Monday, January 19, 2009

மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி

கர்ப்ப காலத்தில் நாம் நமக்கு உகந்த மருத்துவரை தேர்ந்தெடுத்தாலே போதும்; பாதி கிணறை கடந்த மாதிரி உணர்வோம்!!! எனக்கே மருத்துவரை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மருத்துவரிடம் முழு திருப்தி இல்லை எனில் முதலிலேயே மருத்துவரை மாற்றிவிடுவது நலம்.

  • மருத்துவரை தேர்ந்தெடுப்பதுக்கு முன் நீங்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி எடுத்து செல்லுங்கள்.
  • உங்கள் கணவரை அல்லது பெற்றோரை உடன் அழைத்து செல்வது நலம்.
  • உங்களுடைய உறவினர்கள்/நண்பர்களிடம் அவர்கள் பார்த்து முழு திருப்தி கொண்ட மருத்துவர்களை பற்றி விசாரிக்கலாம்.
அவ்வாறு நீங்கள் தேந்தெடுத்த மருத்துவரை சந்தித்த பின் நீங்கள் சிலவற்றை உங்கள் மனதில் கொண்டு அவரிடமே மருத்துவத்தை தொடரலாமா என்று முடிவெடுக்கலாம். முடிவெடுக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
  • உங்கள் இருப்பிடத்துக்கும் மருத்துவமனைக்கும் உள்ள தூரம்
  • நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதிலை உங்கள் மருத்துவர் அளித்தாரா?
  • மருத்துவரின் அணுகுமுறை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் பிடித்திருந்ததா?
  • மருத்துவருக்கு எத்தனை வருட அனுபவம் உள்ளது. அவர் சிக்கலான கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பை கையாள்வதில் தேர்ந்தவர?
  • மருத்துவருடானான சந்திப்பு உங்களுக்கு மன மகிழ்ச்சியை முழு திருப்தியையும் கொடுத்ததா?
  • அவர் எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பார்?
  • அவர் விடுப்பில் சென்றால் யார் உங்களை கவனிப்பார்கள்?- அவர்களையும் பார்த்து பேச முடியுமா?
  • ரெகுலர் விசிட்கு நடுவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது?
  • மருத்துவரை பார்க்க எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது
  • மருத்துவமனையில் உள்ள வசதிகள்
  • எப்பொழுதும் மருத்துவரிடம் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்க தயங்காதீர்கள். அது எவ்வளவு அர்ப்பதனமானதாக இருப்பினும்தயக்கம்கொள்ள தேவை இல்லை. உங்களுடைய சந்தேகங்களை தீர்க்கவேண்டியது மருத்துவரின் கடமை!!!
  • மருத்துவ கட்டணம்




No comments: