Monday, January 26, 2009

Week 13(பதிமுன்றவது வாரம்)

இந்த வார முடிவில் குழந்தை ஒரு முழுமையான உருவை பெற்றிருக்கும் என்றாலும் அது மிக சிறிய உருவமாக தான் இருக்கும். இனி முதல் எலும்புகள் நல்ல வளர்ச்சியடையும் காலகட்டம் . தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் 6cm, முழு நீளம் சுமார் 7.5cm இருக்கும். எடை சுமார் 30gms இருக்கும்.

குழந்தையின் எழும்பு வளர்ச்சிக்கு உதவிட தாய் கால்சியம் நிரந்த உணவுகள்(பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்) மற்றும் calcium supplements சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். குழந்தைக்கு தேவையான கால்சியம் உணவில் மற்றும் மாத்திரையில் கிடைக்கவில்லை என்றால் தாயின் எலும்பில் இருந்து கால்சியம் குழந்தை எடுத்துக்கொள்ளும். இது பின்னாளில் தாய்க்கு எழும்பு தேய்தல், முட்டி வலி போன்றவையில் கொண்டு சேர்க்கும். எனவே கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் போதிய அளவு கால்சியம் உள்ள உணவே மற்றும் supplements எடுத்து கொள்வது மிக முக்கியமாகும்.

Sunday, January 25, 2009

Week 12(பனிரெண்டாவது வாரம்)

இப்பொழுது கருவின் முகம், கை,கால்,விரல்கள் ஆகியவை நல்ல வளர்ச்சியை பெற்று பார்ப்பதற்கு மனித உருவம் போல தெரியும். எனவே இப்பொழுது முதல் நாம் கருவை குழந்தை என்று அழைக்க போகிறோம்!!! :) குழந்தையின் இருதயம் நிமிடத்துக்கு 110-160 முறை துடிக்கும். குழந்தை விரலை சப்புவது, கை,கால்களை நன்றாக ஆடுவது, aminotic fluid-யை முழுங்குவது போன்றவைகளை செய்யும். குழந்தை இந்த வார முடிவில் தலை முதல் பிட்டம் வரையான நீளம் 5cm-உம், முழு நீளம் 6.5 cm நீளம் இருக்கும். எடை சுமார் 18-20gm இருக்கும்.

இப்பொழுது உங்களுக்கு மசக்கை(காலை வாந்தி) குறைந்து இருக்கும். சோம்பல் இன்னும் இருக்கலாம். இனி வரும் மருத்துவர் சந்திப்பில் அவருடன் ஆலோசித்து வாக்கிங், ஸ்விம்மிங், pregnancy யோகா போன்ற ஏதேனும் ஒன்றில் ஈடுபடலாம். எனினும் நீண்ட நேரம் நிற்க,நடக்க நேரிட்டால் 2 மணிநேரங்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுப்பது அவசியம் ஏனெனில் நீண்ட நேரம் நிற்கும், நடக்கும் பொழுது கருப்பைக்கு இரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். மிதமான உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும். எக்காரணம் கொண்டும் முச்சிரைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தலை சுற்றல் இருப்பின் உடனடியாக ஓய்வெடுங்கள்.

Week 11(பதினோராவது வாரம்)

இந்த வாரம் கருவின் கழுத்து, தலை நீண்டு வளரும். இதயம் உடலில் உள்ள முக்கியமான உள் உறுப்புகளுக்கு எல்லாம் இரத்தத்தை பம்ப் செய்ய ஆரம்பித்திருக்கும். வெளி பாலுருப்பும் அதோனோடு தொடர்புடைய உள் உறுப்பும்(பெண் எனில் ovary;ஆண் எனில் testicles) இருக்கும். 32 நிரந்திர பல் மொட்டுகள்(tooth buds) உருவாகி இருக்கும். இந்த வார முடிவில் கருவின் தலை முதல் பிட்டம்(crown to rump) வரையிலான நீளம் 4cm ஆகா இருக்கு. முழு நீளம் சுமார் 5.5cm ஆகா இருக்கும். எடை சுமார் 10gm இருக்கும்.

கர்ப்ப காலத்தில் hormonal changes-இனால் உங்களுக்கு mood swings அதிகமாக இருக்கலாம். காரணமே இல்லாமல் திடீர் என கோபம், சோகம், அழுகை, பயம், சந்தோசம் போன்ற உணர்வுகள் உங்களை ஆட்சிசெய்யலாம். எனவே உங்களுடைய குடும்பத்தாரிடம் இதை விளக்கி கூறி உங்களை புரிந்து நடந்து கொள்வது விரும்பத்தக்கதாகும்.

11 வாரங்கள் ஆகி இருந்தாலும் இன்னும் உங்களுக்கு வயிறு பெரிதாக தெரியாது. எனினும் உங்கள் இடுப்பு, மார்பகங்கள் பெரிதாகி காணப்படும். இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து உங்கள் கர்ப்பத்தை நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வது நலம். ஏனெனில் முதல் 12 வாரங்களில் கருச்சிதைவு(miscarriage) ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Thursday, January 22, 2009

Week 10 (பத்தாவது வாரம்)

கருவின் காதுகள் நன்கு வளர ஆரம்பித்திருக்கும். விரல்கள் வளர ஆரம்பித்திருந்தாலும் விரல்களுக்கு நடுவில் மெல்லிய தோலினால் ஒன்றாக சேர்க்கப்பட்டு இருக்கும். தலை இன்னும் பெரிதாகவே காணப்படும். இப்பொழுது கருவின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 3cm இருக்கும். முழு நீளம் சுமார் 4.5 cm இருக்கும். எடை சுமார் 5gm இருக்கும்.

கருவின் வளர்ச்சிக்கும், உங்களுடைய உடல் நிலையை பாதுகாக்கவும் iron,calcium supplements எடுத்துக்கொள்ள அறிவுறுத்தபடுவீர்கள். இவற்றை கர்ப்பகாலம் முழுவதும் + குழந்தை பிறந்து 1 வருடம்(அல்லது தாய்பால் கொடுக்கும் வரை) வாரம் எடுத்துகொள்வது நலம்.

இப்பொழுது உங்களுடைய கருப்பைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுவதால் வெள்ளை ஒழுக்கு போன்ற ஒழுக்கு சற்று அதிகமாக இருக்கலாம். அது வாடையாகவோ, மஞ்சள் நிறமாகவோ, அரிப்பு மிகுந்தோ அல்லது மிக அதிகமான ஒழுக்க்காகவோ இல்லாமல் இருக்கும் வரை கவலை கொள்ள தேவை இல்லை.

week 9( ஒன்பதாவது வாரம்)

இந்த வார முடிவில் கருவின் கை, கால்கள் நீது வளர்ந்து காணப்படும். கரு நகரவும் ஆரம்பித்திருக்கும் எனினும் உங்களால் அதை உணர முடியாது. ஸ்கேன்-இல் பார்த்தல் வாய்,முக்கு போன்றவை நன்றாக தெரியும். கரு இப்பொழுது சுமார் 22-30mm நீளம் இருக்கும். இந்த நீள கணக்கு பொதுவானதாகினும் உங்கள் கருவின் நீளம் சிறுது முன் பின் இருந்தாலும் தவறில்லை. கரு மிகவும் வளர்ச்சி குறைந்து காணப்பட்டால்(small for date) அதை பற்றி மருத்துவர் உங்களுடன் கலந்தாலோசிப்பார்.

உங்கள் கருவின் வளர்ச்சிக்கு சரிவிகித உணவு மிக முக்கியமாகும். எனவே உணவில் காய்கறிகள், பழங்கள்,கீரைகள்,முழு தானியங்கள்,பருப்பு வகைகள்,மாமிசங்கள், மீன் வகைகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். மீனில் இருந்து கிடைக்கும் ஒமேக 3 கருவிருக்கு மிக நல்லது. நீங்கள் சைவமானால் மீன் மாத்திரயை(fish oil capsule) எடுக்க முயற்சிக்கலாம். சிலருக்கு மீன் மாத்திரை பகலில் சாப்பிடும் பொழுது குமட்டல் அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படின் மாத்திரயை இரவில் சாப்பிட்டு பார்க்கலாம். அதன் மூலம் பகலில் குமட்டல் குறையும். கர்ப்பகாலத்தில் urinary tract infection ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே garbbakaalam முழுவதும் தினமும் இரண்டரை லிட்டர் நீர் பருகுவது அவசியமாகும். அவ்வளவு அதிகமாக தணீர் பருக முடியாதவர்கள் நீர் மோர் பருகலாம். பழ சாறு எனில் சர்க்கரை உபயோகிக்காமல் நிறைய நீர் சேர்த்து பருகலாம்.

Week 8(எட்டாவது வாரம்)

இந்த வாரம் கருவின் கண்,காதுகள் நல்ல வளர்ச்சியடைந்து காணப்படும். கண்களின் மேல் ஒரு மெல்லிய தோல் மூடி இருக்கும். இத தோல் நாளடைவில் பிரிந்து கண் இமைகளாக வளர்ச்சிபெறும். இருதயம் இப்பொழுது ஒரே சீராக அடிக்கும். கருவின் நீளம் சுமார் 15 mm இருக்கும்.

உங்களுக்கு இன்னும் காலை வாந்தி நீடித்தால் travel band வாங்கி உபயோகித்து பார்க்கலாம். அது 24 மணி நேரத்துக்கும் நல்ல மற்றதை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. Ginger biscuit அல்லது plain crackers காலை எழுந்தவுடன் சாப்பிட்டால் காலை வாந்தி குறையலாம். முடிந்தவரை முதல் 3 மாதங்களுக்கு மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நலம். எனவே வாந்தியை நிறுத்த தரப்படும் மருந்துகளையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எப்படியோ 8 வாரங்களை ஓட்டி விட்டீர்கள். இன்னும் சில வாரங்களில்(3 மாத முடிவில்) அநேகர்களுக்கு காலை வாந்தி பிரச்சினை முடிவுக்கு வரும். எனவே மனம் தளராதீர்கள்!!!

Week 7(ஏழாவது வாரம்)

ஏழாவது வாரம் முதல் பத்தாவது வாரம் வரை கருவின் வளர்ச்சியில் மிக முக்கிய கட்டமாகும். இப்பொழுது கருவின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மூளை, முதுகெலும்பு மற்றும் குடல் நல்ல வளர்ச்சி அடைந்து இருக்கும். நுரையீரல் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். கை,கால்,முக்கு,உதடுகள் போன்றவை நன்றாக வளர ஆரம்பித்திருக்கும். இந்த வார முடிவில் கரு 12mm நீளம் இருக்கும்.

இப்பொழுது உங்கள் கர்ப்பம் உறுதியாகி இருக்கும். எனவே நல்ல உணவு பழக்கங்கள், நல்ல வாழ்க்கை முறையே கடைபிடிக்க ஆரம்பிப்பது கருவின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். முடிந்தவரை சிகரட் புகையை தவிர்க்கவும். நீங்கள் புகை பிடிக்காதவராயினும் புகை சூழ்ந்த இடங்களில்(passive smoking) இருப்பதும் நல்லதல்ல. கர்ப்ப காலத்தில் புகை பிடிப்பது குழந்தை வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முன் பிறப்பது(premature), மிக குறைந்த எடையுடன் பிறப்பது போன்றவைகளுக்கு முக்கிய காரங்கள் என கண்டறியபட்டுளது.

Tuesday, January 20, 2009

முதல் மருத்துவர் சந்திப்பு

இப்பொழுது உங்களுக்கு home pregnancy test மூலமாக நீங்கள் கர்ப்பமா இல்லையா என்று ஓரளவுக்கு தெரிந்து இருக்கும். அடுத்ததாக நீங்கள் மருத்துவரை காண appointment வாங்கி இருப்பீர்கள். இப்பொழுது அந்த முதல் முறை மருத்துவரை காணும் பொழுது என்ன கேள்விகள் கேட்கலாம், மருத்துவர் என்னென்ன பரிசோதனைகள் செய்வார் என்று பார்ப்போம். கீழ்க்கண்ட அனைத்து பரிசோதனைகளும் உங்களுக்கு செய்வார் என்று கொள்ள வேண்டாம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மருத்துவர் என்னென்ன பரிசோதனைகள் தேவை என்று முடிவு செய்வார்.

 • உங்களுடைய உயரம் மற்றும் உடல் எடை எடுக்கப்படும். இனி வரும் ஒவ்வொரு மருத்துவ சந்திப்பிலும் எடை பார்க்கப்படும்.
 • blood pressure(BP) இந்த முறையும், இனி வரும் ஒவ்வொரு முறையும் பார்க்கப்படும்.
 • சிறிநீர் பரிசோதனை(urine test) இந்த முறையும் இனி வரும் ஒவ்வொரு முறையும் செய்யப்படும். இது உங்களுக்கு கர்ப்ப காலத்தில் வரகூடிய சர்க்கரை வ்யாதியை கண்டுபிடிக்கவும், சிறுநீரில் protein இருப்பின் pre-eclampsia இருக்கிறதா என்று கண்டறிய மிக அவசியமான பரிசோதனை ஆகும்.
 • இரத்த பரிசோதனை(blood test): உங்களுக்கு இரத்த சோகை(அனிமியா),HIV, ஹெபடிடிஸ்-b, இரத்தத்தின் RH நிலை போன்றவற்றை கண்டறிய இரத்த பரிசோதனை செய்யப்படும்.
 • Internal examination:உங்களுடைய யோனிக்குழாயினுள் (vagina) இரு விரல்களை நுழைத்து மற்று கையே வயிற்றின் மேல் வைத்து கர்பப்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை பரிசோதிப்பதே internal examination எனப்படும்.
 • Transvagainal ultrasound(10 வாரங்களுக்குள் என்றால்) அல்லது ultrasound ஸ்கேன்(10 வாரங்களுக்கு மேல் என்றால்) செய்யப்படலாம்.
 • உங்களுக்கோ உங்களுடைய இரத்த பந்தாங்களுள் யாருக்கேனும் BP, diabetes, twins, asthma மற்றும் சில பரம்பரை நோய்கள் உள்ளனவா என்று கேட்க்கபடுவீர்கள்.
 • உங்களுக்கு இதற்க்கு முன் குழந்தைகள் உள்ளனவா, கருகலைப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா, கர்ப்பம் தரிக்க ஏதேனும் சிகிச்சை மேற்கொன்டீர்கள என கேட்பார்.
 • உங்களுடைய கடைசி மாதவிடாய் ஏற்பட்ட நாள் கேட்க்கப்பட்டு உங்கள் குழந்தை பிறப்பு தேதியய்(Due date) கணக்கிட்டு கூறுவர்.

Monday, January 19, 2009

மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி

கர்ப்ப காலத்தில் நாம் நமக்கு உகந்த மருத்துவரை தேர்ந்தெடுத்தாலே போதும்; பாதி கிணறை கடந்த மாதிரி உணர்வோம்!!! எனக்கே மருத்துவரை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மருத்துவரிடம் முழு திருப்தி இல்லை எனில் முதலிலேயே மருத்துவரை மாற்றிவிடுவது நலம்.

 • மருத்துவரை தேர்ந்தெடுப்பதுக்கு முன் நீங்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி எடுத்து செல்லுங்கள்.
 • உங்கள் கணவரை அல்லது பெற்றோரை உடன் அழைத்து செல்வது நலம்.
 • உங்களுடைய உறவினர்கள்/நண்பர்களிடம் அவர்கள் பார்த்து முழு திருப்தி கொண்ட மருத்துவர்களை பற்றி விசாரிக்கலாம்.
அவ்வாறு நீங்கள் தேந்தெடுத்த மருத்துவரை சந்தித்த பின் நீங்கள் சிலவற்றை உங்கள் மனதில் கொண்டு அவரிடமே மருத்துவத்தை தொடரலாமா என்று முடிவெடுக்கலாம். முடிவெடுக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
 • உங்கள் இருப்பிடத்துக்கும் மருத்துவமனைக்கும் உள்ள தூரம்
 • நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதிலை உங்கள் மருத்துவர் அளித்தாரா?
 • மருத்துவரின் அணுகுமுறை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் பிடித்திருந்ததா?
 • மருத்துவருக்கு எத்தனை வருட அனுபவம் உள்ளது. அவர் சிக்கலான கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பை கையாள்வதில் தேர்ந்தவர?
 • மருத்துவருடானான சந்திப்பு உங்களுக்கு மன மகிழ்ச்சியை முழு திருப்தியையும் கொடுத்ததா?
 • அவர் எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பார்?
 • அவர் விடுப்பில் சென்றால் யார் உங்களை கவனிப்பார்கள்?- அவர்களையும் பார்த்து பேச முடியுமா?
 • ரெகுலர் விசிட்கு நடுவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது?
 • மருத்துவரை பார்க்க எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது
 • மருத்துவமனையில் உள்ள வசதிகள்
 • எப்பொழுதும் மருத்துவரிடம் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்க தயங்காதீர்கள். அது எவ்வளவு அர்ப்பதனமானதாக இருப்பினும்தயக்கம்கொள்ள தேவை இல்லை. உங்களுடைய சந்தேகங்களை தீர்க்கவேண்டியது மருத்துவரின் கடமை!!!
 • மருத்துவ கட்டணம்
Saturday, January 17, 2009

Week 6 (ஆறாவது வாரம்)

இந்த வாரம் உங்கள் குழந்தையின் கண், காது இருக்க வேண்டிய இடங்களில் சிறு குழிகள் உருவாகும். இவையே பின்னாளில் கண், காதுகளாக உரு பெரும். கருவின் ஜீரண உறுப்புகள், வயிறு, வாய் உருவாக ஆரம்பம் ஆகும். இதயம் ஒரு புடைப்பு போல மார்பின் முன் காணப்படும். இரத்த குழாய்கள் உருவாக ஆரம்பித்து இரத்த ஓட்டமும் இருக்கும். இந்த வாரமும் உள் உறுப்புகள் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கும். கரு 4mm-6mm நீளம் இருக்கும். அதாவது ஒரு சிறிய கடுகின் அளவாக இருக்கும்.

10 வாரங்களுக்குள் உள்ள கர்ப்பத்தை பரிசோதிக்க transvagainal ultrasound உபயோகிக்கபடுகிறது. இது ectopic pregnancy, உதிரபோக்கிற்கான காரணம் கண்டறிய மிகவும் உதவும். இந்த பரிசோதனை அல்ட்ராசௌன்ட் கோலை யோனிக்குழாய் வழியாக உள் நுழைத்து செய்யப்படுகிறது. இது கேட்க பயமாக இருந்தாலும் வலி அதிகம் இருப்பது இல்லை. உள்பரிசோதனை(vaginal examination) அளவிற்க்கு கூட வலி ஏற்படுவது இல்லை.

Week 5 (ஐந்தாவது வாரம்)

இந்த வாரம் நீங்கள் சிறுநீர் பரிசோதனை செய்தால் கர்ப்பத்தை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது உங்களுக்கு கர்ப்பத்தின் அறிகுறிகளான மார்பகங்கள் சற்று பெரிதாகவும் காணப்படுவது,தொடும் போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, உடல் சோர்வு போன்றவை அதிகமாக இருக்கலாம். பசி அதிகரித்து காணப்படலாம். காலை வாந்தி(morning sickness) ஏற்படலாம்.

இந்த வாரம் குழந்தையின் இருதயம் நன்றாக துடிக்க ஆரம்பித்திருக்கும். அது நம்முடைய இதயத்துடிப்பை காட்டிலும் மிக வேகமாக(கிட்டத்தட்ட இரு மடங்கு) இருக்கும். மூளை, நரம்பு மண்டலம் உருவாக ஆரம்பித்திருக்கும். குழந்தை பன்னீர் குடத்தில்(aminotic sac) உள்ள நீரில்(aminotic fluid) மிதந்துகொண்டு இருக்கும். கை கால்களுக்கான இடத்தில் மொட்டுகள் போன்ற உருவாம் வர ஆரம்பிக்கும். இப்பொழுது குழந்தை 1.5 mm- 2.5mm நீளம் இருக்கும். அதாவது ஒரு அரிசியின் அளவில் இருக்கும்.

தாயின் உடம்பில் இருந்து ஊட்டச்சத்தை மற்றும் பிராணவாயுவையும் நச்சுக்கொடி(placenta) எடுத்து தொப்புள் கொடி(umblical cord) மூலம் குழந்தைக்கு கொண்டு செல்லும். இதற்காக நச்சுக்கொடி தொப்புள்கொடி மூலம் தொப்புளோடு இணைக்கப்படிருக்கும்.

உடல் சூடு: இப்பொழுது உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுவதால் உங்கள் உடல் சூடு அதிகரித்து காணப்படலாம்.

கருத்தரிப்பதற்கு 3 மாதங்கள் முன்பிலிருந்து folic acid supplement எடுப்பது நலம். கருத்தரித்த பின்பும் 3 மாதங்கள் வரை எடுப்பது குழந்தையின் நரம்பு மண்டலம் நல்ல வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும்.

week 4 (நான்காவது வாரம்)

மாதவிடாயை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களுக்கு இந்த வாரம் ஒரு ஆச்சிர்யம் காத்திருக்கிறது!!!. ஆம், உங்களுடைய மாதவிடாய் தவறி போகும் வாரம் இது. இந்த வார கடைசியில் கர்ப்ப பரிசோதனை(home pregnancy test) செய்து பார்க்கலாம். முடிவு சாதகமாக வரின் உடனடியாக மருத்துவரை பார்க்கவும். இல்லை எனின் நம்பிக்கையோடு காத்திருந்து அடுத்த வாரம் இன்னொரு முறை பரிசோதனை செய்யவும். இந்த வாரம் உங்களுக்கு கர்ப்பத்திற்கான முதல் அடையாளங்கள் தெரிய ஆரம்பிக்கலாம். சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கலாம்.

இந்த வாரம் குழந்தையிம் உள் உறுப்புகள் உருவாக ஆரம்பிக்கும். நச்சுக்கொடி, தொப்புள் கொடி உருவாகி இருக்கும்.

சிலருக்கு கரு கருப்பையின் சுவற்றுடன் ஒட்டிக்கொள்ளும் பொழுது implantation bleeding என்று சொல்லப்படும் மிக சிறிய அளவிலான இரத்த போக்கு முன்றாவது அல்லது நான்காவது வாரம் ஏற்படலாம். இதற்காக பயம் கொள்ள வேண்டியது இல்லையென்றாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து கரு நல்ல நிலையில் உள்ளதா என்று உறுதி செய்து கொள்வது நலம். சிலருக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டிய அதே சமயத்தில் சிறிய அளவில் உதிர போக்கு(spotting) ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் முடிந்த அளவு ஓய்வு எடுத்துகொள்ளவும். இதற்க்கு பல காரணங்கள் கூறப்படுவதால் மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது.

மருத்துவரை அணுகும் முன் கீழ்கண்டவற்றை கவனத்தில் கொண்டு உங்கள் மருத்துவரிடம் கூறவும்:
 • உதிறபோக்கின் நிறம்: இளம் சிகப்பு, சிகப்பு அல்லது பழுப்பு
 • உதிறபோக்கின் அளவு: sanitary napkin உபயோகித்து இருந்தால் எத்தனை உபயோகித்தீர் என்று கணக்கு வைக்கவும்.
 • வயிற்று வலி, குளிர், காய்ச்சல், தலை சுற்றல், வேறு ஏதேனும் வலி இருப்பின் அதையும் மருத்துவரிடம் கூறவும்.
இவை உங்களுக்கு பயம் ஏற்படுத்துபவைகளாக இருப்பினும் இவ்வாறு ஏற்படும் அனைவருக்கும் கரு கலைதலோ, குழந்தைக்கு கெடுதலோ ஏற்படுவது இல்லை. எனவே பயப்படுவதை விட்டு விட்டு விரைவாக மருத்துவரை அணுகவும்.
கர்ப்ப காலத்தில் எந்த கட்டத்தில் உதிரபோக்கு இருப்பினும், அது எவ்வளவு குறைவாக இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

என் அனுபவம் : எனக்கும் முதல் இரண்டு மாதம் மாதவிடாய் ஏற்படவேண்டிய காலத்தில் சிறிய அளவின் spotting இருந்தது. எனினும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தேன். நான் முதலில் அந்த spotting-ஐ மாதவிடாய் என்று எண்ணி 2 மாதங்கள் விட்டு விட்டேன். இரண்டாம் மாதமும் உதிர போக்கு மிக சிறிய அளவில் இருந்ததால் மாதவிடாய் கோளாறு என்று எண்ணி மருத்துவரை அணுகிய பொழுதுதான் நான் கர்ப்பம் அடைந்துள்ளது தெரிய வந்தது!!!


Friday, January 16, 2009

Week 3(மூன்றாவது வாரம்)

இந்த வாரம் தான் கருத்தரிப்பு நிகழும் வாரம். பெண்ணின் சினை பையில் இருந்து வெளிவந்த கருமுட்டை ஒன்று கருக்குழாயின் வெளி முனையில் ஆண் உயிரணுவுடன் சேர்ந்து சினையாகிறது . சினையான முட்டை 4-7 நாட்கள் பயணத்துக்கு பிறகு கருக்குழாயில் இருந்து கருப்பைக்கு சேரும். இந்த வாரத்தின் கடைசியில் கருப்பையின் சுவற்றுடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அதே சமயம் நச்சுகொடியும்( placenta) உருவாக ஆரம்பிக்கிறது. இப்பொழுது blastocyst என்று அழைக்கப்படும் உங்கள் கரு 0.1-0.2mm விட்டம் கொண்டதாக இருக்கும்.

சினையுற்ற முட்டை கருக்குழாயில் இருந்து கருப்பைக்கு நகர்ந்து வரும் காலத்தில் பலவாக பிரிந்து மூன்று அடுக்கு கொண்ட உயிரணு பந்தாக(cluster of cells) மாறுகிறது. இதில் வெளி அடுக்கு மூளை, நரம்பு மண்டலம், முதுகெலும்பு, கண், காது, தோல் ஆகவும்; நடு அடுக்கு எலும்பு, இதயம், ரத்த குழாய்,தசை ஆகவும்; உள் அடுக்கு உள் உறுப்புகளாகவும் நாளடைவில் உருப்பெரும்.

Monday, January 5, 2009

Week 2(இரண்டாம் வாரம்)

Fertile days:

உங்களுக்கு 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி இருப்பின் கரு முட்டை சுழற்சியின் மத்திய நாட்களில் வெளி வந்து(ovulate) நல்ல வளம்முடன் கரு உருவாக சிறந்த வாய்புள்ளதாக(Fertile days) இருக்கும். எனவே சுழற்சியின் 12-16 வரையான நாட்கள் கரு உருவாக பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கொள்ளலாம். எனவே இந்நாட்களை Fertile days என அழைப்பர். எனவே 10-20 வரையான நாட்கள் முயற்சிப்பது பலனுள்ளதாக இருக்கலாம்.

Week 1 (முதல் வாரம்)

40 வார கர்ப்ப காலத்தில் முதல் வாரம் என்பது உங்களுடைய கடைசி மாதவிடாயின் முதல் நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது. அதாவது கணக்கிற்காக இந்த வாரம் எடுத்துக்கொள்ள பட்டாலும் உண்மையில் கரு உருவாகி இருக்காது. இன்னும் 2 வாரங்களில் கரு முட்டை வளம் மிகுந்ததாகவும் கரு உருவாக நல்ல வாய்ப்பு உள்ளாதாகவும் இருக்கும்.

குழந்தைக்காக முயற்சி செய்பவர்கள் நல்ல ஆரோக்யமான உணவும், உடற் பயிற்சியும் மேற்கொள்வது நலம். போலிக் ஆசிட் (folic acid supplement) மாத்திரகளை குழந்தை உருவாவதற்கு 3 மாதம் முன்பு இருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துகொள்வது நலம்.

Saturday, January 3, 2009

Trimesters

கர்ப்ப காலம் மூன்றாக பிரிக்கப்பட்டு trimesters of pregnancy என்று சொல்லபடுகிறது.
 • முதல் trimester: 1-13 வாரங்கள் வரையான காலத்தை first trimester என்று அழைப்பர்.
 • இரண்டாம் trimester: 14- 26 வாரங்கள் வரையான காலத்தை செகண்ட் trimester என்று அழைப்பர்
 • மூன்றாம் trimester: 27 வாரங்கள் முதல் குழந்தை பிறப்பு வரை உள்ள காலகட்டத்தை third trimester என்று அழைப்பர்.
இனி நாம் கருவின் வளர்ச்சியை பற்றியும், கர்ப்பிணிக்கு ஏற்பட குடிய மாற்றங்களை பற்றியும் வருன் பதிப்புகளில் பார்க்கலாம்.

EDD காலண்டர் / Due date காலண்டர்


பெரிதுபடுத்தி பார்க்க மேலே உள்ள படத்தை அழுத்தவும்(click செய்யவும்).

due date-ஐ இவ்வாறெல்லாம் கணக்கிட சோம்பேறித்தனமாய் உள்ளதா?. இதோ உங்களுக்காக EDD(Estimated date of delivery) calendar. மேலே உள்ள calendar-இல் உங்களுடைய கடைசி மாதவிடாயின் முதல் நாளை நீல நிற பட்டையில் கண்டு பிடிக்கவும். அதற்க்கு கீழாக உள்ள ரோஸ் நிற பட்டையில் உள்ள நாளே உங்களுடைய EDD.

உதாரணமாக உங்களுடைய கடைசி மாதவிடாய் மே மாதம் 10-அம் நாள் என கொள்வோம். இப்பொழுது மே 10-அம் நாளை நீல நிற பட்டையில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்க்கு கீழ் இல்ல ரோஸ் நிற பட்டையில் உள்ள தேதியே உங்களுடைய EDD. அதாவது உங்களுடைய EDD february 14 ஆகும்.

Due date calculator

குழந்தை பிறப்பு நாளை கணக்கிட கீழ்க்கண்ட லிங்க்-இல் உள்ள Due date calculator-இல் உங்களுடைய கடைசி மாதவிடாய் ஏற்ப்பட்ட முதல் நாளை குறிப்பிடுக. பிறகு "calculate" பொத்தானை அழுத்திடுக.

Due date calculator:
http://www.mcw.edu/calculators/docid49976.தடம்

Due dateஐ கணக்கிடுதல்

குழந்தை பிறப்பை கணக்கிடுதல் (Due date calculation):

குழந்தை
பிறப்பு தேதியே கணக்கிட உங்களுடைய கடைசி மாதவிடாய் ஏற்ப்பட்ட முதல் நாளில் இருந்து 280 நாட்கள்(266+14 நாட்கள்) என கணக்கிட வேண்டும். அனைவருக்கும் கர்ப்பம் சரியாக 280 நாட்கள் நீடிப்பது இல்லை. சராசரி கர்ப்ப காலம் 40 வாரங்கள் என்றாலும் சாதரணமாக 38 இல் இருந்து 42 வாரங்கள் கர்ப்பம் நீடித்தாலும் தவறில்லை.

Friday, January 2, 2009

கர்ப்பத்தை உறுதிபடுத்துதல்

ஹோம் pregnancy டெஸ்டில் சாதகமான முடிவு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவர் உங்களுக்கு மறுபடியும் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்யலாம். அல்லது ரத்த பரிசோதனை செய்யலாம். இரண்டு மாதவிடாய்கள் தவறி இருந்தால் அவர் கர்ப்பத்தை உறுதி செய்ய உள் பரிசோதனை( internal examination) செய்வார். Home pregnancy test சரியான முறையில் செய்தால் மிக நம்பகமான முடிவுகளை தரும். அவை 97% பிழையற்ற முடிவுகள் தருவதாக சொல்லபடுகிறது. எனினும் ஒரு மருத்துவரை முடிந்தவரை சீக்கிரமாக சந்தித்து கர்ப்பத்தை உறுதி செய்வது விரும்பத்தக்கதாகும்.

Thursday, January 1, 2009

Home Pregnancy Test

வீட்டில் செய்யக்கூடிய கர்ப்ப சோதனை (home pregnancy test):

ஹோம் பிரக்னன்சி டெஸ்ட் செய்வதற்கான கிட் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும். அவற்றுள் சில மாதவிடாய் தவறிய முதல் நாள் அன்றே பரிட்சிட்டு பார்க்க ஏதுவானதாக இருக்கும். ஹோம் பிரக்னன்சி டெஸ்ட் சிறுநீரில் உள்ள HCG(human chorionic gonadotropin) என்னும் ஹோர்மோனில் அளவை கொண்டு நீங்கள் கர்ப்பம் தரித்து உள்ளிர்களா இல்லையா என்று கணக்கிடும். கரு உருவாகி 10-14 நாட்களில் HCG சிறுநீரில் வெளிப்பட துவங்கும்.

கீழ்க்கண்ட link-இல் பல்வேறு விதமான home pregnancy test kits-ஐ காணலாம்.
http://a1supplygroup.com/images/pregnancytest.jpg

சில வகை
home pregnancy test நேரடியாக சிறுநீரில் பிடிக்குமாறு அறிவுதப்பட்டு இருக்கும். சில வகைகளுக்கு சிறுநீரை ஒரு சுத்தமான கோப்பையில் பிடித்து அந்த கிட் உடன் வந்த dropper-இன் உதவயுடன் சில சொட்டு சிறுநீரை கிட்டில் உள்ள குழியான பகுதியில் விட வேண்டும். அதன் பிறகு கிட்டில் குறிபிட்டுள்ள நேரம் வரை காத்திருக்கவும். பிறகு test strip-இல் எத்தனை கோடுகள் உள்ளன என பார்க்கவும். இரண்டு கோடுகள் இருந்தால் கர்ப்பம் தரிதிருப்பதாக கொள்ளுக. இரண்டாவது கோடு அழுத்தமாக இல்லாமல் இருந்தால் சிறுநீரில் HCG அளவு குறைவாக இருக்கலாம். எனவே 2 நாட்கள் கழித்து திரும்பவும் ஒரு முறை பரிட்சித்து பார்க்கவும். ஒரு கோடு மட்டும் இருந்தால் கர்ப்பம் இல்லை. சந்தேகம் இருந்தால் சில நாட்கள் கழித்து திரும்பவும் ஒரு முறை பரிட்சித்து பார்க்கவும்.

காலையில் எடுக்கும் முதல் சிறுநீரில் HCG அளவு அதிகமாக இருப்பது வழக்கம். இருப்பினும் நீங்கள் எந்த நேரத்தில் எடுக்கும் சிறுநீரிலும் home pregnancy test செய்து பார்க்கலாம். மாதவிடாய் தவறி 1 அல்லது 2 வாரங்கள் கழித்து எடுக்கும் test மிக விரும்பத்தக்கது.
கர்ப்பத்திற்கான முதல் அடையாளங்கள்

கர்ப்பத்திற்கான முதல் அடையாளங்கள் :

இந்த அடையாளங்களில் உங்களுக்கு அனைத்தும் அல்லது சில தென்படலாம் . அல்லது எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கலம்.

1. மார்பகங்கள் மிருதுவாகவும் சற்று பெரிதாகவும் காணப்படும். தொடும் போது வலி இருக்கும். மார்பு காம்புகள் கருமை அடைந்து காணப்படலாம். ரத்த நாளங்கள் பிரசித்தமாக தெரியலாம்.

2. யோனிக்குழாய் கசிவு(vaginal discharge) அதிகரித்து காணப்படலாம்

3. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படலாம்

4. முதலில் பிடித்த சுவைகள் இப்பொழுது பிடிக்காமல் போகலாம். புளிப்பு போன்ற சில சுவைகளில் பிடித்தம் அதிகரிக்கலாம். வாயில் ஒரு விதமான உலோக சுவை இருக்கலாம்.

5. அடிவயற்றில் சிறிது வலி ஏற்படலாம்

6. சிலருக்கு கர்ப்பம் தரித்து இருந்தாலும் சிறிய அளவில் உதிர போக்கு காணப்படலாம்.

7. உடல் சோர்வு காணப்படலாம். தலை சுற்றல் இருக்கலாம். எப்பொழுதும் போல் இல்லாமல் அதிக உணர்ச்சிவசப்பட்டு காணப்படலாம்.

8. கர்ப்பம் தரித்த சில நாட்களிலேயே குமட்டல், அருவெறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படலாம். இவை பரவலாக காணப்பட்டாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி ஆகா இருந்தால் கற்ப காலம் முழுவதுமே இவை போன்ற கஷ்டங்கள் இல்லாமலே போகலாம்.

9. மாதவிடாய் தவறிப் போதல். இது கர்ப்பதிற்கு மிக பலமான அடையாளமாகும். ஆனால் மாதவிடாய் தவறி போக வேறு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக அதிக வேலை பளு, உடல் நலமின்மை, மனக்கவலை, அதீத ஆவலுடன் கர்ப்பத்தை எதிர்பார்த்து இருத்தல், வழக்கமாகவே ஒழுங்கில்லாத மாதவிடாய் போன்றவைகளால் மாதவிடாய் தவறி போகலாம்.

10. வீட்டில் செய்ய கூடிய கர்ப்ப சோதனையில்( home Pregnancy டெஸ்ட்) சாதகமான முடிவு காணப்பட்டால் அதை மிக மிக பலமான அடையாளமாக கொள்ளலாம்.

கரு உருவாவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

குழந்தை பெற முடிவு செய்தவர்கள் தங்களது கீழ்கண்டவற்றை கருத்தில் கொண்டால் நலம்.

 • உணவு முறை: காய் கறிகள், கீரைகள், பால் பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், முழு தானிய வகைகள் போன்றவைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளவும். முடிந்த வரை junk foods தவிர்க்கவும்.
 • உடற்பயிற்சி: நீச்சல், நடை பயிற்சி போன்ற சில சுலபமான உடற்பயிற்சிகளை கணவன் மனைவி இருவரும் நாள்தோறும் அரை மணி நேரம் மேற்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். குறிப்பாக பெண்கள் கால்களை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் நலம். அவ்வாறு செய்தல் கர்ப்ப காலத்தில் தாங்க வேண்டிய கூடுதல் எடையை கால்கள் தாங்க அதை தயார்ப்படுதுவதாக அமையும்.
 • உடல் எடை: உங்களுடைய உயரத்துக்கு குறைந்த எடையோ, மிகுந்த எடையோ இருந்தால் அதை சரி செய்ய முயலுங்கள். இவை இரண்டுமே கரு உருவாவதற்கான வாய்புகளை குறைப்பதாக அமையலாம். கர்ப்ப காலத்திலும் சிக்கல்கள் உருவாகலாம். உங்களுடைய சரியான உடல் எடையே அடைந்ததும் ஒரு மாதவிடாய் வரும் வரை காத்திருந்து பிறகு கர்ப்பம் அடைய முயல்வது நலம். எக்காரணம் கொண்டும் கர்ப்பம் என்று தெரிந்த பிறகு எடையே குறைக்கும் முயற்சியில் இறங்காதீர்கள்.
 • புகை, குடி : இருவரில் யாருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பினும் அதை விட்டுவிடுதல் நலம். முடியாவிட்டால் குறைத்து கொள்ளுங்கள். பெண்கள் குடி பழக்கம் இருப்பின் அதை நிறுத்தி கொள்வது குழந்தைக்கு நன்மை பயக்கும்.
 • கருத்தடை: கருத்தடை மருந்து உபயோகிப்பவர்கள் அதை நிறுத்திய பின்பு குறைந்தது ஒரு மாதம் காத்திருந்து ஒரு மாதவிடாய் வந்த பிறகு முயற்சிப்பது நலம். முடிந்தவர்கள் 3 மாதங்கள் வரை பொறுத்திருந்து பிறகு முயற்சிக்கலாம்.
 • மருந்துகள்: நீங்கள் ஏதேனும் மருந்துகள் தொடர்ச்சியாக எடுப்பவரானால் உங்கள் மருத்துவரை அணுகி அவை கர்ப்ப காலத்துக்கு பாதுகாப்பானதா என்று ஆலோசிக்கவும்.
 • வேலை சூழ்நிலை: உங்கள் வேலை ரசாயனம், ஈயம், X-ray போன்றவை சம்பதப்பட்டு இருப்பின் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும். தேவை இருப்பின் வேறு வேலைக்கு மாற முயற்சிக்கலாம்.
 • போலிக்ஆசிட்(வைட்டமின் B9) : கருத்தரிப்பதற்கு 3 மாதங்கள் முன்பிலிருந்துfolic acid supplement எடுப்பது நலம். கருத்தரித்த பின்பும் 3 மாதங்கள் வரை எடுப்பதுகுழந்தையின் நரம்பு மண்டலம் நல்ல வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும். folic acid கீரைகள், ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.
கருத்தரிக்கவில்லை என்றால் எத்தனை காலம் காத்திருந்து பின் மருத்துவரை அணுக வேண்டும்:
35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு வருடம் வரை முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாத முயற்சிக்கு பின் ஆலோசிப்பது நலம். இது பொது வரையறை என்றாலும் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முன்னதாகவே மருத்துவ ஆலோசனை பெறுவது தவறில்லை.