம்பு போன்ற உணவுகளை மிதமான அளவில் உட்கொள்வது சிறந்தது. carbohydrates மிதமான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 • புரத சத்துள்ள ஆனால் கொழுப்பு குறைவாக உள்ள உணவுகள் நன்மை பயக்கும்
 • காய்கறிகள் பழங்கள் தேவையான நார்சத்தை கொடுக்கும். பழரசத்தை விட முழு பலன்களே நல்லது. பழரசம் அருந்துவதானால் நிறைய நீர் சேர்த்து சர்க்கரையை முடிந்தவரை குறைத்துகொள்ளவும்.
 • நிறைய நீர் மற்றும் சூப் அருந்தலாம்.
 • சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைத்து கொள்வது நலம் இத்துடன் சேர்த்து மிதமான நடை பயிற்சி மேற்கொள்வது மிக்க நன்மை பயக்கும்.
இவ்வாறு இருந்தாலே சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

Wednesday, September 16, 2009

இருபத்தியோராவது வாரம் (week 21 )

இது வரை கருவின் இரத்த அணுக்களை அதன் கல்லீரல் மற்றும் மண்ணீரல் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. இப்பொழுது அதனுடன் சேர்ந்து எலும்பு மஜ்ஜையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கும். கல்லீரல் இரத்த அணு உற்பத்தியை குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன் நிறுத்தி விடும். அதே போல மண்ணீரல் முப்பதாவது வாரத்துடன் உற்பத்தியை நிறுத்தி கொள்ளும். முன்றாவது trimester முடியும் தருவாயில் இரத்த அணு உற்பத்தியை எலும்பு மஜ்ஜைகை முழுமையாக செய்ய ஆரம்பிக்கும். குழந்தை பிரபிர்க்கு பின்னும் இரத்த அணு உற்பத்தி செய்வது எலும்பு மஜ்ஜையின் வேலை ஆகா இருக்கும். இப்பொழுது உங்கள் குழந்தையின் எடை சுமார் 375 grams இருக்கும் .

கற்ப கால நீரிழிவு (Gestational Diabetes)

நீரிழிவு என்பது ஒருவரின் pancreas(இது இரைப்பையை ஒட்டயுள்ள ஒரு சுரப்பி)
போதிய அளவு இன்சுலின் எனும் ஹார்மோன்ஐ
உருவாக்க முடியாமல் போகும் போது உருவாகும் ஒரு நிலையாகும்.

கர்ப்ப காலத்தில் 2% முதல் 13% பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியாதபோதிலும் சில காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று இது கற்ப காலத்தில் குழந்தையின் தேவைக்கும் சேர்த்து தாயின் உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் பொது ஏற்படும் ஒரு நிலையாகும்.மற்றொரு காரணமாக கூறபடுவது, ஈஸ்ட்ரோஜென், கோரிச்டோல் போன்ற ப்லசெண்டா உற்பத்திசெய்யும் ஹோர்மோன்கள் இன்சுலினை எதிர்க்க ஆரம்பிப்பதால் உடல் அதை ஈடு செய்ய அதிகமாக இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது. அது முடியாமல் போகும் போது நீரிழிவு ஏற்படுகிறது. இதே காரணத்தால் தான் குழந்தை பிறப்பிற்கு பின் ப்லசெண்டா வெளியில் வந்தவுடன் ஹார்மோன் உற்பத்தி நின்று விடுவதால் நீரிழிவு சரியாகி விடுவதாக சொல்லபடுகிறது. பொதுவாக கர்பத்தின் 20-24 வாரம்(mid-pregnancy) போல் ஆரம்பமாகும். எனவே 24முதல் 28 ஆவது வாரத்தில் உங்கள் மருத்துவர் இரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்.

கற்ப கால நீரிழிவு குழந்தை பிறப்பிற்கு பின் தானாக சரி ஆகிவிடும். எனினும் கற்ப காலத்தில் சர்கரையின் அளவு கட்டுபாட்டில் இல்லை எனில் அது குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.
 • அதிகபடியான சர்க்கரை குழந்தைக்கு போய் சேரும் என்பதால் குழந்தை எடை மிகுதியாக ஆகிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறானால் சுகப்ரசவம் கஷ்டமாகலாம்.
 • மேலும் சில குழந்தைகளுக்கு பிறந்த பின் hypoglycemia எனப்படும் சர்க்கரை அளவு குறைதல் மற்றும் காமாலை ஏற்படலாம்.
 • குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
என்ன பயமாக இருக்காதா? சில உணவு கட்டுப்பாடு மற்றும் மிதமான நடை பயிற்சி மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே பயம் கொள்ள வேண்டாம். அவ்வாறு சர்க்கரை அளவு கட்டுபாடுக்குள் வராவிடின் உங்கள் மருத்துவர் இன்சுலின் கு பரிந்துரைக்கலாம்.

Sunday, July 26, 2009

இருபதாவது வாரம் (week 20)

இப்பொழுது 'வெர்னிக்ஸ்' (vernix) என சொல்லப்படும் வெள்ளை நிற வழு வழுப்பான திரவம் குழந்தையின் தோலின் மேல் உருவாகி இருக்கும். இது குழந்தையின் தோலை "aminotic fluid" இல் இருந்து காபதாக சொல்லபடுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன் முற்றிலும் போய் விடும். எனினும் சில குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவை பிறந்த பின்னும் காணப்படும். ஆனால் இது கவலை கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 13 cms இருக்கும். முழு நீளம் 25.5 cms இருக்கும். எடை சுமார் 310gms இருக்கும்

கர்ப்ப காலத்தில் 10-12kgs வரை எடை கூடும். ஒரு சிலருக்கு அது கூடவோ குறையவோ இருக்கலாம். இப்பொழுது இந்த எடை எங்கெங்கு எந்த அளவு கூடும் என்று பாப்போம்:

 • குழந்தையின் எடை : 38%
 • நச்சுக்கொடி (PLACENTA): 9%
 • குழந்தை மிதந்து கொண்டு இருக்கும் நீர் (aminotic fluid) : 11%
 • உங்கள் உடலில் அதிகமாகி உள்ள இரதத்தின் எடை, திரவங்கள் :22%
 • உங்கள் கருப்பை, மார்பகங்கள், பிட்டம், கால், மாற்ற பாகங்கள்: 20%
இனிமேல் சிலருக்கு வயற்றின் தோல் விரிவடைய ஆரம்பிப்பதால் அடி வயற்றில் லேசான வலி இருக்கும். இப்பொழுதில் இருந்து வயறிற்கு நல்லெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் விட்டு பிறகு குளிக்கலாம். அவ்வாறு செய்வது தோல் வறண்டு போகாமல் இருக்க உதவும். தோலில் என்னை பசை இருப்பின் அது விரிவடையும் பொது ஏற்படும் அசொவ்கரியம் குறையும். மேலும் அது "stretch marks" எனப்படும் தோல் விரிவடைவதால் ஏற்படும் கோடுகள் விழுவதை குறைப்பதாக சொல்லபடுகிறது. சிலருக்கு மார்பகங்களிலும் இக்கோடுகள் விழும்.

Thursday, July 23, 2009

பத்தொன்பதாவது வாரம் (week 19)

குழந்தையின் கண் மற்றும் இமைகள் இப்பொழுது நல்ல வளர்ச்சி இருக்கும். எனினும் இமைகள் குழந்தை பிறக்கும் வரை மூடிய நிலையிலேயே இருக்கும். 24-25 வாரங்களில் குழந்தை பிறந்தாலும் கூட இமைகள் திறந்துகொள்ளும். குழந்தை இப்பொழுது நன்றாக எடை கூட ஆரம்பித்திருக்கும். இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 12 cms இருக்கும். முழு நீளம் 23 cms இருக்கும். எடை சுமார் 250 gms இருக்கும்

இப்பொழுது நீங்கள் நன்றாக எடை கூட ஆரம்பித்திருபீர்கள். எனவே இப்பொழுது நீங்கள் உங்கள் உடலுக்கு தக்கவாறான உடைகள் வாங்க வேண்டி வரலாம். கர்ப்ப காலத்தில் உபயோகிப்பதற்கென்றே பிரத்யோக ஆடைகள் கடைகளில் கிடைக்கும். அவை மிகவும் சவ்கரியமாக இருக்கும். சல்வார் போன்ற உடைகளை விரும்புவோர் சற்று பெரிய அளவில் தைத்து கொள்ளலாம். அவ்வாறு தைபவர்கள் முன் பக்கம் ஹூக் வைத்து front open டைப் தைத்தால் குழந்தை பிறந்த பின் பாலுட்டவும் வசதியாக இருக்கும்.

கற்ப காலத்தில் பிரா அளவு 2-3 சைஸ் வரை கூடும். எனவே அதற்க்கு தக்கவாறு சரியான அளவு வாங்கி உபயோகிப்பது மிகவும் முக்கியம். இறுக்கமான உள்ளாடை அணிய கூடாது. தளர்த்தியான உள்ளாடை அணிந்தால் மார்பகங்கள் தொங்கி போகும். சரியான அளவு உள்ளாடை இப்போதிருந்து அணிந்து வந்தால் மார்பகங்கள் தொய்வடைந்து போகும் அளவு குறையும். ஆனால் எப்படி இருந்தாலும் கர்பத்துக்கு பின் மார்பகங்கள் முன் போல் இல்லாமல் சற்று தொய்வடைவது தவிர்க்க முடியாது. பாலுட்டுவதால் மார்பகங்கள் தொய்வடையும் என்று சொல்வது தவறான கருத்து. அது கற்ப காலத்தில் பால் சுரப்பிகள் செயல்பட தொடங்கி விரிவடைவதால் ஏற்படுவது. நீங்கள் குழந்தைக்கு பால் ஊட்டினாலும் இல்லை என்றாலும் குழந்தை பிறபிர்க்கு முன்பே அவை விரிவடைந்து இருக்கும். எனவே மார்பகங்கள் சற்று தொய்வடைவது தவிர்க்க இயலாதது. பால் ஊட்டுபவரானால் குழந்தை பால் மறந்த பின் மார்பகங்கள் மிகவும் தளர்ந்தது போல் காணப்படும். சுமார் 6 மாதங்களில் மார்பகங்களில் மீண்டும் கொழுப்பு சேர்ந்து அவை ஒரளவு சரி ஆகும்.

Saturday, June 27, 2009

பதிணெட்டாவது வாரம்( week 18)

இப்பொழுது உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக அசைந்து விளையாடி கொண்டு
இருக்கும். சில சமயங்களில் அதிக அசைவும் சில சமயங்களில் அசைவில்லமலும் இருக்கும். நீங்கள் படுத்து இருக்கும் பொழுது குழந்தை சுறுசுறுப்பாக அசைவதை கவனிப்பீர்கள். நீங்கள் நடந்து கொண்டோ வேலை செய்து கொண்டோ இருக்கையில் அது குழந்தைக்கு தொட்டில் ஆடுவதை போல் இருக்கும். எனவே அவ்வாறான நேரங்களில் குழந்தை உறக்க நிலைக்கு சென்றுவிடுவதனால் அசைவுகள் குறைந்து காணப்படும். குழந்தையின் உடலில் இன்னும் கொழுப்பு சேர்ந்திருக்காது. எனவே அதனுடைய தோல் சுருக்கங்களுடன் காணப்படும். குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 11 cms இருக்கும். முழு நீளம் 21 cms இருக்கும். எடை சுமார் 210 gms இருக்கும்.

கர்ப்ப கால உணவு முறை :
கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துகளும்தாயின் மூலமாகவே குழந்தைக்கு கிடைக்கும். எனவே கர்ப்ப காலத்தில் தாய் சரிவிகித உணவே உண்பதில் கவனம் கொள்ள வேண்டும். கருவின் வளர்ச்சிக்கு தேவை என்று அதிக சக்தி தரும் உணவுகன் உன்ன வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பு சரியான கொண்டவரானால் கர்ப்ப காலத்தில் 200 கலோரி அதிகம் உண்டால் போதுமானதாகும். அதுவே நீங்கள் அதிக உடல் எடை அல்லது குறைந்த எடை கொண்டவரானால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு பிரத்தியோக உணவுமுறை பரிந்துரைக்கலாம்.

'junk food' மற்றும்
கடைகளில் கிடைக்கும் பழரசங்களையும் தவிர்க்கவும். சர்க்கரை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைத்து கொள்ளவும். உங்கள் இரத்த சொந்தத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருப்பின் இதில் கூடுதல் கவனம் கொள்ளவும். டி, காபி, cola, சாக்லேட் போன்றவைகளையும் முடிந்த வரை தவிர்க்கவும். தண்ணீர் மற்றும் நீர்த்த பழரசங்களை அருந்துவது மிக நல்லது.
உங்களுக்கு ஏதேனும் food allergy இருப்பின் அவ்வாறான உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடவும்.

சரிவிகித உணவு என்பது carbohydrates, protein, fats, minerals மற்றும் vitamins அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இப்பொழுது எந்த எந்த உணவுகளில் என்ன சத்து உள்ளது என்று பார்ப்போம்:

 • Carbohydrates: சாதம், சப்பாத்தி, ரொட்டி, தானியங்கள், உருளை கிழங்கு, பஸ்தா, நூடுல்ஸ், சேமியா,அரிசியில் செய்யப்பட்ட இட்லி, கொழுகட்டை, சேவை, கோதுமை சதம், உப்புமா போன்ற உணவுகளில் Carbohydrates நிறைந்து காணப்படும்.
 • Protein : பருப்பு வகைகள், முட்டை, மீன், இறைச்சி, பால் போன்றவற்றில் Protein மற்றும் மினரல்ஸ் உள்ளது.
 • Calcium: பால் , சீஸ், பனீர், தயிர் ஆகியவற்றில் calcium மற்றும் விடமின்ஸ் நிறைந்து உள்ளது.
 • Fibre: காய்கள், கீரை, பழங்களில் நார்சத்து(fibre) நிறைந்து உள்ளது. மலச்சிக்கலை(constipation) தவிர்க்க நார்சத்து மிக அவசியமாகும்.
 • Iron: சிவப்பு இறைச்சி , பேரிச்சை, பிக் போன்ற உலர்ந்த பழங்கள், கீரைகளில் உள்ளது. எனினும் உங்கள் மருத்துவர் கர்ப்ப காலத்தில் உங்களை Iron supplement எதுதுகொள்ள பரிந்துரைப்பார்.
சைவர்களுக்கு : உங்களுடைய protein மற்றும் கால்சியம் தேவையை நிறைவு செய்ய கர்ப்ப காலத்தில் தினமும் 600 ml பால் அல்லது அதுக்கு சமமான அளவு பால் கொண்ட பால் சார்ந்த பொருட்க்களை உணவில் சேர்த்துகொள்வது அவசியம். பால் பிடிகாதவறல் சோயா பால் அருந்தலாம்.Thursday, June 18, 2009

பதினேழாவது வாரம் (week 17)

இப்பொழுது குழந்தையின் சுவை மொட்டுக்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். எனவே குழந்தையால் இனிப்பு மற்றும் இனிப்பில்லாத திரவத்தை இனம் காண முடியும். இன்னும் மூன்றில் இருந்து ஐந்து வாரங்களில் உங்களால் குழந்தையின் அசைவை முதல் முறையாக உணர முடியும். அந்த அசைவு வயற்றில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதை போல இருக்கும். இப்பொழுது குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் 10 cm இருக்கும். முழு நீளம் 18cm இருக்கும். இடை சுமார் 140g இருக்கும்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணிற்கு எப்பொழுதையும் விட 12% அதிக சக்தி உணவில் இருந்து தேவைப்படும். நம் பாட்டிமார்கள் சொல்வதை போல் இருவருக்கு சாப்பிடவேண்டும் என்று 2 பெரியவர்கள் சாப்பிடும் அளவு உணவு சாப்பிட தேவை இல்லை!!! அதுவும் முதல் 3 மாதங்களில் அதிக சக்தி தேவை படாது. அடுத்து வரும் மாதங்களில் குழந்தை உடல் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். எனவே அதிக சக்தி தேவைப்படும். அதிலும் கடைசி 3 மாதங்கள் குழந்தையின் எடை விரைவாக கூடும்.

முதல் 3 மாதங்களில் மசக்கை இருப்பின் 1.5 kg மட்டுமே எடை கூடும். அடுத்து வரும் மாதங்களில் சரியான உடல் எடை கொண்ட பெண்ணிற்கு வாரம் 0.4kg எடை கூடுவது நலம். கர்பத்திற்கு முன்பே அதிக எடை உடையவரானால் 0.3kg கூடினால் போதுமானது.
கர்பத்திற்கு முன்பு குறைந்த உடல் எடை உடையவராய் இருப்பின் 0.5kg கூடலாம். உடல் எடை கண்டிப்பாக இது போல தான் உயர வேண்டும் என்று இல்லை. இது ஒரு வழிகாட்டி ஆகா கொள்ளவும்.எக்காரணம் கொண்டும் கர்ப்பம் என்று தெரிந்த பின் உடல் டையே குறைக்க முயற்சி மேற்கொள்ள கூடாது.

இந்த
மூன்று மாதங்களில் (second trimester) நீங்கள் 5-7 kg உடல் எடை கூடுவீர்கள். இது கர்ப்பகாலத்தில் கூடும் எடையில் 50-60% ஆகும்.

பதினாறாவது வாரம் (Week 16)

இப்பொழுது உங்கள் குழந்தையின் நரம்புகளும் தசையும் இணைக்கப்பட்டு இருக்கும். குழந்தையால் இப்பொழுது நன்றாக நகர முடியும். இருப்பினும் இது உங்களுக்கு முதல் கர்ப்பமாக இருந்தால் உங்களால் குழந்தயின் அசைவுகளை இப்பொழுதே உணர முடியாது. இன்னும் சில வாரங்கள் ஆகும். இப்பொழுது குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் 9cm இருக்கும். முழு நீளம் சுமார் 16cm இருக்கும்.எடை சுமார் 90-100gms இருக்கும்.

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது மிகவும் சாதரணமாக காணப்படும் விஷயம். மலசிக்கலை தவிர்க்க தினமும் 4-5 செர்விங் காய்கள், 2 செர்விங் பழங்கள் சாப்பிட வேண்டும். நீர் 2.5 litres அருந்தவும். prune ஜூஸ் மலசிக்கலை தவிர்க்க உதவும். நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற தொந்தரவு இருப்பின் உணவுக்கு பின் சற்று வெதுவெதுப்பான நீர் பருகினால் ஓரளவு நன்றாக இருக்கும். உங்களுக்கு ஏற்கனவே piles இருப்பின் இப்பொழுது மலசிக்கலை தவிர்க்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் சாதரணமாகவே பிரசவத்திற்கு பின் piles வரும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே இருப்பவர்களுக்கு தொந்தரவு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.

Sunday, June 14, 2009

பதினைந்தாவது வாரம்(week 15)

இப்பொழுது குழந்தை விரல் சூப்ப ஆரம்பித்திருக்கும். குழந்தையால் உங்கள் குரலை, இதய துடிப்பை கேட்க முடியும். அதன் கால்கள் இப்பொழுது கைகளை விட நீளமாக இருக்கும். Lanugo என்று அழைக்கப்படும் பூனை முடி உடல் முழுவதும் இருக்கும். இது குழந்தையின் உடல் வெப்பத்தை சரியாக ஒரே சீராக வைக்க உதவுவதாக சொல்லபடுகிறது. இது சுமார் 26 வாரங்கள் வரை வளரும்.அதன் பின் குறைய ஆரம்பிக்கும். இந்த வார முடிவில் குழந்தையின் நீளம் 12 cm ஆகவும் உடல் எடை சுமார் 65-75gms ஆகவும் இருக்கும்.

இப்பொழுது கர்ப்பகால hormones ஸ்திர நிலையை அடைந்திருக்கும். எனவே வாந்தி போன்ற தொந்தரவுகள் குறைந்து இருக்கும். இவ்வளவு தூரம் வந்து விட்டோம்.
உங்களுக்கு குழந்தை ஆணா பெண்ணா
என அறிந்துகொள்ள ஆவலாக உள்ளதா?. இதோ ஒரு பழங்கால முறை- கண்ணாடியின் முன் பொய் நில்லுங்கள். உங்களை நன்கு கவனியுங்கள். உங்கள் நிறம் வழக்கத்துக்கு மாறாக வெள்ளையாக உள்ளதா? உங்கள் தோல் பளபளப்பாக உள்ளதா? கை காலில் முடி வளர்ச்சி குறைந்து கானபடுகிரத? முன்பை விட அழகாக பளிச்சென்று இருகிறீர்களா? இவை அனைத்துக்கும் ஆம் என்ற பதிலாக இருந்தால் உங்களுக்கு பெண் குழந்தை என்று கூறுவார் நம் முன்னோர். அவ்வாறு அல்லாமல் நிறம் குறைந்து சருமம் வறண்டு முடி வளர்ச்சி அதிகரித்து அலகு குறைந்தும் இருந்தீர்களானால் ஆண் என்று கொள்ளவும்.

இது எந்த அளவு உண்மை என தெரிந்துகொள்ள ஆசையா? இன்னும் 25 வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும் அதற்கு. ஹி ஹி ஹி. ஆனால் இந்த ஜோஷியம் எனக்கு சரியாகவே இருந்தது :)

பதினான்காவது வாரம்(week 14)

இரண்டாவது trimester-இல் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

இந்த
வாரம் கருவின் முக அமைப்பு இன்னும் தெளிவான உரு பெற்றிருக்கும். இப்பொழுது குலைந்தையால் தொடுதல் போன்றவற்றை உணர முடியும். மேலும் அதனுடைய தலையே திருப்ப முடியும். இப்பொழுது குழந்தை சிறுநீர் உற்பத்தி செய்ய ஆரம்பித்து அதை aminotic fluid-இனுள் வெளியேற்றும். aminotic fluid 3 மணி நேரத்துக்கு ஒரு முறை உற்பத்தி ஆகி கொண்டே இருக்கும். ஆனால் இந்த திரவம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது! இந்த வார முடிவில் குழந்தையின் முழு நீளம் சுமார் 9 cm இருக்கும். எடை 45-55gms இருக்கும்.

இப்பொழுது placenta முழு வளர்ச்சி அடைந்தி கருவை பல தீங்கு விளைவிக்க கூடிய அணுக்களில் இருந்து காக்கும் தடுப்பாக செயல் பட்டுக்கொண்டு இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவு, சுவாசத்தில் கவனமாக இருக்கவேண்டும். முடிந்தவரை சிகரெட் புகை, சுத்தமில்லாத காற்று சுவாசிப்பதை தவிர்க்கவும்.
உணவு முறையில் கர்ப்ப காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
 • முட்டை மற்றும் மாமிச உணவுகளை முழுமையாக வேக வைத்தே உண்ண வேண்டும். Half boil, bulls eye, கலக்கி போன்றவற்றை தவிர்பது நலம்.
 • liver உண்பதை தவிர்க்கவும். அதில் உள்ள வைட்டமின் எ கர்ப்ப காலத்தில் சற்று அதிகமாக உட்கொள்ள பட்டாலும் கெடுதலை விளைவிக்கும்.
 • ஆட்டு பால் மற்றும் soft சீஸ் தவிர்க்க பட வேண்டும்
 • காய்கறிகள் பழங்களை வினிகர் கலந்த நீரில் கழுவி உபயோகிப்பது நலம். அவ்வாறு செய்யும் பொழுது அவற்றின் மேல் ஒட்டி உள்ள pesticide-ஐ எடுக்க உதவும். இதை கர்ப்ப காலத்தில் மட்டும் அன்றி எப்பொழுதும் கடைபிடிப்பது நல்லது.
 • மாமிச உணவு தயாரிக்கும் பொழுது அது முழுமையாக வேகாமல் இருக்கும் பொழுது ருசி பார்ப்பது தவிர்க்கபடுவது நலம்.
 • 'Expiry date' முடிந்த எந்த உணவையும் உண்ண வேண்டாம்.
 • பால் நன்றாக காய்ச்சிய பின்பே அருந்த வேண்டும்.

Monday, January 26, 2009

Week 13(பதிமுன்றவது வாரம்)

இந்த வார முடிவில் குழந்தை ஒரு முழுமையான உருவை பெற்றிருக்கும் என்றாலும் அது மிக சிறிய உருவமாக தான் இருக்கும். இனி முதல் எலும்புகள் நல்ல வளர்ச்சியடையும் காலகட்டம் . தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் 6cm, முழு நீளம் சுமார் 7.5cm இருக்கும். எடை சுமார் 30gms இருக்கும்.

குழந்தையின் எழும்பு வளர்ச்சிக்கு உதவிட தாய் கால்சியம் நிரந்த உணவுகள்(பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்) மற்றும் calcium supplements சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். குழந்தைக்கு தேவையான கால்சியம் உணவில் மற்றும் மாத்திரையில் கிடைக்கவில்லை என்றால் தாயின் எலும்பில் இருந்து கால்சியம் குழந்தை எடுத்துக்கொள்ளும். இது பின்னாளில் தாய்க்கு எழும்பு தேய்தல், முட்டி வலி போன்றவையில் கொண்டு சேர்க்கும். எனவே கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் போதிய அளவு கால்சியம் உள்ள உணவே மற்றும் supplements எடுத்து கொள்வது மிக முக்கியமாகும்.

Sunday, January 25, 2009

Week 12(பனிரெண்டாவது வாரம்)

இப்பொழுது கருவின் முகம், கை,கால்,விரல்கள் ஆகியவை நல்ல வளர்ச்சியை பெற்று பார்ப்பதற்கு மனித உருவம் போல தெரியும். எனவே இப்பொழுது முதல் நாம் கருவை குழந்தை என்று அழைக்க போகிறோம்!!! :) குழந்தையின் இருதயம் நிமிடத்துக்கு 110-160 முறை துடிக்கும். குழந்தை விரலை சப்புவது, கை,கால்களை நன்றாக ஆடுவது, aminotic fluid-யை முழுங்குவது போன்றவைகளை செய்யும். குழந்தை இந்த வார முடிவில் தலை முதல் பிட்டம் வரையான நீளம் 5cm-உம், முழு நீளம் 6.5 cm நீளம் இருக்கும். எடை சுமார் 18-20gm இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கு மசக்கை(காலை வாந்தி) குறைந்து இருக்கும். சோம்பல் இன்னும் இருக்கலாம். இனி வரும் மருத்துவர் சந்திப்பில் அவருடன் ஆலோசித்து வாக்கிங், ஸ்விம்மிங், pregnancy யோகா போன்ற ஏதேனும் ஒன்றில் ஈடுபடலாம். எனினும் நீண்ட நேரம் நிற்க,நடக்க நேரிட்டால் 2 மணிநேரங்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுப்பது அவசியம் ஏனெனில் நீண்ட நேரம் நிற்கும், நடக்கும் பொழுது கருப்பைக்கு இரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். மிதமான உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும். எக்காரணம் கொண்டும் முச்சிரைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தலை சுற்றல் இருப்பின் உடனடியாக ஓய்வெடுங்கள்.