முக்கால் கிணற்றை தாண்டி விட்டீர்கள். நிறைய பேர் உங்களிடம் அவர்கள் பிரசவ அனுபவத்தை சொல்லி இருப்பார்கள். அவற்றில் சிலர் சொன்னதை கேட்டு உங்களுக்கு பிரசவ நாளை பற்றிய பயம் அதிகரித்து இருக்கலாம். சுக பிரசவத்தை விரும்புபவர்கள் முதலில் அவர்கள் மனதை அதற்க்கு தயார் படுத்திகொள்வது மிக மிக அவசியமாகும். நான் என்னை எப்படி தயார் படுத்தினேன் என்று இங்கு சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
பிரசவம் வலி மிகுந்து தான் என்பதை முதலில் ஏற்றுகொள்ள வேண்டும். ஆம். அது வலி மிகுந்த அனுபவம் தான். அனால் எவ்வளவு நேர வலி? சில ம்மணி நேரம் அல்லது ஓர் நாள் அல்லது இரண்டு நாள். வெகு சிலருக்கு ம்மட்டும் நச்சு வலி என சொல்லப்படும் வலி இருந்தால் இரண்டு நாட்களுக்கு மேல் வலி இருக்கும். அனால் பெரும்பான்மையோருக்கு 8-10 மணி நேரத்தில் பிரசவம் முடிந்து விடும். என்னை போன்று சில அதிர்ஷ்தசாலிகளுக்கு[;) ] 3-4 ம்மணி நேரத்தில் முடிவதுண்டு. எப்படி இருப்பினும் முதல் பாதி வலி சுலபமாக பொறுத்துக்கொள்ள முடியும் அளவுக்கு தான் இருக்கும்.மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை விட சற்று அதிகம். குழந்தை பிறந்த பின் வலி மாயமாய் காணாமல் போய் விடும். சரி, அந்த கதையை எல்லாம் விடுங்க. இப்பொழுது நான் சொல்வதை கற்பனை பண்ணிகோங்க.
ஒருவர் ஒரு பைக்கில் வேகமா போறாங்க . எதிர்பாராத விதம்மாக ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். கை, கால், இடுப்பு, முகம், தலைன்னு ஒரு இடம் விடாமல் பயங்கர அடி. அப்பொழுது என்னதான் வலி நிவாரணி கொடுத்தாலும் முழுமையான வலி நிவாரணம் கிடைக்காது. இத்தனை வலி சுத்தமாக சரி ஆகா எவளோ நாள், மாதம், வருஷம் ஆகும்னு தெரியாது. வலியில் இருந்து தப்பிக்க வழி ஏதும் கிடையாது. அதை எல்லாம் தாங்கி பொழச்சு வரவங்க எத்தனை பேர் இருக்காங்க!. அதை எல்லாம் விடவா பிரசவம் கடினமாக இருக்க போகுது?
அது போல பிரசவத்தை ஒரு விபத்து என்று நினைச்சுகோங்க. அனால் இதில் வலி ஒரு குறுப்பிட்ட பகுதியில் மட்டும் தான். அதுவும் மீறி போனால் 2-3 நாட்கள் தான். அப்படியும்ம் வலி தாங்க முடியாதுங்கரவங்களுக்கு இப்பொழுது பல வலி நிவாரணிகள் உள்ளன.அதுக்கு இது எவ்ளவோ தேவலைன்னு தோணுது இல்லீங்களா???!!! ஆமாங்க, எந்த வலியும் நமக்கு வரும் போது கஷ்டமாக தான் இருக்கும். அனால் மனது வைத்தால் கண்டிப்பாக தாங்கிக்கொள்ள முடியும். என்ன சொல்றீங்க?.
எனவே பிரசவம் பத்தின பயத்தை விட்டு தள்ளுங்க. பிரசவம் அப்படி தாங்க முடியாத வலினா எப்படி பலரும் இரண்டாம் குழந்தை வேணும்னு பெற்றுகொள்வங்க?. பயப்படாம மன தைரியத்துடன் மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, ஆண்டவன் கிருபையும் இருந்தால் சுக பிரசவம் சுலபமாக சுகமாக அமையும். இதில் நாம் கொடுக்கும் ஒத்துழைப்பு மிக முக்கியம். பிரசவ நேரத்தில் என்னால வலியை தாங்க முடியாது என்கிற மனநிலையோட போனால் மருத்துவர் முயற்சித்தாலும் சுக பிரசவம் அமைவது கஷ்டம். 'என்னால முடியலைன்னு' சொல்ல மாட்டேன்னு முடிவு பண்ணிட்டு போங்க. எல்லாம் நல்லபடியாக முடியும்னு positive மனநிலையோட இருங்க. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். என்ன,பிரசவம்ன்கர விபத்த எதிர்நோக்க தயார் ஆகிடிங்க தானே?. All the best.
Saturday, January 23, 2010
Sunday, January 17, 2010
வளைகாப்பு / பூ சூட்டல்
ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimesterஇல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது.
குழந்தை உருவான ஏழாவது மாதத்தில் வளைகாப்பு/பூ சூட்டல் விழா தென் இந்தியர்களால் கொண்டாடபடுகிறது. அப்பொழுது தாயிற்கு கை நிறைய கண்ணாடி வளையல் இட்டு, வாசனை பூக்கள் சூடியும் மகிழ்வர். அவ்வாறு அணிவிக்கப்பட்டு வளையல்கள் குழந்தை பிறப்பு வரை அணியுமாறு அறிவுறுத்துவார். அதற்க்கு அறிவியல்ரீதியான காரணம் உண்டு. தாயின் கையில் உள்ள கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி குழந்தை பிறப்பு வரை கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் உலா வரலாமே தோழிகளே!!!
குழந்தை உருவான ஏழாவது மாதத்தில் வளைகாப்பு/பூ சூட்டல் விழா தென் இந்தியர்களால் கொண்டாடபடுகிறது. அப்பொழுது தாயிற்கு கை நிறைய கண்ணாடி வளையல் இட்டு, வாசனை பூக்கள் சூடியும் மகிழ்வர். அவ்வாறு அணிவிக்கப்பட்டு வளையல்கள் குழந்தை பிறப்பு வரை அணியுமாறு அறிவுறுத்துவார். அதற்க்கு அறிவியல்ரீதியான காரணம் உண்டு. தாயின் கையில் உள்ள கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி குழந்தை பிறப்பு வரை கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் உலா வரலாமே தோழிகளே!!!
Saturday, January 16, 2010
கிரகணத்தின் போது கர்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?
சூரிய கிரகணத்தின் போது கர்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களில் பலருக்கு இருக்கும். கிரகானதுக்கும் குறையுள்ள குழந்தை பிறபதர்க்கும் சம்பந்தம் உள்ளதாக சிலர் நம்புகிறார்கள். அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று எனக்கு தெரியாது. அனால் எனக்கு பெரியவர்களால் சொல்லப்பட்டது கீழே :
நீங்கள் வசிக்கும் நாட்டில் கிரகணம் தெரிந்தால் மட்டுமே இதை செய்யணும். ஏதோ நாட்டில் கிரகணம் தெரிவதற்கு நீங்கள் பயம் கொள்ள வேண்டாம்.
- உண்மையை சொல்ல போனால் எதுவும் செய்யாமல் இருப்பதே உத்தமம். பேசாம படுத்து தூங்கிடுங்க.
- முக்கியமாக சூரிய கதிர்கள் உங்கள் மேல் படாதவாறு பார்த்து கொள்ளுங்கள். கதவு ஜன்னல்களுக்கு திரை இட்டு கொள்வது நல்லது.
- கிரகண நேரத்தில் உணவு உண்ணுவது தவிர்க்க படனும். கிரகணம் முடிந்ததும் குளித்த பின் உணவு உட்கொள்ளலாம்.
நீங்கள் வசிக்கும் நாட்டில் கிரகணம் தெரிந்தால் மட்டுமே இதை செய்யணும். ஏதோ நாட்டில் கிரகணம் தெரிவதற்கு நீங்கள் பயம் கொள்ள வேண்டாம்.
Subscribe to:
Posts (Atom)