Saturday, January 17, 2009

Week 6 (ஆறாவது வாரம்)

இந்த வாரம் உங்கள் குழந்தையின் கண், காது இருக்க வேண்டிய இடங்களில் சிறு குழிகள் உருவாகும். இவையே பின்னாளில் கண், காதுகளாக உரு பெரும். கருவின் ஜீரண உறுப்புகள், வயிறு, வாய் உருவாக ஆரம்பம் ஆகும். இதயம் ஒரு புடைப்பு போல மார்பின் முன் காணப்படும். இரத்த குழாய்கள் உருவாக ஆரம்பித்து இரத்த ஓட்டமும் இருக்கும். இந்த வாரமும் உள் உறுப்புகள் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கும். கரு 4mm-6mm நீளம் இருக்கும். அதாவது ஒரு சிறிய கடுகின் அளவாக இருக்கும்.

10 வாரங்களுக்குள் உள்ள கர்ப்பத்தை பரிசோதிக்க transvagainal ultrasound உபயோகிக்கபடுகிறது. இது ectopic pregnancy, உதிரபோக்கிற்கான காரணம் கண்டறிய மிகவும் உதவும். இந்த பரிசோதனை அல்ட்ராசௌன்ட் கோலை யோனிக்குழாய் வழியாக உள் நுழைத்து செய்யப்படுகிறது. இது கேட்க பயமாக இருந்தாலும் வலி அதிகம் இருப்பது இல்லை. உள்பரிசோதனை(vaginal examination) அளவிற்க்கு கூட வலி ஏற்படுவது இல்லை.

No comments: