Thursday, January 1, 2009

கரு உருவாவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

குழந்தை பெற முடிவு செய்தவர்கள் தங்களது கீழ்கண்டவற்றை கருத்தில் கொண்டால் நலம்.

  • உணவு முறை: காய் கறிகள், கீரைகள், பால் பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், முழு தானிய வகைகள் போன்றவைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளவும். முடிந்த வரை junk foods தவிர்க்கவும்.
  • உடற்பயிற்சி: நீச்சல், நடை பயிற்சி போன்ற சில சுலபமான உடற்பயிற்சிகளை கணவன் மனைவி இருவரும் நாள்தோறும் அரை மணி நேரம் மேற்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். குறிப்பாக பெண்கள் கால்களை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் நலம். அவ்வாறு செய்தல் கர்ப்ப காலத்தில் தாங்க வேண்டிய கூடுதல் எடையை கால்கள் தாங்க அதை தயார்ப்படுதுவதாக அமையும்.
  • உடல் எடை: உங்களுடைய உயரத்துக்கு குறைந்த எடையோ, மிகுந்த எடையோ இருந்தால் அதை சரி செய்ய முயலுங்கள். இவை இரண்டுமே கரு உருவாவதற்கான வாய்புகளை குறைப்பதாக அமையலாம். கர்ப்ப காலத்திலும் சிக்கல்கள் உருவாகலாம். உங்களுடைய சரியான உடல் எடையே அடைந்ததும் ஒரு மாதவிடாய் வரும் வரை காத்திருந்து பிறகு கர்ப்பம் அடைய முயல்வது நலம். எக்காரணம் கொண்டும் கர்ப்பம் என்று தெரிந்த பிறகு எடையே குறைக்கும் முயற்சியில் இறங்காதீர்கள்.
  • புகை, குடி : இருவரில் யாருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பினும் அதை விட்டுவிடுதல் நலம். முடியாவிட்டால் குறைத்து கொள்ளுங்கள். பெண்கள் குடி பழக்கம் இருப்பின் அதை நிறுத்தி கொள்வது குழந்தைக்கு நன்மை பயக்கும்.
  • கருத்தடை: கருத்தடை மருந்து உபயோகிப்பவர்கள் அதை நிறுத்திய பின்பு குறைந்தது ஒரு மாதம் காத்திருந்து ஒரு மாதவிடாய் வந்த பிறகு முயற்சிப்பது நலம். முடிந்தவர்கள் 3 மாதங்கள் வரை பொறுத்திருந்து பிறகு முயற்சிக்கலாம்.
  • மருந்துகள்: நீங்கள் ஏதேனும் மருந்துகள் தொடர்ச்சியாக எடுப்பவரானால் உங்கள் மருத்துவரை அணுகி அவை கர்ப்ப காலத்துக்கு பாதுகாப்பானதா என்று ஆலோசிக்கவும்.
  • வேலை சூழ்நிலை: உங்கள் வேலை ரசாயனம், ஈயம், X-ray போன்றவை சம்பதப்பட்டு இருப்பின் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும். தேவை இருப்பின் வேறு வேலைக்கு மாற முயற்சிக்கலாம்.
  • போலிக்ஆசிட்(வைட்டமின் B9) : கருத்தரிப்பதற்கு 3 மாதங்கள் முன்பிலிருந்துfolic acid supplement எடுப்பது நலம். கருத்தரித்த பின்பும் 3 மாதங்கள் வரை எடுப்பதுகுழந்தையின் நரம்பு மண்டலம் நல்ல வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும். folic acid கீரைகள், ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.
கருத்தரிக்கவில்லை என்றால் எத்தனை காலம் காத்திருந்து பின் மருத்துவரை அணுக வேண்டும்:
35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு வருடம் வரை முயற்சித்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாத முயற்சிக்கு பின் ஆலோசிப்பது நலம். இது பொது வரையறை என்றாலும் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முன்னதாகவே மருத்துவ ஆலோசனை பெறுவது தவறில்லை.

8 comments:

Jaleela Kamal said...

www.kidsfood-jaleela.blogspot.com

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் பயனுள்ள இடுகை.. வாழ்த்துக்கள்

Thaai said...

நன்றி உழவன் அவர்களே!!!

Menaga Sathia said...

மிகவும் பயனுள்ள இடுகை!!

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை

mohamedali jinnah said...

நல்ல கட்டுரை .

Janaki. said...

VERY NICE BLOG KEEP IT UP

JB

Thaai said...

Thanks nidurali & Jana... :)