கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?
குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அது அடிவயற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் inferior vena cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior vena cava பதங்களில் இருந்து இரத்தைத்தை மேல எடுத்து செல்லும். இப்போது அழுத்தினால் அது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. எனவே இரத்தம் காலில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது water retention அதிகரிக்கும். அதன் காரணமாகவே வீக்கம் ஏற்படுகிறது.
இந்த கால் வீக்கம் காலை நேரங்களில் குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். வெயில் காலங்களில் வீக்கம் அதிகரிக்கும். சிலருக்கு கை வீக்கம் கூட ஏற்படும்.
எப்படி சமாளிப்பது:
- வீக்கம் அதிகமாக இருப்பின் சற்று பெரிதாக செருப்புகள் வாங்கி உபயோகியுங்கள்
- முதிந்தவரை வலது பக்கம் படுக்கவும். இது inferior vena cava மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும்.
- கால்களை உயர்த்தி வைக்கவும்
- நிறைய தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 2- 21/2 லிட்டர் குடியுங்கள்
- உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்
- வாக்கிங் அல்லது ஸ்விம்மிங் தொடர்ந்து செய்வது நல்லது
- கால்களை கீழிருந்து மேலாக நீவி விடலாம்
- பார்லி காஞ்சி, வெந்தய காஞ்சி பருகலாம்
- வீக்கம் உள்ள இடத்தில பச்சை முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டாலும் வீக்கம் குறையும்.
- ஹோமாபதில் இதற்கு மருந்து உண்டு.
எப்பொழுது வீக்கம் கவலைப்பட வைக்கும்?
திடீர் என கை, கால், முகாம் வீங்கினாலோ அல்லது இந்த பாகங்களில் வீக்கம் அதிகமா இருந்தாலோ அது pre-eclampsia வாக இருக்கு வாய்ப்பு உள்ளது. pre-eclampsia என்பது placenta(கொடி) சரியாக வேலை செய்யாத போது ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
எப்பொழுது சரி ஆகும்?
குழந்தை பிறந்த 2-3 வாரங்களில் முற்றிலும் வீக்கம் வாங்கி விடும். எனவே கவலை பட வேண்டாம் :)
No comments:
Post a Comment