skip to main |
skip to sidebar
இப்பொழுது 'வெர்னிக்ஸ்' (vernix) என சொல்லப்படும் வெள்ளை நிற வழு வழுப்பான திரவம் குழந்தையின் தோலின் மேல் உருவாகி இருக்கும். இது குழந்தையின் தோலை "aminotic fluid" இல் இருந்து காபதாக சொல்லபடுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன் முற்றிலும் போய் விடும். எனினும் சில குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவை பிறந்த பின்னும் காணப்படும். ஆனால் இது கவலை கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 13 cms இருக்கும். முழு நீளம் 25.5 cms இருக்கும். எடை சுமார் 310gms இருக்கும்
கர்ப்ப காலத்தில் 10-12kgs வரை எடை கூடும். ஒரு சிலருக்கு அது கூடவோ குறையவோ இருக்கலாம். இப்பொழுது இந்த எடை எங்கெங்கு எந்த அளவு கூடும் என்று பாப்போம்:
- குழந்தையின் எடை : 38%
- நச்சுக்கொடி (PLACENTA): 9%
- குழந்தை மிதந்து கொண்டு இருக்கும் நீர் (aminotic fluid) : 11%
- உங்கள் உடலில் அதிகமாகி உள்ள இரதத்தின் எடை, திரவங்கள் :22%
- உங்கள் கருப்பை, மார்பகங்கள், பிட்டம், கால், மாற்ற பாகங்கள்: 20%
இனிமேல் சிலருக்கு வயற்றின் தோல் விரிவடைய ஆரம்பிப்பதால் அடி வயற்றில் லேசான வலி இருக்கும். இப்பொழுதில் இருந்து வயறிற்கு நல்லெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் விட்டு பிறகு குளிக்கலாம். அவ்வாறு செய்வது தோல் வறண்டு போகாமல் இருக்க உதவும். தோலில் என்னை பசை இருப்பின் அது விரிவடையும் பொது ஏற்படும் அசொவ்கரியம் குறையும். மேலும் அது "stretch marks" எனப்படும் தோல் விரிவடைவதால் ஏற்படும் கோடுகள் விழுவதை குறைப்பதாக சொல்லபடுகிறது. சிலருக்கு மார்பகங்களிலும் இக்கோடுகள் விழும்.
குழந்தையின் கண் மற்றும் இமைகள் இப்பொழுது நல்ல வளர்ச்சி இருக்கும். எனினும் இமைகள் குழந்தை பிறக்கும் வரை மூடிய நிலையிலேயே இருக்கும். 24-25 வாரங்களில் குழந்தை பிறந்தாலும் கூட இமைகள் திறந்துகொள்ளும். குழந்தை இப்பொழுது நன்றாக எடை கூட ஆரம்பித்திருக்கும். இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 12 cms இருக்கும். முழு நீளம் 23 cms இருக்கும். எடை சுமார் 250 gms இருக்கும்இப்பொழுது நீங்கள் நன்றாக எடை கூட ஆரம்பித்திருபீர்கள். எனவே இப்பொழுது நீங்கள் உங்கள் உடலுக்கு தக்கவாறான உடைகள் வாங்க வேண்டி வரலாம். கர்ப்ப காலத்தில் உபயோகிப்பதற்கென்றே பிரத்யோக ஆடைகள் கடைகளில் கிடைக்கும். அவை மிகவும் சவ்கரியமாக இருக்கும். சல்வார் போன்ற உடைகளை விரும்புவோர் சற்று பெரிய அளவில் தைத்து கொள்ளலாம். அவ்வாறு தைபவர்கள் முன் பக்கம் ஹூக் வைத்து front open டைப் தைத்தால் குழந்தை பிறந்த பின் பாலுட்டவும் வசதியாக இருக்கும்.கற்ப காலத்தில் பிரா அளவு 2-3 சைஸ் வரை கூடும். எனவே அதற்க்கு தக்கவாறு சரியான அளவு வாங்கி உபயோகிப்பது மிகவும் முக்கியம். இறுக்கமான உள்ளாடை அணிய கூடாது. தளர்த்தியான உள்ளாடை அணிந்தால் மார்பகங்கள் தொங்கி போகும். சரியான அளவு உள்ளாடை இப்போதிருந்து அணிந்து வந்தால் மார்பகங்கள் தொய்வடைந்து போகும் அளவு குறையும். ஆனால் எப்படி இருந்தாலும் கர்பத்துக்கு பின் மார்பகங்கள் முன் போல் இல்லாமல் சற்று தொய்வடைவது தவிர்க்க முடியாது. பாலுட்டுவதால் மார்பகங்கள் தொய்வடையும் என்று சொல்வது தவறான கருத்து. அது கற்ப காலத்தில் பால் சுரப்பிகள் செயல்பட தொடங்கி விரிவடைவதால் ஏற்படுவது. நீங்கள் குழந்தைக்கு பால் ஊட்டினாலும் இல்லை என்றாலும் குழந்தை பிறபிர்க்கு முன்பே அவை விரிவடைந்து இருக்கும். எனவே மார்பகங்கள் சற்று தொய்வடைவது தவிர்க்க இயலாதது. பால் ஊட்டுபவரானால் குழந்தை பால் மறந்த பின் மார்பகங்கள் மிகவும் தளர்ந்தது போல் காணப்படும். சுமார் 6 மாதங்களில் மார்பகங்களில் மீண்டும் கொழுப்பு சேர்ந்து அவை ஒரளவு சரி ஆகும்.