Friday, January 16, 2009

Week 3(மூன்றாவது வாரம்)

இந்த வாரம் தான் கருத்தரிப்பு நிகழும் வாரம். பெண்ணின் சினை பையில் இருந்து வெளிவந்த கருமுட்டை ஒன்று கருக்குழாயின் வெளி முனையில் ஆண் உயிரணுவுடன் சேர்ந்து சினையாகிறது . சினையான முட்டை 4-7 நாட்கள் பயணத்துக்கு பிறகு கருக்குழாயில் இருந்து கருப்பைக்கு சேரும். இந்த வாரத்தின் கடைசியில் கருப்பையின் சுவற்றுடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அதே சமயம் நச்சுகொடியும்( placenta) உருவாக ஆரம்பிக்கிறது. இப்பொழுது blastocyst என்று அழைக்கப்படும் உங்கள் கரு 0.1-0.2mm விட்டம் கொண்டதாக இருக்கும்.

சினையுற்ற முட்டை கருக்குழாயில் இருந்து கருப்பைக்கு நகர்ந்து வரும் காலத்தில் பலவாக பிரிந்து மூன்று அடுக்கு கொண்ட உயிரணு பந்தாக(cluster of cells) மாறுகிறது. இதில் வெளி அடுக்கு மூளை, நரம்பு மண்டலம், முதுகெலும்பு, கண், காது, தோல் ஆகவும்; நடு அடுக்கு எலும்பு, இதயம், ரத்த குழாய்,தசை ஆகவும்; உள் அடுக்கு உள் உறுப்புகளாகவும் நாளடைவில் உருப்பெரும்.

No comments: