Wednesday, October 27, 2010

குழந்தை நலம்!!!

நான் சில மாதங்களாக  பதவுகள் போடா முடியாமைக்கு மன்னிக்கவும். இன்று குழந்தை நலம் பற்றி ஒரு அருமையான ப்ளாக் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு. இந்த ப்ளாக் ஒரு குழந்தை நல மருத்துவருடையது  என்பது மேலும் சிறப்பு. அந்த ப்ளாக் இதோ இந்த முகவரியில் சென்று பாருங்கள்.

 http://doctorrajmohan.blogspot.com/

Thursday, April 15, 2010

விமான பயணம்

கர்ப்ப காலத்தில் விமானத்தில் பயணம் செய்வதை பற்றிய குழப்பம் பலர் மனத்திலும் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.

விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள கர்பிணிகள் முடிந்தவரை 14-28 வாரங்களை தேர்வு செய்வது நல்லது. 36 வாரங்கள் வரை விமான பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு மேல் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கபடுவீர்கள். எவ்வாறாயினும் முதலில் உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி ஆலோசனை மேற்கொள்வது முக்கியம். உங்கள் கர்ப்பம் சிக்கல் இல்லாதது ஆயின் 14-36 வாரங்கள் வரை விமான பயன் மேற்கொள்வதில் சிக்கல் வராது. மீளும் கவனமாக இருக்க விரும்ம்புவோர் 14-32 வாரங்களுக்குள் உங்கள் பயணங்களை வைத்து கொள்ளலாம்.

பலருக்கு உள்ள இன்னொரு சந்தேகம் விமான நிலையத்தில் உள்ள scanner/metal detector வழியாக போனால் கரு பதிக்கபடுமா என்பது தான்.
விமான நிலையத்தில் உள்ள scanner/metal detector வழியாக போவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. X-ரே தான் குழந்தைக்கு பதிப்பு உண்டாக்கும். scanner/metal detector-இல் X-ரே கதிர் வீச்சு இருக்காது. நம் பெட்டிகளை சோதனை செய்யும் கருவியில் தான் X-ரே கதிர் வீச்சு இருக்கும். எனவே பயம் கொள்ள வேண்டாம்.

இப்பொழுது இரண்டாம் நிலை சோதனைக்காக உபயோகிக்கப்படும் backscatter X-ray system சிறிதளவு(மிக மிக குறைந்த அளவில்) X-ரே கதிர் வீச்சு கொண்டது எனினும் அது கர்பிணிகளுக்கு பாதிப்பில்லை என சொல்ல படுகிறது. மேலும் இது இரண்டாம் நிலை சோதனைக்காகவே உபயோக படுகிறது. அதாவது சந்தேக படும்படியான நபர்கள் மேல் மட்டுமே செயய படும். சில சமயம் இரண்டாம் நலை சோதனை random ஆக செய்யப்படும். முதல் நிலை சோதனை என்பது metal detector மூலமே செய்ய படுகிறது. அப்படியே உங்களை இரண்டாம் நிலை சோதனைக்கு வர சொன்னால், நீங்கள் கர்ப்பமாக இருப்பத சுட்டி காட்டி backscatter-கு பதில் full pat-test செய்ய சொல்லி கோரிக்கை வைக்கலாம்.

Saturday, April 3, 2010

கால் வீக்கம் (preganancy oedema)

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை கவலை கொள்ள செய்யும் ஒன்று இந்த கால வீக்கம். அனால் பொதுவாக இது கவலை கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?

குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அது அடிவயற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் inferior vena cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior vena cava பதங்களில் இருந்து இரத்தைத்தை மேல எடுத்து செல்லும். இப்போது அழுத்தினால் அது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. எனவே இரத்தம் காலில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது water retention அதிகரிக்கும். அதன் காரணமாகவே வீக்கம் ஏற்படுகிறது.

இந்த கால் வீக்கம் காலை நேரங்களில் குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். வெயில் காலங்களில் வீக்கம் அதிகரிக்கும். சிலருக்கு கை வீக்கம் கூட ஏற்படும்.

எப்படி சமாளிப்பது:
 • வீக்கம் அதிகமாக இருப்பின் சற்று பெரிதாக செருப்புகள் வாங்கி உபயோகியுங்கள்
 • முதிந்தவரை வலது பக்கம் படுக்கவும். இது inferior vena cava மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும்.
 • கால்களை உயர்த்தி வைக்கவும்
 • நிறைய தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 2- 21/2 லிட்டர் குடியுங்கள்
 • உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்
 • வாக்கிங் அல்லது ஸ்விம்மிங் தொடர்ந்து செய்வது நல்லது
 • கால்களை கீழிருந்து மேலாக நீவி விடலாம்
 • பார்லி காஞ்சி, வெந்தய காஞ்சி பருகலாம்
 • வீக்கம் உள்ள இடத்தில பச்சை முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டாலும் வீக்கம் குறையும்.
 • ஹோமாபதில் இதற்கு மருந்து உண்டு.

எப்பொழுது வீக்கம் கவலைப்பட வைக்கும்?

திடீர் என கை, கால், முகாம் வீங்கினாலோ அல்லது இந்த பாகங்களில் வீக்கம் அதிகமா இருந்தாலோ அது pre-eclampsia வாக இருக்கு வாய்ப்பு உள்ளது. pre-eclampsia என்பது placenta(கொடி) சரியாக வேலை செய்யாத போது ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

எப்பொழுது சரி ஆகும்?

குழந்தை பிறந்த 2-3 வாரங்களில் முற்றிலும் வீக்கம் வாங்கி விடும். எனவே கவலை பட வேண்டாம் :)

Wednesday, February 17, 2010

தாய்க்கு வேண்டிய பொருட்கள்

தாய்க்கு: வாங்க வேண்டிய மற்றும் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.

 • நைட்டி :முன் பக்கம் ஜிப் வைத்த அல்லது பீடிங் (முன் பக்கம் ஒரு ஜிப் மற்றும் பீட் பண்ண வசதியாக மார்பகத்துக்கு பக்கத்தில் 2 ஜிப் வரும்)நைட்டி . சிசேரியன் என்றால் முன் பக்கம் புல் ஓபன் நைட்டி தேவைப்படும். இப்போதைக்கு புல் ஓபன் நைட்டி ஒன்று வாங்கி கொள்ளுங்கள். பின்னர் தேவை எனில் வாங்கி கொள்ளலாம்.
 • பீடிங் பிரா : கடைசி மாதத்தில் வாங்குங்கள். அப்பொழுது நீங்கள் அணியும் ப்ரேசியரின் அளவை விட ஒரு அளவு அதிகம் வாங்கினால் சரியாக இருக்கும். எடுத்துகாட்டாக 32 அளவு உபயோகிப்பவர்கள் 34 அளவு வாங்க வேண்டும்.
 • சுடிதார்: முன் பக்கம் ஹூக் வைத்து சில சுடிதார் தைத்து கொள்ளுங்கள். வெளியில் போகும் பொது பீட் பண்ண வசதியாக இருக்கும். கொஞ்சம் லூஸ் வைத்து தைத்து கொள்ளுங்கள்.
 • வெளி நாட்டில் இருப்பவர்கள் maternity dresses பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
 • disposable panties - 20
 • maternity நாப்கின்ஸ்- 20 pack ஒன்று
 • Toiletries பேகில் உங்களுக்கு தேவையான சீப்பு, சோப்பு,பவுடர், டிஒட்ரன்ட் , பொட்டு, பேண்ட், கிளிப்ஸ்,பிரஸ், பேஸ்ட் போன்றவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
 • திஸ்ஸூ பேப்பர் ஒரு பாக்.
 • டவல் & கை துவலை-2
 • பிரஸ்ட் பேட்: தேவையெனில் வாங்கி கொள்ளுங்கள்.
 • பாத்ரூம் ஸ்லிப்பெர்ஸ்: மருத்துவமனைக்கு எடுத்து செல்ல.
 • சேர் குசன்: இரண்டு எடுத்து கொண்டால் குழந்தைக்கு பீட் பண்ணும் பொழுது கிழே ஒன்றும், முதுக்கு ஒன்று வைத்து கொண்டால் வசதியாக இருக்கும். நோர்மல் டெலிவரிகு பின் தையல் போடப்பட்டு இருந்தால் சேரில் குசன் வைத்து அமர்ந்தால் வலி குறைவாக இருக்கும்.

