Saturday, June 27, 2009

பதிணெட்டாவது வாரம்( week 18)

இப்பொழுது உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக அசைந்து விளையாடி கொண்டு
இருக்கும். சில சமயங்களில் அதிக அசைவும் சில சமயங்களில் அசைவில்லமலும் இருக்கும். நீங்கள் படுத்து இருக்கும் பொழுது குழந்தை சுறுசுறுப்பாக அசைவதை கவனிப்பீர்கள். நீங்கள் நடந்து கொண்டோ வேலை செய்து கொண்டோ இருக்கையில் அது குழந்தைக்கு தொட்டில் ஆடுவதை போல் இருக்கும். எனவே அவ்வாறான நேரங்களில் குழந்தை உறக்க நிலைக்கு சென்றுவிடுவதனால் அசைவுகள் குறைந்து காணப்படும். குழந்தையின் உடலில் இன்னும் கொழுப்பு சேர்ந்திருக்காது. எனவே அதனுடைய தோல் சுருக்கங்களுடன் காணப்படும். குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 11 cms இருக்கும். முழு நீளம் 21 cms இருக்கும். எடை சுமார் 210 gms இருக்கும்.

கர்ப்ப கால உணவு முறை :
கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துகளும்தாயின் மூலமாகவே குழந்தைக்கு கிடைக்கும். எனவே கர்ப்ப காலத்தில் தாய் சரிவிகித உணவே உண்பதில் கவனம் கொள்ள வேண்டும். கருவின் வளர்ச்சிக்கு தேவை என்று அதிக சக்தி தரும் உணவுகன் உன்ன வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பு சரியான கொண்டவரானால் கர்ப்ப காலத்தில் 200 கலோரி அதிகம் உண்டால் போதுமானதாகும். அதுவே நீங்கள் அதிக உடல் எடை அல்லது குறைந்த எடை கொண்டவரானால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு பிரத்தியோக உணவுமுறை பரிந்துரைக்கலாம்.

'junk food' மற்றும்
கடைகளில் கிடைக்கும் பழரசங்களையும் தவிர்க்கவும். சர்க்கரை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைத்து கொள்ளவும். உங்கள் இரத்த சொந்தத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருப்பின் இதில் கூடுதல் கவனம் கொள்ளவும். டி, காபி, cola, சாக்லேட் போன்றவைகளையும் முடிந்த வரை தவிர்க்கவும். தண்ணீர் மற்றும் நீர்த்த பழரசங்களை அருந்துவது மிக நல்லது.
உங்களுக்கு ஏதேனும் food allergy இருப்பின் அவ்வாறான உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடவும்.

சரிவிகித உணவு என்பது carbohydrates, protein, fats, minerals மற்றும் vitamins அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இப்பொழுது எந்த எந்த உணவுகளில் என்ன சத்து உள்ளது என்று பார்ப்போம்:

  • Carbohydrates: சாதம், சப்பாத்தி, ரொட்டி, தானியங்கள், உருளை கிழங்கு, பஸ்தா, நூடுல்ஸ், சேமியா,அரிசியில் செய்யப்பட்ட இட்லி, கொழுகட்டை, சேவை, கோதுமை சதம், உப்புமா போன்ற உணவுகளில் Carbohydrates நிறைந்து காணப்படும்.
  • Protein : பருப்பு வகைகள், முட்டை, மீன், இறைச்சி, பால் போன்றவற்றில் Protein மற்றும் மினரல்ஸ் உள்ளது.
  • Calcium: பால் , சீஸ், பனீர், தயிர் ஆகியவற்றில் calcium மற்றும் விடமின்ஸ் நிறைந்து உள்ளது.
  • Fibre: காய்கள், கீரை, பழங்களில் நார்சத்து(fibre) நிறைந்து உள்ளது. மலச்சிக்கலை(constipation) தவிர்க்க நார்சத்து மிக அவசியமாகும்.
  • Iron: சிவப்பு இறைச்சி , பேரிச்சை, பிக் போன்ற உலர்ந்த பழங்கள், கீரைகளில் உள்ளது. எனினும் உங்கள் மருத்துவர் கர்ப்ப காலத்தில் உங்களை Iron supplement எதுதுகொள்ள பரிந்துரைப்பார்.
சைவர்களுக்கு : உங்களுடைய protein மற்றும் கால்சியம் தேவையை நிறைவு செய்ய கர்ப்ப காலத்தில் தினமும் 600 ml பால் அல்லது அதுக்கு சமமான அளவு பால் கொண்ட பால் சார்ந்த பொருட்க்களை உணவில் சேர்த்துகொள்வது அவசியம். பால் பிடிகாதவறல் சோயா பால் அருந்தலாம்.



No comments: