இப்பொழுது சிலருக்கு stethascope வயற்றின் மேல் வைத்தால் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும். உங்களுக்கு கேட்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். சிலரிக்கு க்டைசி வரை stethascope மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியாது. இது சாதரணமானது தான். stethascopeஐ விட doppler கருவி மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை சுலபமாக கேட்க முடியும்.
வயறு பெரிதாகி கொண்டு வருவதனால் படுப்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஒரு பக்கம் படுக்கும் பொழுது வயற்றின் கீழ்( வயிர்டிற்கு சப்போர்ட் ஆகவும்) மற்றும் தொடைகளுக்கு நடுவில்(,இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வலி குறையும்) ஒரு தலையணையை வைத்து படுத்தால் சற்று சிரமம் குறையும். மல்லாக்க படுப்பது முதுகு தண்டிர்க்கு அதிக எடை ஏற்றுவதால் நல்லதல்ல. பொதுவாக தாய் இடதுபக்கம் திரும்பி படுப்பதே நல்லது. எனினும் இரவு முழுவதும் ஒரு பக்கமே படுப்பது என்பது கடினமானது. எனவே முடிந்தவரை அவ்வாறு படுக்க முயற்சிக்கலாம். மேலும் இடது வலது என்று திரும்பி படுக்கும் பொழுது எழுந்து உட்க்கார்ந்து திரும்பி படுப்பதே இனிமேல் நல்லது. இது குழந்தைக்கு கொடி சுற்றிகொள்வதை தடுக்கும் என்று முன்னோர்கள் சொல்கிறார்கள்.
2 comments:
அன்பு தோழியே மிகவும் பயனுள்ள தொடரை பெண்களுக்காக எழுதி இருக்கிறீர்கள். எல்லா புதுமன தம்பதிகளுக்கும் இது உதவும், வெளிநாட்டில் வாழும் தோழிகளுக்கும் உதவும்.
தாயே நீ வாழ்க
தாய் என் பிலாக் பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி
பாலோவர்ஸில் உங்கள் பிலாக்கை லாகின் பண்ணுங்கள் நிறைய கர்பிணி பெண்களுக்கு உங்க்ள் பதிவு பயன்படும். நான் என் குழந்தை வளர்பு பிலாக்கில் தாய்மை ஒரு இனிய பயணத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன்
Post a Comment