Tuesday, February 16, 2010

வாங்க வேண்டிய பொருட்கள் (purchase list)

Due Date நெருங்கி கொண்டு இருகிறவர்களுக்கு உபயோகமான ஒரு லிஸ்ட். இதில் நீங்கள் பிரசவத்திற்கு முன் குழந்தைக்கும், உங்களுக்கும் வாங்க வேண்டிய பொருட்களை பற்றி பாப்போம். குழந்தைக்கு வாங்கும் போதும் கச கச வென்று டிசைன் உள்ளது, அடர்த்தியான நிறங்கள் கொண்டதை தவிர்க்கவும். வெளிர் நிறங்கள்,வெள்ளை போன்றவை நல்லது. என்னெனில் அவற்றில் எறும்பு போன்ற பூச்சிகள் இருந்ந்தால் பளிச் என்று தெரியும்.

குழந்தைக்கு:
 • 6 செட் சட்டை : ஜாஸ்தி வாங்க வேண்டாம். கிப்ட் ஆக நிறைய சட்டைகள் வரும். எனவே முதல் சில நாட்களுக்கு அளவாக வாங்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வாங்கி கொள்ளுங்கள். குளிர் காலமா அல்லது வெயில் காலமா என்பதை கருததில் கொண்டு வாங்குங்கள். சட்டைகள் அனைத்தையும் துவைத்து அயன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • ஸ்லீப் சூட்: தேவையெனில் இரண்டு வாங்கி கொள்ளவும்.
 • ஸ்வட்டர்: உங்கள் இடத்திற்கு தேவை எனில் வாங்கி கொள்ளவும்.
 • mitten மற்றும் booties: கை காலுக்கு போட தேவைப்படும். முடி நிறைய உள்ள குழந்தைகள் தங்கள் கைகளால் முடியை இழுத்துக்கொண்டு கையை வெளியில் எடுக்க தெரியாமல் அழும். அவ்வாறானவர்களுக்கு mitten போட்டு விடலாம்.
 • நாப்பி க்ளோத்: 1 dozen triangle வடிவில் உள்ளது அல்லது velcro வைத்து ஓட்டுவது உபயோகிக்க சுலபமாக இருக்கும். triangle வடிவ நப்பி பனியன் துணி மற்றும் காட்டனில் கிடைக்கும். இவற்றையும் துவைத்து வைத்து கொள்ளுங்கள்.
 • நாப்பி பாட்ஸ் அல்லது diaper: 1 pack இது இரவு நேரத்தில் பயன்படுத்தி கொள்ள. டைபர் ரணில் தொப்புள் வரும்ம் இடத்தில ஒபெனிங் இருபது போல் பார்த்து வாங்குங்கள். நாப்பி பட்ஸ் என்பது சானிடரி பட போலவே பெரியதாக இருக்கும். இதை நாப்பி கிளோதில் வைத்து ஒட்டி உபயோகிக்க வேண்டும். இது போன்ற பாட் குழந்தை திரும்ப ஆரம்பிக்கும் வரை உபயோகிக்கலாம். இதை உபயோகிப்பதால் குழந்தைக்கு கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கும்.
 • பிளாஸ்டிக் சீட்/changing sheet: நாப்பி மற்ற தேவைப்படும்.
 • Quick dry sheet: கீழே பிளாஸ்டிக் மேலே ஒரு காட்டன் லேயர் இருக்கும். ஈரத்தை நன்கு உறுஞ்சி கொள்ளும். சீக்கிரம் காய்ந்து விடும். நாப்பி துணி கட்டி படுக்க வைக்கும் பொது உபயோகித்து கொள்ளலாம்.
 • பக்கெட்,mug : குளிக்க ஒன்று, அழுக்கான நாப்பியை நனைத்து வைக்க ஒன்று என 2 பக்கெட் தேவைப்படும்.
 • பேபி சோப்பு, பவுடர், சோப்பு கேஸ், பவுடர் பாக்ஸ் with puff
 • துணி துவைக்க தேவையான சோப்பு: இந்தியாவில் இருப்பவர்கள் காதி சோப்பு அல்லது சன் லிடே வெள்ளை நிற சோப்பு வாங்கி உபயோகிக்கலாம்.
 • பேபி பெட்/மெத்தை: தேவையான சைஸ் மற்றும் thickness பார்த்து வாங்கி கொள்ளுங்கள். Cradle உபயோகிக்க போகிறீர்களா அல்லது playpen உபயோகிக்க போகிறீர்கள அல்லது பாயின் மேல் போட பெட் தேவையா என்பதை கருத்தில் கொண்டு வாங்குங்கள்.
 • பேபி காட்/playpen: கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பது இல்லை. அனால் தனியாக இருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளகூடிய playpen வாங்கினால் அதையே குழந்தை பிறந்தது முதல் படுக்கையாகவும் உபயோகித்து கொள்ளலாம். இது குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை உபயோகப்படும். குழந்தையை இதில் விட்டு சென்று பயமில்லாமல் வேலைகளை பார்க்கலாம்.
 • கொசு வலை/கொசு குடை: நீங்கள் இருக்கும் இடத்தில கொசு அதிகமாக இருக்கும் என்றால் இது கண்டிப்பாக தேவை படும். Cradle/தொட்டில்/பெட் எது உபயோகித்தாலும் அதுக்கு தகுந்தாற்போல் வாங்கி கொள்ளுங்கள். காட்டன் அல்லது synthetic மடீரியல்இல் கிடைக்கும். Cradle மற்றும் தொட்டிலுக்கு ஜிப் அல்லது velcro வைத்து கிடைக்கும். குடை போன்ற நெட் வாங்கும் போது லாக் உள்ளதாக பார்த்து வாங்குங்கள்.
 • தொட்டில்: இரண்டு தேவைப்படும். நல்ல காட்டன் துணி வாங்கி தேவையான நீளத்தில் தைத்து கொள்ளுங்கள். வெள்ளை அல்லது கலர் துணி உபயோகிக்கலாம். சில குழந்தைகள் வெள்ளை தொட்டிலில் சரியாக தூங்காது . அவ்வாறான குழந்தைகளுக்கு கலர் துணியில் தொட்டில் தேவைப்படும்.
 • Receiving blanket: ஒன்று போதும். இது குழந்தையை இரவில் ககதகதப்பாக அணைத்தாற்போல் படுக்க வைக்க உபயோகமாக இருக்கும். மற்ற நேரங்களில் நாம் குழந்ந்தையை கையில் வைத்துகொள்ளும் போதும் உபயோகிக்கலாம். நாம் உடம்பு சூடு குழந்தைக்கு போகாது. வெளியில் குழந்தையை எடுத்து செல்லும் போதும் உபயோக படும். கீழே படுக்க வைக்கும் போது படுக்கையாக உபயோகிக்கலாம்.
 • Hood towel: இதுவும் ஒன்று போதும். கிபிட் ஆகா நிறைய வரும் ;) . இது குழந்தையை வெளியில் எடுத்து செல்லும் பொது உபயோகப்படும். குளித்தபின் உடம்பு துடைக்கவும் உபயோகிக்கலாம்.
 • வெள்ளை காட்டன் towel: ஆறு. இது குழந்தையை பகலில் போர்த்தி வைக்கவும் குளித்தபின் துடைக்கவும் உபயோகிக்கலாம்.
 • Hand towel: குழந்தை வாயில் இருந்து வரும் தயிரை துடைக்க மற்றும் குழந்தைக்கு towel பாத் கொடுக்க தேவைப்படும்.
 • பாட்டில், பாட்டில் brush, டீட்: வினிங்(weaning) பாட்டில் என்று சொல்லப்படும் ஸ்பூன் வைத்த பாட்டில் வாங்கி கொண்டு அதற்கு பொருந்தும் nipple(teat) வாங்கி கொள்ளலாம். சில brand weaning பாட்டிலுக்கு nipple பொறுத்த முடியாது. எனவே பார்த்து வாங்குங்கள். நான் pigeon brand பாட்டில் உபயோகித்தேன். இந்தியாவில் கிடைக்கும்.
 • பேபி comb செட்: brush போன்றதும், சாதா சீப்பு போன்ன்றதும்மாக ஒரு செட் ஆகா கிடைக்கும்.
 • Nail cutter, nail scissor செட்: nail scissor முதல் சில மாதங்களுக்கு உபயோகப்படும். பின்னர் உபயோகிக்க nail cutter தேவைப்படும். nail scissor உபயோகிக்க பாயமாக இருந்தால் நம் பல்லால் நகத்தை கொரித்தும் விடலாம்.
 • பேபி bag: குழந்தையை வெளியில் எடுத்து போகும் போது தேவைபடும்.
 • பஞ்சு: குழந்தையின் முதல் மாதத்தில் குழந்ந்தை அடிக்கடி மோசன் போகும். ஒவ்வொரு முறையும் கழுவினால் புண் ஆகிவிடும். என்னவே பஞ்சை தண்ணீரில் நனைத்து ஒற்றி எடுப்பது நல்லது.
 • Ear buds: குழந்தைகளுக்கான நல்ல ear buds பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
 • பேபி wipes/tissue papers: வெளியில் குழந்தையை எடுத்து செல்லும் போது உபயோகப்படும்.
 • Flask: 250-500 ml கொள்ளளவு கொண்டது போதும்.
 • பேபி பாத் tub: தேவையெனில் வாங்கி கொள்ளவும்.
 • கார் சீட்: தேவையெனில் வாங்கி கொள்ளவும்.
 • Pram/புஷ்சைர்/பேபி கேரியர் : தேவையெனில் வாங்கி கொள்ளவும். குழந்தையை படுக்க வைக்க கூடியதாக வாங்கி கொள்ளவும்.
 • பேபி rocking chair: தேவையெனில் வாங்கி கொள்ளவும்.
 • பழைய காட்டன் சேலை/வேஷ்டி : முன்று,நான்கு. குழந்தையை படுக்க வைக்க மிருதுவாக இருக்கும். மெத்தையின் மேல் போட உபயோகப்படும்.
இந்த லிஸ்டில் எதுவும் விடுபட்டு இருந்தால் தெரிவிக்கவும் தோழிகளே. சேர்த்து விடுகிறேன் :)

Saturday, January 23, 2010

பிரசவத்துக்கு மனதை தயார்படுத்துதல்

முக்கால் கிணற்றை தாண்டி விட்டீர்கள். நிறைய பேர் உங்களிடம் அவர்கள் பிரசவ அனுபவத்தை சொல்லி இருப்பார்கள். அவற்றில் சிலர் சொன்னதை கேட்டு உங்களுக்கு பிரசவ நாளை பற்றிய பயம் அதிகரித்து இருக்கலாம். சுக பிரசவத்தை விரும்புபவர்கள் முதலில் அவர்கள் மனதை அதற்க்கு தயார் படுத்திகொள்வது மிக மிக அவசியமாகும். நான் என்னை எப்படி தயார் படுத்தினேன் என்று இங்கு சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

பிரசவம் வலி மிகுந்து தான் என்பதை முதலில் ஏற்றுகொள்ள வேண்டும். ஆம். அது வலி மிகுந்த அனுபவம் தான். அனால் எவ்வளவு நேர வலி? சில ம்மணி நேரம் அல்லது ஓர் நாள் அல்லது இரண்டு நாள். வெகு சிலருக்கு ம்மட்டும் நச்சு வலி என சொல்லப்படும் வலி இருந்தால் இரண்டு நாட்களுக்கு மேல் வலி இருக்கும். அனால் பெரும்பான்மையோருக்கு 8-10 மணி நேரத்தில் பிரசவம் முடிந்து விடும். என்னை போன்று சில அதிர்ஷ்தசாலிகளுக்கு[;) ] 3-4 ம்மணி நேரத்தில் முடிவதுண்டு. எப்படி இருப்பினும் முதல் பாதி வலி சுலபமாக பொறுத்துக்கொள்ள முடியும் அளவுக்கு தான் இருக்கும்.மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை விட சற்று அதிகம். குழந்தை பிறந்த பின் வலி மாயமாய் காணாமல் போய் விடும். சரி, அந்த கதையை எல்லாம் விடுங்க. இப்பொழுது நான் சொல்வதை கற்பனை பண்ணிகோங்க.

ஒருவர் ஒரு பைக்கில் வேகமா போறாங்க . எதிர்பாராத விதம்மாக ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். கை, கால், இடுப்பு, முகம், தலைன்னு ஒரு இடம் விடாமல் பயங்கர அடி. அப்பொழுது என்னதான் வலி நிவாரணி கொடுத்தாலும் முழுமையான வலி நிவாரணம் கிடைக்காது. இத்தனை வலி சுத்தமாக சரி ஆகா எவளோ நாள், மாதம், வருஷம் ஆகும்னு தெரியாது. வலியில் இருந்து தப்பிக்க வழி ஏதும் கிடையாது. அதை எல்லாம் தாங்கி பொழச்சு வரவங்க எத்தனை பேர் இருக்காங்க!. அதை எல்லாம் விடவா பிரசவம் கடினமாக இருக்க போகுது?

அது போல பிரசவத்தை ஒரு விபத்து என்று நினைச்சுகோங்க. அனால் இதில் வலி ஒரு குறுப்பிட்ட பகுதியில் மட்டும் தான். அதுவும் மீறி போனால் 2-3 நாட்கள் தான். அப்படியும்ம் வலி தாங்க முடியாதுங்கரவங்களுக்கு இப்பொழுது பல வலி நிவாரணிகள் உள்ளன.அதுக்கு இது எவ்ளவோ தேவலைன்னு தோணுது இல்லீங்களா???!!! ஆமாங்க, எந்த வலியும் நமக்கு வரும் போது கஷ்டமாக தான் இருக்கும். அனால் மனது வைத்தால் கண்டிப்பாக தாங்கிக்கொள்ள முடியும். என்ன சொல்றீங்க?.

எனவே பிரசவம் பத்தின பயத்தை விட்டு தள்ளுங்க. பிரசவம் அப்படி தாங்க முடியாத வலினா எப்படி பலரும் இரண்டாம் குழந்தை வேணும்னு பெற்றுகொள்வங்க?. பயப்படாம மன தைரியத்துடன் மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, ஆண்டவன் கிருபையும் இருந்தால் சுக பிரசவம் சுலபமாக சுகமாக அமையும். இதில் நாம் கொடுக்கும் ஒத்துழைப்பு மிக முக்கியம். பிரசவ நேரத்தில் என்னால வலியை தாங்க முடியாது என்கிற மனநிலையோட போனால் மருத்துவர் முயற்சித்தாலும் சுக பிரசவம் அமைவது கஷ்டம். 'என்னால முடியலைன்னு' சொல்ல மாட்டேன்னு முடிவு பண்ணிட்டு போங்க. எல்லாம் நல்லபடியாக முடியும்னு positive மனநிலையோட இருங்க. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். என்ன,பிரசவம்ன்கர விபத்த எதிர்நோக்க தயார் ஆகிடிங்க தானே?. All the best.

Sunday, January 17, 2010

வளைகாப்பு / பூ சூட்டல்

ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimesterஇல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது.

குழந்தை
உருவான ஏழாவது மாதத்தில் வளைகாப்பு/பூ சூட்டல் விழா தென் இந்தியர்களால் கொண்டாடபடுகிறது. அப்பொழுது தாயிற்கு கை நிறைய கண்ணாடி வளையல் இட்டு, வாசனை பூக்கள் சூடியும் மகிழ்வர். அவ்வாறு அணிவிக்கப்பட்டு வளையல்கள் குழந்தை பிறப்பு வரை அணியுமாறு அறிவுறுத்துவார். அதற்க்கு அறிவியல்ரீதியான காரணம் உண்டு. தாயின் கையில் உள்ள கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி குழந்தை பிறப்பு வரை கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் உலா வரலாமே தோழிகளே!!!

Saturday, January 16, 2010

கிரகணத்தின் போது கர்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?

சூரிய கிரகணத்தின் போது கர்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களில் பலருக்கு இருக்கும். கிரகானதுக்கும் குறையுள்ள குழந்தை பிறபதர்க்கும் சம்பந்தம் உள்ளதாக சிலர் நம்புகிறார்கள். அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று எனக்கு தெரியாது. அனால் எனக்கு பெரியவர்களால் சொல்லப்பட்டது கீழே :
 • உண்மையை சொல்ல போனால் எதுவும் செய்யாமல் இருப்பதே உத்தமம். பேசாம படுத்து தூங்கிடுங்க.
 • முக்கியமாக சூரிய கதிர்கள் உங்கள் மேல் படாதவாறு பார்த்து கொள்ளுங்கள். கதவு ஜன்னல்களுக்கு திரை இட்டு கொள்வது நல்லது.
 • கிரகண நேரத்தில் உணவு உண்ணுவது தவிர்க்க படனும். கிரகணம் முடிந்ததும் குளித்த பின் உணவு உட்கொள்ளலாம்.


நீங்கள் வசிக்கும் நாட்டில் கிரகணம் தெரிந்தால் மட்டுமே இதை செய்யணும். ஏதோ நாட்டில் கிரகணம் தெரிவதற்கு நீங்கள் பயம் கொள்ள வேண்டாம்.