skip to main |
skip to sidebar
இருபதாவது வாரம் (week 20)
இப்பொழுது 'வெர்னிக்ஸ்' (vernix) என சொல்லப்படும் வெள்ளை நிற வழு வழுப்பான திரவம் குழந்தையின் தோலின் மேல் உருவாகி இருக்கும். இது குழந்தையின் தோலை "aminotic fluid" இல் இருந்து காபதாக சொல்லபடுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன் முற்றிலும் போய் விடும். எனினும் சில குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவை பிறந்த பின்னும் காணப்படும். ஆனால் இது கவலை கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 13 cms இருக்கும். முழு நீளம் 25.5 cms இருக்கும். எடை சுமார் 310gms இருக்கும்
கர்ப்ப காலத்தில் 10-12kgs வரை எடை கூடும். ஒரு சிலருக்கு அது கூடவோ குறையவோ இருக்கலாம். இப்பொழுது இந்த எடை எங்கெங்கு எந்த அளவு கூடும் என்று பாப்போம்:
- குழந்தையின் எடை : 38%
- நச்சுக்கொடி (PLACENTA): 9%
- குழந்தை மிதந்து கொண்டு இருக்கும் நீர் (aminotic fluid) : 11%
- உங்கள் உடலில் அதிகமாகி உள்ள இரதத்தின் எடை, திரவங்கள் :22%
- உங்கள் கருப்பை, மார்பகங்கள், பிட்டம், கால், மாற்ற பாகங்கள்: 20%
இனிமேல் சிலருக்கு வயற்றின் தோல் விரிவடைய ஆரம்பிப்பதால் அடி வயற்றில் லேசான வலி இருக்கும். இப்பொழுதில் இருந்து வயறிற்கு நல்லெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் விட்டு பிறகு குளிக்கலாம். அவ்வாறு செய்வது தோல் வறண்டு போகாமல் இருக்க உதவும். தோலில் என்னை பசை இருப்பின் அது விரிவடையும் பொது ஏற்படும் அசொவ்கரியம் குறையும். மேலும் அது "stretch marks" எனப்படும் தோல் விரிவடைவதால் ஏற்படும் கோடுகள் விழுவதை குறைப்பதாக சொல்லபடுகிறது. சிலருக்கு மார்பகங்களிலும் இக்கோடுகள் விழும்.
4 comments:
வணக்கம் அக்கா,
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி .தொடர்ந்து பதிவை இடுங்கள். ஏன் 20 வாராத்தோடே நிறுத்திட்டீங்க ? மிகுதியையும் எதிர்பாக்கிறேன்.
நன்றி
Dear anonymous,
Thnaks a ton. I'm glad my posts are of use to you. Will update soon. Keep cheking & giving your feedback. If u want me write about any particular topic please let me know.
sorry for the comment in English. The tamil typepad is not working right now.
வணக்கம் அக்கா,
ஏன் கர்ப்பிணி பெண்களுக்கு திடீர்ன்னு சுகர் கூடுது... ? எனக்கு முதல்ல சுகர் இல்லை இப்ப எனக்கு 21 வது வாரம். நான் நேத்து டாக்டர் கிட்ட போனேன்.ப்ளெட் செக் பண்ணி பார்த்திட்டு இப்ப எனக்கு கூட சுகர் இருக்குன்னு சொன்னாங்க,காப்பி டீ ல கூட சுகர் சேர்க்காம குடிக்க சொன்னாங்க , ரொம்ப கஸ்டமாயிருக்கு .சுகர் கூட இருக்குறவங்க என்ன சாப்பிடனும் எது சாப்பிடக் கூடாது .... உங்களுக்கு இது பற்றி அனுபவம் இருக்கா ? முடிந்தால் இது பற்றி ஒரு பதிவை இடுங்கள். எதிர் பாக்கிறேன். நன்றி .
Anonymous, what a surprise!!!... i was planning to write about 'gestational diabetes' in my next post & u have requested for it. Will write about it soon.
Post a Comment