இந்த வாரம் நீங்கள் சிறுநீர் பரிசோதனை செய்தால் கர்ப்பத்தை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது உங்களுக்கு கர்ப்பத்தின் அறிகுறிகளான மார்பகங்கள் சற்று பெரிதாகவும் காணப்படுவது,தொடும் போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, உடல் சோர்வு போன்றவை அதிகமாக இருக்கலாம். பசி அதிகரித்து காணப்படலாம். காலை வாந்தி(morning sickness) ஏற்படலாம்.
இந்த வாரம் குழந்தையின் இருதயம் நன்றாக துடிக்க ஆரம்பித்திருக்கும். அது நம்முடைய இதயத்துடிப்பை காட்டிலும் மிக வேகமாக(கிட்டத்தட்ட இரு மடங்கு) இருக்கும். மூளை, நரம்பு மண்டலம் உருவாக ஆரம்பித்திருக்கும். குழந்தை பன்னீர் குடத்தில்(aminotic sac) உள்ள நீரில்(aminotic fluid) மிதந்துகொண்டு இருக்கும். கை கால்களுக்கான இடத்தில் மொட்டுகள் போன்ற உருவாம் வர ஆரம்பிக்கும். இப்பொழுது குழந்தை 1.5 mm- 2.5mm நீளம் இருக்கும். அதாவது ஒரு அரிசியின் அளவில் இருக்கும்.
தாயின் உடம்பில் இருந்து ஊட்டச்சத்தை மற்றும் பிராணவாயுவையும் நச்சுக்கொடி(placenta) எடுத்து தொப்புள் கொடி(umblical cord) மூலம் குழந்தைக்கு கொண்டு செல்லும். இதற்காக நச்சுக்கொடி தொப்புள்கொடி மூலம் தொப்புளோடு இணைக்கப்படிருக்கும்.
உடல் சூடு: இப்பொழுது உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுவதால் உங்கள் உடல் சூடு அதிகரித்து காணப்படலாம்.
கருத்தரிப்பதற்கு 3 மாதங்கள் முன்பிலிருந்து folic acid supplement எடுப்பது நலம். கருத்தரித்த பின்பும் 3 மாதங்கள் வரை எடுப்பது குழந்தையின் நரம்பு மண்டலம் நல்ல வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும்.
Saturday, January 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment