இப்பொழுது குழந்தையின் சுவை மொட்டுக்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். எனவே குழந்தையால் இனிப்பு மற்றும் இனிப்பில்லாத திரவத்தை இனம் காண முடியும். இன்னும் மூன்றில் இருந்து ஐந்து வாரங்களில் உங்களால் குழந்தையின் அசைவை முதல் முறையாக உணர முடியும். அந்த அசைவு வயற்றில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதை போல இருக்கும். இப்பொழுது குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் 10 cm இருக்கும். முழு நீளம் 18cm இருக்கும். இடை சுமார் 140g இருக்கும்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணிற்கு எப்பொழுதையும் விட 12% அதிக சக்தி உணவில் இருந்து தேவைப்படும். நம் பாட்டிமார்கள் சொல்வதை போல் இருவருக்கு சாப்பிடவேண்டும் என்று 2 பெரியவர்கள் சாப்பிடும் அளவு உணவு சாப்பிட தேவை இல்லை!!! அதுவும் முதல் 3 மாதங்களில் அதிக சக்தி தேவை படாது. அடுத்து வரும் மாதங்களில் குழந்தை உடல் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். எனவே அதிக சக்தி தேவைப்படும். அதிலும் கடைசி 3 மாதங்கள் குழந்தையின் எடை விரைவாக கூடும்.
முதல் 3 மாதங்களில் மசக்கை இருப்பின் 1.5 kg மட்டுமே எடை கூடும். அடுத்து வரும் மாதங்களில் சரியான உடல் எடை கொண்ட பெண்ணிற்கு வாரம் 0.4kg எடை கூடுவது நலம். கர்பத்திற்கு முன்பே அதிக எடை உடையவரானால் 0.3kg கூடினால் போதுமானது. கர்பத்திற்கு முன்பு குறைந்த உடல் எடை உடையவராய் இருப்பின் 0.5kg கூடலாம். உடல் எடை கண்டிப்பாக இது போல தான் உயர வேண்டும் என்று இல்லை. இது ஒரு வழிகாட்டி ஆகா கொள்ளவும்.எக்காரணம் கொண்டும் கர்ப்பம் என்று தெரிந்த பின் உடல் டையே குறைக்க முயற்சி மேற்கொள்ள கூடாது.
இந்த மூன்று மாதங்களில் (second trimester) நீங்கள் 5-7 kg உடல் எடை கூடுவீர்கள். இது கர்ப்பகாலத்தில் கூடும் எடையில் 50-60% ஆகும்.

No comments:
Post a Comment