Wednesday, September 16, 2009

இருபத்தியோராவது வாரம் (week 21 )

இது வரை கருவின் இரத்த அணுக்களை அதன் கல்லீரல் மற்றும் மண்ணீரல் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. இப்பொழுது அதனுடன் சேர்ந்து எலும்பு மஜ்ஜையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கும். கல்லீரல் இரத்த அணு உற்பத்தியை குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன் நிறுத்தி விடும். அதே போல மண்ணீரல் முப்பதாவது வாரத்துடன் உற்பத்தியை நிறுத்தி கொள்ளும். முன்றாவது trimester முடியும் தருவாயில் இரத்த அணு உற்பத்தியை எலும்பு மஜ்ஜைகை முழுமையாக செய்ய ஆரம்பிக்கும். குழந்தை பிரபிர்க்கு பின்னும் இரத்த அணு உற்பத்தி செய்வது எலும்பு மஜ்ஜையின் வேலை ஆகா இருக்கும். இப்பொழுது உங்கள் குழந்தையின் எடை சுமார் 375 grams இருக்கும் .

கற்ப கால நீரிழிவு (Gestational Diabetes)

நீரிழிவு என்பது ஒருவரின் pancreas(இது இரைப்பையை ஒட்டயுள்ள ஒரு சுரப்பி)
போதிய அளவு இன்சுலின் எனும் ஹார்மோன்ஐ
உருவாக்க முடியாமல் போகும் போது உருவாகும் ஒரு நிலையாகும்.

கர்ப்ப காலத்தில் 2% முதல் 13% பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியாதபோதிலும் சில காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று இது கற்ப காலத்தில் குழந்தையின் தேவைக்கும் சேர்த்து தாயின் உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் பொது ஏற்படும் ஒரு நிலையாகும்.மற்றொரு காரணமாக கூறபடுவது, ஈஸ்ட்ரோஜென், கோரிச்டோல் போன்ற ப்லசெண்டா உற்பத்திசெய்யும் ஹோர்மோன்கள் இன்சுலினை எதிர்க்க ஆரம்பிப்பதால் உடல் அதை ஈடு செய்ய அதிகமாக இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது. அது முடியாமல் போகும் போது நீரிழிவு ஏற்படுகிறது. இதே காரணத்தால் தான் குழந்தை பிறப்பிற்கு பின் ப்லசெண்டா வெளியில் வந்தவுடன் ஹார்மோன் உற்பத்தி நின்று விடுவதால் நீரிழிவு சரியாகி விடுவதாக சொல்லபடுகிறது. பொதுவாக கர்பத்தின் 20-24 வாரம்(mid-pregnancy) போல் ஆரம்பமாகும். எனவே 24முதல் 28 ஆவது வாரத்தில் உங்கள் மருத்துவர் இரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்.

கற்ப கால நீரிழிவு குழந்தை பிறப்பிற்கு பின் தானாக சரி ஆகிவிடும். எனினும் கற்ப காலத்தில் சர்கரையின் அளவு கட்டுபாட்டில் இல்லை எனில் அது குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.
  • அதிகபடியான சர்க்கரை குழந்தைக்கு போய் சேரும் என்பதால் குழந்தை எடை மிகுதியாக ஆகிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறானால் சுகப்ரசவம் கஷ்டமாகலாம்.
  • மேலும் சில குழந்தைகளுக்கு பிறந்த பின் hypoglycemia எனப்படும் சர்க்கரை அளவு குறைதல் மற்றும் காமாலை ஏற்படலாம்.
  • குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
என்ன பயமாக இருக்காதா? சில உணவு கட்டுப்பாடு மற்றும் மிதமான நடை பயிற்சி மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே பயம் கொள்ள வேண்டாம். அவ்வாறு சர்க்கரை அளவு கட்டுபாடுக்குள் வராவிடின் உங்கள் மருத்துவர் இன்சுலின் கு பரிந்துரைக்கலாம்.

No comments: