- உங்களுடைய உயரம் மற்றும் உடல் எடை எடுக்கப்படும். இனி வரும் ஒவ்வொரு மருத்துவ சந்திப்பிலும் எடை பார்க்கப்படும்.
- blood pressure(BP) இந்த முறையும், இனி வரும் ஒவ்வொரு முறையும் பார்க்கப்படும்.
- சிறிநீர் பரிசோதனை(urine test) இந்த முறையும் இனி வரும் ஒவ்வொரு முறையும் செய்யப்படும். இது உங்களுக்கு கர்ப்ப காலத்தில் வரகூடிய சர்க்கரை வ்யாதியை கண்டுபிடிக்கவும், சிறுநீரில் protein இருப்பின் pre-eclampsia இருக்கிறதா என்று கண்டறிய மிக அவசியமான பரிசோதனை ஆகும்.
- இரத்த பரிசோதனை(blood test): உங்களுக்கு இரத்த சோகை(அனிமியா),HIV, ஹெபடிடிஸ்-b, இரத்தத்தின் RH நிலை போன்றவற்றை கண்டறிய இரத்த பரிசோதனை செய்யப்படும்.
- Internal examination:உங்களுடைய யோனிக்குழாயினுள் (vagina) இரு விரல்களை நுழைத்து மற்று கையே வயிற்றின் மேல் வைத்து கர்பப்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை பரிசோதிப்பதே internal examination எனப்படும்.
- Transvagainal ultrasound(10 வாரங்களுக்குள் என்றால்) அல்லது ultrasound ஸ்கேன்(10 வாரங்களுக்கு மேல் என்றால்) செய்யப்படலாம்.
- உங்களுக்கோ உங்களுடைய இரத்த பந்தாங்களுள் யாருக்கேனும் BP, diabetes, twins, asthma மற்றும் சில பரம்பரை நோய்கள் உள்ளனவா என்று கேட்க்கபடுவீர்கள்.
- உங்களுக்கு இதற்க்கு முன் குழந்தைகள் உள்ளனவா, கருகலைப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா, கர்ப்பம் தரிக்க ஏதேனும் சிகிச்சை மேற்கொன்டீர்கள என கேட்பார்.
- உங்களுடைய கடைசி மாதவிடாய் ஏற்பட்ட நாள் கேட்க்கப்பட்டு உங்கள் குழந்தை பிறப்பு தேதியய்(Due date) கணக்கிட்டு கூறுவர்.
Tuesday, January 20, 2009
முதல் மருத்துவர் சந்திப்பு
இப்பொழுது உங்களுக்கு home pregnancy test மூலமாக நீங்கள் கர்ப்பமா இல்லையா என்று ஓரளவுக்கு தெரிந்து இருக்கும். அடுத்ததாக நீங்கள் மருத்துவரை காண appointment வாங்கி இருப்பீர்கள். இப்பொழுது அந்த முதல் முறை மருத்துவரை காணும் பொழுது என்ன கேள்விகள் கேட்கலாம், மருத்துவர் என்னென்ன பரிசோதனைகள் செய்வார் என்று பார்ப்போம். கீழ்க்கண்ட அனைத்து பரிசோதனைகளும் உங்களுக்கு செய்வார் என்று கொள்ள வேண்டாம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மருத்துவர் என்னென்ன பரிசோதனைகள் தேவை என்று முடிவு செய்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment