Tuesday, October 23, 2012

டெலிவரிக்கு பின் வயறு இறுக உதவும் exercise

பெரும்பாலான பெண்களுக்கு டெலிவரிக்கு பின் வயறு தொல தொளா  என்றாகிவிடும். முன் போல் நல்ல இறுகிய வயறு வேண்டுவோர் கீழ்க்கண்ட exercise டாக்டரின் ஆலோசனைக்கு பின் செய்யலாம். காலை வெறும் வயிற்றில் செய்தால் சுலபமாக இருக்கும். விரும்புவோர் காலை மாலை இரு வேளையும் செய்யலாம். தொடர்ந்து 3-6 மாதங்கள் செய்தால் வயறு நன்கு இறுகி வரும். அதன் பின்னும் தொடர்ந்து செய்தால் ரொம்பே நல்லது. என்ன ஒரு 5 நிமிஷம் தானே. செய்து தான் பாருங்களேன்!

Exercise  1:

1.தரையில் மல்லாக்க படுத்து கொள்ளவும்.
2. கால் முட்டியை மடக்கி பாதங்கள் தரையில் படுமாறு காலை inverted "V " போல் மடக்கி கொள்ளவும்.
3. கை பாதத்தை (Palm ) அடி வயற்றின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது வயிற்றை மெதுவாக உள் இழுத்து இறுக்கவும். 6 வினாடிகள் அப்படியே வைத்து இருந்து பின் மெதுவாக வயிற்றை ரிலீஸ் செய்யவும்.
5. இது போல் 5 முறை செய்தால் போதும்.

 Exercise  2:

1.தரையில் மல்லாக்க படுத்து கொள்ளவும்.
2. கால் முட்டியை மடக்கி பாதங்கள் சுவற்றை நோக்கி வைத்து கொள்ளவும்.
3. மெதுவாக சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை முன்னும் பின்னும் நன்கு  நகர்த்தவும். இது போல் 20 முறை செய்வவும். பின் கால்களை இறக்கி ரெஸ்ட் செய்யவும்.
4. இன்னொரு முறை ஸ்டேப் 3 (20 முறை cycling) repeat செய்வவும்.

அவளோ தான்!!!. செஞ்சு பாருங்க .

Sunday, October 7, 2012

பால் பாட்டில் உபயோகிக்கும் முறை!


நான் முதல் முறை என் குழந்தைக்கு பால் பாட்டில் உபயோகிக்கும் போது பாட்டில் மூடியை நல்லா இறுக மூடி (அப்போ தானா  பால் லீக் ஆகாது) குடுத்தேன் ;). குழந்தை பாட்டிலே வாயில் சில நிமிடங்கள் வைப்பா , திரு திருன்னு முழிப்பா , அப்றோம் பாட்டிலே தள்ளி விட்டிடுவா. எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்றோம் தான் அம்மா சொன்னங்க பால் பாட்டிலே ரொம்பே இறுக மூடாமல் கொஞ்சம் லேசாகவே மூடனும். அப்போ தான் காற்று உள்ள போய் , பால் வெளில வர ஈஸியா இருக்கும்.

பால் பாட்டில் உபயோகிக்கும் போது நிப்பிள் , பாட்டிலே  தினமும் ஒரு முறையாவது தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு sterlise பண்ணனும். மற்ற நேரம் அவற்றை கிளீனிங் liquid போட்டு , பாட்டில் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து  கழுவி காய விடனும். உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் sterlise பண்ண விரும்புபவர்கள் பாட்டில் sterliser  வாங்கிக்கலாம். வேலை சுலபமாகும்.

சில குழந்தைகள் பாட்டில் பீடிங் பழக சில நாள் பிடிக்கும். எனவே பாட்டில் பீடிங் ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்பில் இருந்தே குழந்தைக்கு பாட்டிலே தண்ணீர் ஊற்றி விளையாட  குடுத்திடுங்க. (அனால் நீங்கள் கூடவே இருந்து கவனமா பார்த்துக்கணும். இல்லேன கண்ணு, மூக்கு,காதுக்குள்ள தண்ணீரை ஊத்திக்க வாய்ப்பு உள்ளது). மெதுவா அவங்களே அதை வாயில் வெச்சு பழகுவாங்க. அப்புறம் சப்பி பழகுவாங்க. ஒரு வாரம் ,10 நாளில் பாட்டிலே  இருந்து குடிச்சு பழகிடுவாங்க. அதன் பிறகு பாட்டிலில் பால் குடுக்கலாம். உங்கள் மடியில் உட்க்கார வச்சு  குடுங்க. எக்காரணம் கொண்டும்  குழந்தை படுத்த நிலையில் பீட் பண்ண வேண்டாம். அவ்வாறு செய்தால் வாயில் இருக்கும் பால்/தண்ணீர் காதுக்குள் ஏறி ear infection வர வாய்ப்பு அதிகம். குழந்தையின் காது உள் பகுதி முழு வளர்ச்சி ஆகாமல் இருபதால் முதல் வருடம் முழுவதும் பீடிங்(பாட்டில் பீடிங் /மதர் பீடிங் எதுவானாலும் சரி) பண்ணும் போது கவனம் தேவை.

Saturday, October 6, 2012

சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி/ஓமவள்ளி


கற்பூரவள்ளி இலை இரண்டு அல்லது மூன்று எடுத்துகோங்க. அதை ஒரு ஜல்லடையில் வெச்சு நல்ல விரல்களால் கசக்குங்க. கசக்கி பிழிஞ்சா சாறு வரும். 6-12 மாசத்துக்குள்  உள்ள குழந்தைனா 3 சொட்டு போதும். பாலில் கலந்து குடுக்கலாம். அல்லது தேனில் கலந்து குடுக்கலாம். பெரிய குழந்தைகளுக்கு 5-6 சொட்டு குடுக்கலாம். பொதுவா என் குழந்தை இந்த சாற்றை தேனில் கலந்து கொடுத்தால் குடிக்க மாட்டாள். எனவே நான் இதை குழந்தைகளுக்கு செய்யும் உப்பு பருப்பில் கலந்து சாதத்தில் பிசைந்து குடுப்பேன். அல்லது அவளுடைய காஞ்சியில் கலந்திடுவேன். தோசை மாவிற்குள் பொடியாக நறுக்கி போட்டுக்கலாம். இது பெரியவர்களுக்கும் சளி இருமலுக்கு நல்ல மருந்து. இரவில் சாபிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் குறையும். குழந்தைக்கு பிடிக்கும் எந்த உணவிலும் சேர்த்து குடுக்கலாம். நான் சமயத்தில் முட்டை வறுவல், fried rice போன்றவற்றுள் பொடியாக நறுக்கு போட்டிடுவேன் ;) அனால் தேனில் கலந்து சாபிடுவது பெஸ்ட். அப்படி சாப்பிடத குழந்தைகளை மிரட்டி, அமுக்கி கொடுப்பதை விட இப்படி mask பண்ணி குடுத்திடுங்க. நீங்களும் சளிக்கு சாப்பிட்டு பாருங்க. இருமலுடன் கூடிய சளிக்கு கை கண்ட மருந்து இது.

 Note: குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி இருந்தால் இந்த சாற்றை தேனில் கலந்து குடுக்க வேண்டாம். வேறு விதங்களில் குடுங்க. ஏனெனில் தேன் சூடு ஆனால் toxic ஆகிடும்னு ஆயுர்வேதத்தில் சொல்றாங்க. வெதுவெதுப்பான temperatureகு  மேல் போக கூடாது. காய்ச்சல் உள்ள போது உடம்பு சூடிற்கு தேன் toxic ஆகிடும்னு சொல்றாங்க.

இதோ கற்பூரவள்ளி/ஓமவள்ளி  செடி .

http://agritech.tnau.ac.in/horticulture/horticulture_gallery/medicinal_crops/pages/Karpoora%20valli%20%28Coleus%20aromaticus%29.html

Thursday, June 23, 2011

இயற்கை முறையில் செய்த rose milk

பல நாட்கள் ஆகிவிட்டன பதிவிட்டு!!! இதோ ஒரு புதிய பதிவு... உடல் நலம் பற்றி 
அல்ல... உணவு பற்றி...

இது குழந்தைகளுக்கான இயற்கை முறையில் செய்த rose milk ... பெரியவங்க 
குடிக்க கூடதாணு கேட்காதீங்க...குழந்தை மனதுடைய பெரியவங்களும்
குடிக்கலாம்...;)

இதோ recipe ... 

1 . ஒரு 11 /2 கப் பால் எடுத்துகோங்க. அதோட 2 வட்ட துண்டு பீட்ரூட்டை நறுக்கி 
சேர்த்துகோங்க. இப்போ பாலை நல்ல காய்ச்சுங்க. பொங்கி வந்து பால் பிங்க் நிறம் வந்ததும் அடுப்பை அணைச்சிட்டு பாலை வ்டி கட்டிகோங்க. சூடு நல்ல ஆறட்டும்.
2 .  அந்த நேரத்துல 1 /2 கப் தண்ணீர், 2 ஸ்பூன் சர்க்கரை, 2 -3 ஸ்பூன் rose gulkand ( departmental storeil கிடைக்கும்) சேர்த்து அரைசுகொங்க. இதை நல்ல ஆறின பாலோட சேர்த்து
கலந்திட்டு வ்டிகட்டிகோங்க.
3 .  வேணும்னா fridgela வெச்சு கூல் பண்ணி குடிக்கலாம். இல்லன அப்படியே குடிக்கலாம்.


செயற்கை நிறம், மணம் இல்லாத சத்தான பானம். செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க :)




Wednesday, October 27, 2010

குழந்தை நலம்!!!

நான் சில மாதங்களாக  பதவுகள் போடா முடியாமைக்கு மன்னிக்கவும். இன்று குழந்தை நலம் பற்றி ஒரு அருமையான ப்ளாக் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு. இந்த ப்ளாக் ஒரு குழந்தை நல மருத்துவருடையது  என்பது மேலும் சிறப்பு. அந்த ப்ளாக் இதோ இந்த முகவரியில் சென்று பாருங்கள்.

 http://doctorrajmohan.blogspot.com/

Thursday, April 15, 2010

விமான பயணம்

கர்ப்ப காலத்தில் விமானத்தில் பயணம் செய்வதை பற்றிய குழப்பம் பலர் மனத்திலும் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.

விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள கர்பிணிகள் முடிந்தவரை 14-28 வாரங்களை தேர்வு செய்வது நல்லது. 36 வாரங்கள் வரை விமான பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு மேல் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கபடுவீர்கள். எவ்வாறாயினும் முதலில் உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி ஆலோசனை மேற்கொள்வது முக்கியம். உங்கள் கர்ப்பம் சிக்கல் இல்லாதது ஆயின் 14-36 வாரங்கள் வரை விமான பயன் மேற்கொள்வதில் சிக்கல் வராது. மீளும் கவனமாக இருக்க விரும்ம்புவோர் 14-32 வாரங்களுக்குள் உங்கள் பயணங்களை வைத்து கொள்ளலாம்.

பலருக்கு உள்ள இன்னொரு சந்தேகம் விமான நிலையத்தில் உள்ள scanner/metal detector வழியாக போனால் கரு பதிக்கபடுமா என்பது தான்.
விமான நிலையத்தில் உள்ள scanner/metal detector வழியாக போவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. X-ரே தான் குழந்தைக்கு பதிப்பு உண்டாக்கும். scanner/metal detector-இல் X-ரே கதிர் வீச்சு இருக்காது. நம் பெட்டிகளை சோதனை செய்யும் கருவியில் தான் X-ரே கதிர் வீச்சு இருக்கும். எனவே பயம் கொள்ள வேண்டாம்.

இப்பொழுது இரண்டாம் நிலை சோதனைக்காக உபயோகிக்கப்படும் backscatter X-ray system சிறிதளவு(மிக மிக குறைந்த அளவில்) X-ரே கதிர் வீச்சு கொண்டது எனினும் அது கர்பிணிகளுக்கு பாதிப்பில்லை என சொல்ல படுகிறது. மேலும் இது இரண்டாம் நிலை சோதனைக்காகவே உபயோக படுகிறது. அதாவது சந்தேக படும்படியான நபர்கள் மேல் மட்டுமே செயய படும். சில சமயம் இரண்டாம் நலை சோதனை random ஆக செய்யப்படும். முதல் நிலை சோதனை என்பது metal detector மூலமே செய்ய படுகிறது. அப்படியே உங்களை இரண்டாம் நிலை சோதனைக்கு வர சொன்னால், நீங்கள் கர்ப்பமாக இருப்பத சுட்டி காட்டி backscatter-கு பதில் full pat-test செய்ய சொல்லி கோரிக்கை வைக்கலாம்.

Saturday, April 3, 2010

கால் வீக்கம் (preganancy oedema)

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை கவலை கொள்ள செய்யும் ஒன்று இந்த கால வீக்கம். அனால் பொதுவாக இது கவலை கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?

குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அது அடிவயற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் inferior vena cava அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது. Inferior vena cava பதங்களில் இருந்து இரத்தைத்தை மேல எடுத்து செல்லும். இப்போது அழுத்தினால் அது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. எனவே இரத்தம் காலில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது water retention அதிகரிக்கும். அதன் காரணமாகவே வீக்கம் ஏற்படுகிறது.

இந்த கால் வீக்கம் காலை நேரங்களில் குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். வெயில் காலங்களில் வீக்கம் அதிகரிக்கும். சிலருக்கு கை வீக்கம் கூட ஏற்படும்.

எப்படி சமாளிப்பது:
  • வீக்கம் அதிகமாக இருப்பின் சற்று பெரிதாக செருப்புகள் வாங்கி உபயோகியுங்கள்
  • முதிந்தவரை வலது பக்கம் படுக்கவும். இது inferior vena cava மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும்.
  • கால்களை உயர்த்தி வைக்கவும்
  • நிறைய தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 2- 21/2 லிட்டர் குடியுங்கள்
  • உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்
  • வாக்கிங் அல்லது ஸ்விம்மிங் தொடர்ந்து செய்வது நல்லது
  • கால்களை கீழிருந்து மேலாக நீவி விடலாம்
  • பார்லி காஞ்சி, வெந்தய காஞ்சி பருகலாம்
  • வீக்கம் உள்ள இடத்தில பச்சை முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டாலும் வீக்கம் குறையும்.
  • ஹோமாபதில் இதற்கு மருந்து உண்டு.

எப்பொழுது வீக்கம் கவலைப்பட வைக்கும்?

திடீர் என கை, கால், முகாம் வீங்கினாலோ அல்லது இந்த பாகங்களில் வீக்கம் அதிகமா இருந்தாலோ அது pre-eclampsia வாக இருக்கு வாய்ப்பு உள்ளது. pre-eclampsia என்பது placenta(கொடி) சரியாக வேலை செய்யாத போது ஏற்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

எப்பொழுது சரி ஆகும்?

குழந்தை பிறந்த 2-3 வாரங்களில் முற்றிலும் வீக்கம் வாங்கி விடும். எனவே கவலை பட வேண்டாம் :)

Wednesday, February 17, 2010

தாய்க்கு வேண்டிய பொருட்கள்

தாய்க்கு: வாங்க வேண்டிய மற்றும் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.

  • நைட்டி :முன் பக்கம் ஜிப் வைத்த அல்லது பீடிங் (முன் பக்கம் ஒரு ஜிப் மற்றும் பீட் பண்ண வசதியாக மார்பகத்துக்கு பக்கத்தில் 2 ஜிப் வரும்)நைட்டி . சிசேரியன் என்றால் முன் பக்கம் புல் ஓபன் நைட்டி தேவைப்படும். இப்போதைக்கு புல் ஓபன் நைட்டி ஒன்று வாங்கி கொள்ளுங்கள். பின்னர் தேவை எனில் வாங்கி கொள்ளலாம்.
  • பீடிங் பிரா : கடைசி மாதத்தில் வாங்குங்கள். அப்பொழுது நீங்கள் அணியும் ப்ரேசியரின் அளவை விட ஒரு அளவு அதிகம் வாங்கினால் சரியாக இருக்கும். எடுத்துகாட்டாக 32 அளவு உபயோகிப்பவர்கள் 34 அளவு வாங்க வேண்டும்.
  • சுடிதார்: முன் பக்கம் ஹூக் வைத்து சில சுடிதார் தைத்து கொள்ளுங்கள். வெளியில் போகும் பொது பீட் பண்ண வசதியாக இருக்கும். கொஞ்சம் லூஸ் வைத்து தைத்து கொள்ளுங்கள்.
  • வெளி நாட்டில் இருப்பவர்கள் maternity dresses பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
  • disposable panties - 20
  • maternity நாப்கின்ஸ்- 20 pack ஒன்று
  • Toiletries பேகில் உங்களுக்கு தேவையான சீப்பு, சோப்பு,பவுடர், டிஒட்ரன்ட் , பொட்டு, பேண்ட், கிளிப்ஸ்,பிரஸ், பேஸ்ட் போன்றவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • திஸ்ஸூ பேப்பர் ஒரு பாக்.
  • டவல் & கை துவலை-2
  • பிரஸ்ட் பேட்: தேவையெனில் வாங்கி கொள்ளுங்கள்.
  • பாத்ரூம் ஸ்லிப்பெர்ஸ்: மருத்துவமனைக்கு எடுத்து செல்ல.
  • சேர் குசன்: இரண்டு எடுத்து கொண்டால் குழந்தைக்கு பீட் பண்ணும் பொழுது கிழே ஒன்றும், முதுக்கு ஒன்று வைத்து கொண்டால் வசதியாக இருக்கும். நோர்மல் டெலிவரிகு பின் தையல் போடப்பட்டு இருந்தால் சேரில் குசன் வைத்து அமர்ந்தால் வலி குறைவாக இருக்கும்.

Tuesday, February 16, 2010

வாங்க வேண்டிய பொருட்கள் (purchase list)

Due Date நெருங்கி கொண்டு இருகிறவர்களுக்கு உபயோகமான ஒரு லிஸ்ட். இதில் நீங்கள் பிரசவத்திற்கு முன் குழந்தைக்கும், உங்களுக்கும் வாங்க வேண்டிய பொருட்களை பற்றி பாப்போம். குழந்தைக்கு வாங்கும் போதும் கச கச வென்று டிசைன் உள்ளது, அடர்த்தியான நிறங்கள் கொண்டதை தவிர்க்கவும். வெளிர் நிறங்கள்,வெள்ளை போன்றவை நல்லது. என்னெனில் அவற்றில் எறும்பு போன்ற பூச்சிகள் இருந்ந்தால் பளிச் என்று தெரியும்.

குழந்தைக்கு:
  • 6 செட் சட்டை : ஜாஸ்தி வாங்க வேண்டாம். கிப்ட் ஆக நிறைய சட்டைகள் வரும். எனவே முதல் சில நாட்களுக்கு அளவாக வாங்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வாங்கி கொள்ளுங்கள். குளிர் காலமா அல்லது வெயில் காலமா என்பதை கருததில் கொண்டு வாங்குங்கள். சட்டைகள் அனைத்தையும் துவைத்து அயன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஸ்லீப் சூட்: தேவையெனில் இரண்டு வாங்கி கொள்ளவும்.
  • ஸ்வட்டர்: உங்கள் இடத்திற்கு தேவை எனில் வாங்கி கொள்ளவும்.
  • mitten மற்றும் booties: கை காலுக்கு போட தேவைப்படும். முடி நிறைய உள்ள குழந்தைகள் தங்கள் கைகளால் முடியை இழுத்துக்கொண்டு கையை வெளியில் எடுக்க தெரியாமல் அழும். அவ்வாறானவர்களுக்கு mitten போட்டு விடலாம்.
  • நாப்பி க்ளோத்: 1 dozen triangle வடிவில் உள்ளது அல்லது velcro வைத்து ஓட்டுவது உபயோகிக்க சுலபமாக இருக்கும். triangle வடிவ நப்பி பனியன் துணி மற்றும் காட்டனில் கிடைக்கும். இவற்றையும் துவைத்து வைத்து கொள்ளுங்கள்.
  • நாப்பி பாட்ஸ் அல்லது diaper: 1 pack இது இரவு நேரத்தில் பயன்படுத்தி கொள்ள. டைபர் ரணில் தொப்புள் வரும்ம் இடத்தில ஒபெனிங் இருபது போல் பார்த்து வாங்குங்கள். நாப்பி பட்ஸ் என்பது சானிடரி பட போலவே பெரியதாக இருக்கும். இதை நாப்பி கிளோதில் வைத்து ஒட்டி உபயோகிக்க வேண்டும். இது போன்ற பாட் குழந்தை திரும்ப ஆரம்பிக்கும் வரை உபயோகிக்கலாம். இதை உபயோகிப்பதால் குழந்தைக்கு கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கும்.
  • பிளாஸ்டிக் சீட்/changing sheet: நாப்பி மற்ற தேவைப்படும்.
  • Quick dry sheet: கீழே பிளாஸ்டிக் மேலே ஒரு காட்டன் லேயர் இருக்கும். ஈரத்தை நன்கு உறுஞ்சி கொள்ளும். சீக்கிரம் காய்ந்து விடும். நாப்பி துணி கட்டி படுக்க வைக்கும் பொது உபயோகித்து கொள்ளலாம்.
  • பக்கெட்,mug : குளிக்க ஒன்று, அழுக்கான நாப்பியை நனைத்து வைக்க ஒன்று என 2 பக்கெட் தேவைப்படும்.
  • பேபி சோப்பு, பவுடர், சோப்பு கேஸ், பவுடர் பாக்ஸ் with puff
  • துணி துவைக்க தேவையான சோப்பு: இந்தியாவில் இருப்பவர்கள் காதி சோப்பு அல்லது சன் லிடே வெள்ளை நிற சோப்பு வாங்கி உபயோகிக்கலாம்.
  • பேபி பெட்/மெத்தை: தேவையான சைஸ் மற்றும் thickness பார்த்து வாங்கி கொள்ளுங்கள். Cradle உபயோகிக்க போகிறீர்களா அல்லது playpen உபயோகிக்க போகிறீர்கள அல்லது பாயின் மேல் போட பெட் தேவையா என்பதை கருத்தில் கொண்டு வாங்குங்கள்.
  • பேபி காட்/playpen: கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பது இல்லை. அனால் தனியாக இருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளகூடிய playpen வாங்கினால் அதையே குழந்தை பிறந்தது முதல் படுக்கையாகவும் உபயோகித்து கொள்ளலாம். இது குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை உபயோகப்படும். குழந்தையை இதில் விட்டு சென்று பயமில்லாமல் வேலைகளை பார்க்கலாம்.
  • கொசு வலை/கொசு குடை: நீங்கள் இருக்கும் இடத்தில கொசு அதிகமாக இருக்கும் என்றால் இது கண்டிப்பாக தேவை படும். Cradle/தொட்டில்/பெட் எது உபயோகித்தாலும் அதுக்கு தகுந்தாற்போல் வாங்கி கொள்ளுங்கள். காட்டன் அல்லது synthetic மடீரியல்இல் கிடைக்கும். Cradle மற்றும் தொட்டிலுக்கு ஜிப் அல்லது velcro வைத்து கிடைக்கும். குடை போன்ற நெட் வாங்கும் போது லாக் உள்ளதாக பார்த்து வாங்குங்கள்.
  • தொட்டில்: இரண்டு தேவைப்படும். நல்ல காட்டன் துணி வாங்கி தேவையான நீளத்தில் தைத்து கொள்ளுங்கள். வெள்ளை அல்லது கலர் துணி உபயோகிக்கலாம். சில குழந்தைகள் வெள்ளை தொட்டிலில் சரியாக தூங்காது . அவ்வாறான குழந்தைகளுக்கு கலர் துணியில் தொட்டில் தேவைப்படும்.
  • Receiving blanket: ஒன்று போதும். இது குழந்தையை இரவில் ககதகதப்பாக அணைத்தாற்போல் படுக்க வைக்க உபயோகமாக இருக்கும். மற்ற நேரங்களில் நாம் குழந்ந்தையை கையில் வைத்துகொள்ளும் போதும் உபயோகிக்கலாம். நாம் உடம்பு சூடு குழந்தைக்கு போகாது. வெளியில் குழந்தையை எடுத்து செல்லும் போதும் உபயோக படும். கீழே படுக்க வைக்கும் போது படுக்கையாக உபயோகிக்கலாம்.
  • Hood towel: இதுவும் ஒன்று போதும். கிபிட் ஆகா நிறைய வரும் ;) . இது குழந்தையை வெளியில் எடுத்து செல்லும் பொது உபயோகப்படும். குளித்தபின் உடம்பு துடைக்கவும் உபயோகிக்கலாம்.
  • வெள்ளை காட்டன் towel: ஆறு. இது குழந்தையை பகலில் போர்த்தி வைக்கவும் குளித்தபின் துடைக்கவும் உபயோகிக்கலாம்.
  • Hand towel: குழந்தை வாயில் இருந்து வரும் தயிரை துடைக்க மற்றும் குழந்தைக்கு towel பாத் கொடுக்க தேவைப்படும்.
  • பாட்டில், பாட்டில் brush, டீட்: வினிங்(weaning) பாட்டில் என்று சொல்லப்படும் ஸ்பூன் வைத்த பாட்டில் வாங்கி கொண்டு அதற்கு பொருந்தும் nipple(teat) வாங்கி கொள்ளலாம். சில brand weaning பாட்டிலுக்கு nipple பொறுத்த முடியாது. எனவே பார்த்து வாங்குங்கள். நான் pigeon brand பாட்டில் உபயோகித்தேன். இந்தியாவில் கிடைக்கும்.
  • பேபி comb செட்: brush போன்றதும், சாதா சீப்பு போன்ன்றதும்மாக ஒரு செட் ஆகா கிடைக்கும்.
  • Nail cutter, nail scissor செட்: nail scissor முதல் சில மாதங்களுக்கு உபயோகப்படும். பின்னர் உபயோகிக்க nail cutter தேவைப்படும். nail scissor உபயோகிக்க பாயமாக இருந்தால் நம் பல்லால் நகத்தை கொரித்தும் விடலாம்.
  • பேபி bag: குழந்தையை வெளியில் எடுத்து போகும் போது தேவைபடும்.
  • பஞ்சு: குழந்தையின் முதல் மாதத்தில் குழந்ந்தை அடிக்கடி மோசன் போகும். ஒவ்வொரு முறையும் கழுவினால் புண் ஆகிவிடும். என்னவே பஞ்சை தண்ணீரில் நனைத்து ஒற்றி எடுப்பது நல்லது.
  • Ear buds: குழந்தைகளுக்கான நல்ல ear buds பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
  • பேபி wipes/tissue papers: வெளியில் குழந்தையை எடுத்து செல்லும் போது உபயோகப்படும்.
  • Flask: 250-500 ml கொள்ளளவு கொண்டது போதும்.
  • பேபி பாத் tub: தேவையெனில் வாங்கி கொள்ளவும்.
  • கார் சீட்: தேவையெனில் வாங்கி கொள்ளவும்.
  • Pram/புஷ்சைர்/பேபி கேரியர் : தேவையெனில் வாங்கி கொள்ளவும். குழந்தையை படுக்க வைக்க கூடியதாக வாங்கி கொள்ளவும்.
  • பேபி rocking chair: தேவையெனில் வாங்கி கொள்ளவும்.
  • பழைய காட்டன் சேலை/வேஷ்டி : முன்று,நான்கு. குழந்தையை படுக்க வைக்க மிருதுவாக இருக்கும். மெத்தையின் மேல் போட உபயோகப்படும்.
இந்த லிஸ்டில் எதுவும் விடுபட்டு இருந்தால் தெரிவிக்கவும் தோழிகளே. சேர்த்து விடுகிறேன் :)

Saturday, January 23, 2010

பிரசவத்துக்கு மனதை தயார்படுத்துதல்

முக்கால் கிணற்றை தாண்டி விட்டீர்கள். நிறைய பேர் உங்களிடம் அவர்கள் பிரசவ அனுபவத்தை சொல்லி இருப்பார்கள். அவற்றில் சிலர் சொன்னதை கேட்டு உங்களுக்கு பிரசவ நாளை பற்றிய பயம் அதிகரித்து இருக்கலாம். சுக பிரசவத்தை விரும்புபவர்கள் முதலில் அவர்கள் மனதை அதற்க்கு தயார் படுத்திகொள்வது மிக மிக அவசியமாகும். நான் என்னை எப்படி தயார் படுத்தினேன் என்று இங்கு சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

பிரசவம் வலி மிகுந்து தான் என்பதை முதலில் ஏற்றுகொள்ள வேண்டும். ஆம். அது வலி மிகுந்த அனுபவம் தான். அனால் எவ்வளவு நேர வலி? சில ம்மணி நேரம் அல்லது ஓர் நாள் அல்லது இரண்டு நாள். வெகு சிலருக்கு ம்மட்டும் நச்சு வலி என சொல்லப்படும் வலி இருந்தால் இரண்டு நாட்களுக்கு மேல் வலி இருக்கும். அனால் பெரும்பான்மையோருக்கு 8-10 மணி நேரத்தில் பிரசவம் முடிந்து விடும். என்னை போன்று சில அதிர்ஷ்தசாலிகளுக்கு[;) ] 3-4 ம்மணி நேரத்தில் முடிவதுண்டு. எப்படி இருப்பினும் முதல் பாதி வலி சுலபமாக பொறுத்துக்கொள்ள முடியும் அளவுக்கு தான் இருக்கும்.மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை விட சற்று அதிகம். குழந்தை பிறந்த பின் வலி மாயமாய் காணாமல் போய் விடும். சரி, அந்த கதையை எல்லாம் விடுங்க. இப்பொழுது நான் சொல்வதை கற்பனை பண்ணிகோங்க.

ஒருவர் ஒரு பைக்கில் வேகமா போறாங்க . எதிர்பாராத விதம்மாக ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். கை, கால், இடுப்பு, முகம், தலைன்னு ஒரு இடம் விடாமல் பயங்கர அடி. அப்பொழுது என்னதான் வலி நிவாரணி கொடுத்தாலும் முழுமையான வலி நிவாரணம் கிடைக்காது. இத்தனை வலி சுத்தமாக சரி ஆகா எவளோ நாள், மாதம், வருஷம் ஆகும்னு தெரியாது. வலியில் இருந்து தப்பிக்க வழி ஏதும் கிடையாது. அதை எல்லாம் தாங்கி பொழச்சு வரவங்க எத்தனை பேர் இருக்காங்க!. அதை எல்லாம் விடவா பிரசவம் கடினமாக இருக்க போகுது?

அது போல பிரசவத்தை ஒரு விபத்து என்று நினைச்சுகோங்க. அனால் இதில் வலி ஒரு குறுப்பிட்ட பகுதியில் மட்டும் தான். அதுவும் மீறி போனால் 2-3 நாட்கள் தான். அப்படியும்ம் வலி தாங்க முடியாதுங்கரவங்களுக்கு இப்பொழுது பல வலி நிவாரணிகள் உள்ளன.அதுக்கு இது எவ்ளவோ தேவலைன்னு தோணுது இல்லீங்களா???!!! ஆமாங்க, எந்த வலியும் நமக்கு வரும் போது கஷ்டமாக தான் இருக்கும். அனால் மனது வைத்தால் கண்டிப்பாக தாங்கிக்கொள்ள முடியும். என்ன சொல்றீங்க?.

எனவே பிரசவம் பத்தின பயத்தை விட்டு தள்ளுங்க. பிரசவம் அப்படி தாங்க முடியாத வலினா எப்படி பலரும் இரண்டாம் குழந்தை வேணும்னு பெற்றுகொள்வங்க?. பயப்படாம மன தைரியத்துடன் மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, ஆண்டவன் கிருபையும் இருந்தால் சுக பிரசவம் சுலபமாக சுகமாக அமையும். இதில் நாம் கொடுக்கும் ஒத்துழைப்பு மிக முக்கியம். பிரசவ நேரத்தில் என்னால வலியை தாங்க முடியாது என்கிற மனநிலையோட போனால் மருத்துவர் முயற்சித்தாலும் சுக பிரசவம் அமைவது கஷ்டம். 'என்னால முடியலைன்னு' சொல்ல மாட்டேன்னு முடிவு பண்ணிட்டு போங்க. எல்லாம் நல்லபடியாக முடியும்னு positive மனநிலையோட இருங்க. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். என்ன,பிரசவம்ன்கர விபத்த எதிர்நோக்க தயார் ஆகிடிங்க தானே?. All the best.

Sunday, January 17, 2010

வளைகாப்பு / பூ சூட்டல்

ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimesterஇல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது.

குழந்தை
உருவான ஏழாவது மாதத்தில் வளைகாப்பு/பூ சூட்டல் விழா தென் இந்தியர்களால் கொண்டாடபடுகிறது. அப்பொழுது தாயிற்கு கை நிறைய கண்ணாடி வளையல் இட்டு, வாசனை பூக்கள் சூடியும் மகிழ்வர். அவ்வாறு அணிவிக்கப்பட்டு வளையல்கள் குழந்தை பிறப்பு வரை அணியுமாறு அறிவுறுத்துவார். அதற்க்கு அறிவியல்ரீதியான காரணம் உண்டு. தாயின் கையில் உள்ள கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி குழந்தை பிறப்பு வரை கை நிறைய கண்ணாடி வளையல்களுடன் உலா வரலாமே தோழிகளே!!!

Saturday, January 16, 2010

கிரகணத்தின் போது கர்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?

சூரிய கிரகணத்தின் போது கர்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களில் பலருக்கு இருக்கும். கிரகானதுக்கும் குறையுள்ள குழந்தை பிறபதர்க்கும் சம்பந்தம் உள்ளதாக சிலர் நம்புகிறார்கள். அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று எனக்கு தெரியாது. அனால் எனக்கு பெரியவர்களால் சொல்லப்பட்டது கீழே :
  • உண்மையை சொல்ல போனால் எதுவும் செய்யாமல் இருப்பதே உத்தமம். பேசாம படுத்து தூங்கிடுங்க.
  • முக்கியமாக சூரிய கதிர்கள் உங்கள் மேல் படாதவாறு பார்த்து கொள்ளுங்கள். கதவு ஜன்னல்களுக்கு திரை இட்டு கொள்வது நல்லது.
  • கிரகண நேரத்தில் உணவு உண்ணுவது தவிர்க்க படனும். கிரகணம் முடிந்ததும் குளித்த பின் உணவு உட்கொள்ளலாம்.


நீங்கள் வசிக்கும் நாட்டில் கிரகணம் தெரிந்தால் மட்டுமே இதை செய்யணும். ஏதோ நாட்டில் கிரகணம் தெரிவதற்கு நீங்கள் பயம் கொள்ள வேண்டாம்.

Monday, November 9, 2009

பழங்களை எவ்வாறு எப்பொழுது சாப்பிட வேண்டும்?

கர்ப்ப காலத்தில் பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது பொதுவான கருத்து. பழங்களை உண்பதற்கு இயற்க்கை வைத்தியத்தில் ஒரு முறை உள்ளது.
  • காலையில் உண்ணும் பழங்கள் தங்கத்திற்கு சமம் மதியம் உண்ணும் பழங்கள் வெள்ளிக்கு சமம். இரவில் உண்ணும் பழங்கள் பித்தளைக்கு சமம்.
  • உணவிற்கு பின் அல்லது உணவுடனோ பழங்களை உண்டால் ஜீரணிப்பது சிரமம். எனவே பழங்களை தனியாக உண்பதே நல்லது. சிலர் உணவு உண்ட உடன் வாழைபழம் உண்பார்கள். அது ஜீரண கொழறையே உருவாக்கும் என்று சொள்ளபட்டுளது.
  • ஒரு நேரத்திற்கு ஒரு வகையான பழத்தை மட்டுமே உண்ண வேண்டும். பல வகை பழங்களை கலந்து உண்பது சரியான முறை அல்ல.

இருபத்திஆறாவது வாரம் (Week 26)

இப்பொழுது குழந்தையால் வெளி சத்தத்தையும், உங்கள் இதய துடிப்பு, வயற்றுக்குள் ஏற்படும் சத்தங்களையும் ஓரளவு கேட்க முடியும். சிறிதளவு வெளி வெளிச்சத்தையும் காண முடியும். இந்த வார முடிவில் குழந்தையின் எடை சுமார் 660 gms இருக்கும். உயரம் சுமார் 34 cms இருக்கும்.

இப்பொழுது சிலருக்கு stethascope வயற்றின் மேல் வைத்தால் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும். உங்களுக்கு கேட்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். சிலரிக்கு க்டைசி வரை stethascope மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியாது. இது சாதரணமானது தான். stethascopeஐ விட doppler கருவி மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை சுலபமாக கேட்க முடியும்.

வயறு பெரிதாகி கொண்டு வருவதனால் படுப்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஒரு பக்கம் படுக்கும் பொழுது வயற்றின் கீழ்( வயிர்டிற்கு சப்போர்ட் ஆகவும்) மற்றும் தொடைகளுக்கு நடுவில்(,இடுப்பு வலி உள்ளவர்களுக்கு வலி குறையும்) ஒரு தலையணையை வைத்து படுத்தால் சற்று சிரமம் குறையும். மல்லாக்க படுப்பது முதுகு தண்டிர்க்கு அதிக எடை ஏற்றுவதால் நல்லதல்ல. பொதுவாக தாய் இடதுபக்கம் திரும்பி படுப்பதே நல்லது. எனினும் இரவு முழுவதும் ஒரு பக்கமே படுப்பது என்பது கடினமானது. எனவே முடிந்தவரை அவ்வாறு படுக்க முயற்சிக்கலாம். மேலும் இடது வலது என்று திரும்பி படுக்கும் பொழுது எழுந்து உட்க்கார்ந்து திரும்பி படுப்பதே இனிமேல் நல்லது. இது குழந்தைக்கு கொடி சுற்றிகொள்வதை தடுக்கும் என்று முன்னோர்கள் சொல்கிறார்கள்.


இருபத்திஐந்தாவது வாரம் (week 25)

இப்பொழுது உங்கள் குழந்தையின் கைகள் நல்ல வளர்ச்சி பெற்று இருக்கும். தன்னை சுற்றி உள்ளவற்றை குழந்தை கைகளினால் ஆராய்ந்து பார்க்கும். குழந்தையின் அசைவுகளை முன்பை விட இப்பொழுது இன்னும்னன்றாக உணர முடியும். குழந்தையின் மூக்கு துவரம் வளர்ச்சிபெற்று இந்த வாரம் திறந்து கொள்ளும் வைப்பு உள்ளது. இந்த வார முடிவில் குழந்தையின் எடை சுமார் 625 gms இருக்கும். உயரம் சுமார் 34 cms இருக்கும்.

25 வாரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் ௧௫ வாரம் காத்திருக்கவேண்டுமா உங்களுக்கு என்ன குழந்தை என்று அறிந்து கொள்ள!!! அதற்குள் ஒரு சின்ன ஜோஷியம் பார்போமா?. கீழ்க்காணும் சீன ஜோஷியத்தை பாருங்கள். இது எனக்கு சரியாகவே வந்தது. Try your luck people :)


நீங்கள் கர்ப்பம் தரித்த போது உங்கள் வயதையும் எந்த மாதத்தில் கர்ப்பம் தரிதீர்கள் என்பதையும் வைத்து என்ன குழந்தை என்று கண்டுகொள்ளுங்கள். Have fun :)

Friday, November 6, 2009

இருபத்திநான்காவது வாரம்

இப்பொழுது குழந்தையின் உள் காது நல்ல வளர்ச்சிபெற்று இருபதால் குழந்தைக்கு தான் நேராக உள்ளோமா அல்லது தலை கீழாக உள்ளோமா என்று உணர முடியும். இப்பொழுது உங்கள் குழந்தை ஒவ்வொரு வாரமும் சுமார் 150 gms எடை கூடும். இப்பொழுது உங்கள் குழந்தையின் எடை சுமார் 575 gms இருக்கும். நீளம் சுமார் 30 cms இருக்கும்.

Breech Birth: இப்பொழுது பலருக்கு குழந்தைகள் தலை கீழ் நிலைக்கு திரும்பி இருக்கும். உங்கள் குழந்தை இன்னும் திரும்பவில்லை எனில் கவலை கொள்ள வேண்டாம். சில குழந்தைகள் பிறபதற்கு சில நாட்கள் முன் தான் திரும்பும். சில குழந்தைகள் திரும்பாமலே போகலாம். அவ்வாறு திரும்பாம்பல் போனால் அதை breech birth என்பார்கள். அவ்வாறான நிலையில் சுகப்ரசவம் மிகவும் கடினம் என்பதால் உங்கள் மருத்துவர் cesarean செய்ய அறிவுருதலாம்.

Premature Birth: 37 வாரங்களுக்கு குழந்தை பிறந்தால் அது preterm birth என்று சொல்லப்படும். 24 வாரங்களுக்கு மேல் குழந்தை பிறப்பின் அது பிழைபதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும் பல மாதங்கள் இன்ட்டேன்சிவே கேர் இல வைத்து இருக்க வேண்டி வரலாம்.

Monday, October 5, 2009

இருபத்திமூன்றாவது வாரம் (week 23 )

இந்தவாரம் குழந்தையின் நுரையீரல் வேகாமான வளர்ச்சி காணும். மூச்சு உள் இழுத்து வெளி விடப்படும் போது நுரையீரல் உப்பி சுருங்கும்போது ஒட்டிகொல்லாமல் இருக்கவும் சுருங்கிவிடாமல் இருக்கவும் உதவ surfactant எனப்படும் திரவத்தை நுரையீரல் உற்பத்திசெய்யும். நுரையீரலில் உள்ள இரத்த குழாய்களும் வேகமாக வளர்ச்சிபெறும். இப்பொழுது குழந்தையின் எடை சுமார் 500 gms இருக்கும்.

பிரசவத்தை எளிதாக்கும் ஹோமியோபதி

ஆம், ஹோமயோபதிஇல் தசைகளை பிரசவதிருக்கு தயார்படுத்த கூடிய மருந்துகள் உள்ளன. அவற்றை ஒரு தேர்ந்த ஹோமயோபதி மருத்துவரின் ஆலோசனைப்படி ஏழாவது மாதம் முதல் பிரசவ நாள் வரை எடுத்து வந்தால் பிரசவம் விரைவாக அமையும். இது என் அனுபவம். என் முதல் குழந்தை induce செய்யப்பட்டு முதல் வலி வந்து இரண்டரை மணி நேரத்தில் பிறந்தது. நான் மூன்று மாதம் முடிந்ததில் இருந்து பிரசவ நாள் வரை ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்தேன். அத்துடன் கடைசி இரண்டு மாதங்கள் squatting exercise செய்தேன். முடிந்தவரை தரையில் சப்பணமிட்டு அமரும்படி என் gynecologist அருவுருதினார். அதையும் செய்து வந்தேன்.மேலும் என் ஹோமயோபதி மருத்துவர் என்னை தினமும் ஒரு 10*10 அறையை பெருக்கி, குத்திட்டு அமர்ந்து துடைக்க சொன்னார். அனால் நான் அதை செய்யவில்லை என்பதை ஒப்புகொள்ளதான் வேண்டும் ;) .

முறையான நடை பயிற்சியுடன் ஹோமயோபதி மருந்து எடுத்துகொண்டல் நல்ல பலன் உண்டு என்பது என் அனுபவம். எனவே ஹோமயோபதி மருத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் அருகில் உள்ள நல்ல ஹோமயோபதி மருத்துவரை அணுகி பயன் பெறுங்கள்.

Saturday, September 19, 2009

இருபத்திஇரண்டாவது வாரம் (week 22 )

இப்பொழுது உங்கள் குழந்தையின் தைகள் மற்றும் நரம்புகள் ஓரளவு வளர்ச்சிபெற்று இருபதனால் அதன் அசைவும் சமனப்பட்டு இருக்கும் (co-ordinated ). இதுவரை மொழு மொழு என்று இருந்த குழந்தையின் மூளை இப்பொழுது மடுப்புகள் பெற ஆரம்பிக்கும். இது முப்பதினாலவது வாரம் வரை தொடரும். இப்பொழுது குழந்தை aminotic பிளுஇடை சிறுது விழுங்கி அதிலுள்ள சிறிது சர்க்கரை உறிஞ்சும். இது குழந்தையின் digestive system செரிமானம் செய்ய நல்ல பயிற்சியாக அமையும். இப்பொழுது குழந்தையின் எடை சுமார் 425 gms இருக்கும். தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 24 cms இருக்கும்.

கர்ப்ப கால நீரிழிவுக்கான உணவு முறை (Gestational Diabetes Diet)

சர்க்கரை அளவு கட்டுப்பாடு என்பது உணவு உண்பதுக்கு முன் சர்க்கரை அளவு 95 குறைவாகவும் உண வு உண்டு இரண்டு மணி நேரத்துக்கு பின் 120 கு குறைவாகவும் இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் சர்க்கரை கட்டுபாடுக்குள் இருப்பதாக அர்த்தம்.

உணவு கட்டுப்பாட்டின் மூலம் கற்ப கால நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம். எனவே எவ்வாறான உண்வு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
  • 3 முறை வயறு நிரம்ப உண்பதை விட 3 மணித்துளிகளுக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக உண்பது சர்க்கரை அளவை ஒரே சீராக வைக்க உதவும்.
  • முழு தானியங்கள்,தீட்டாத அரிசி சாதம், கோதுமை, ராகி, கம்பு போன்ற உணவுகளை மிதமான அளவில் உட்கொள்வது சிறந்தது. carbohydrates மிதமான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • புரத சத்துள்ள ஆனால் கொழுப்பு குறைவாக உள்ள உணவுகள் நன்மை பயக்கும்
  • காய்கறிகள் பழங்கள் தேவையான நார்சத்தை கொடுக்கும். பழரசத்தை விட முழு பலன்களே நல்லது. பழரசம் அருந்துவதானால் நிறைய நீர் சேர்த்து சர்க்கரையை முடிந்தவரை குறைத்துகொள்ளவும்.
  • நிறைய நீர் மற்றும் சூப் அருந்தலாம்.
  • சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைத்து கொள்வது நலம் இத்துடன் சேர்த்து மிதமான நடை பயிற்சி மேற்கொள்வது மிக்க நன்மை பயக்கும்.
இவ்வாறு இருந்தாலே சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

Wednesday, September 16, 2009

இருபத்தியோராவது வாரம் (week 21 )

இது வரை கருவின் இரத்த அணுக்களை அதன் கல்லீரல் மற்றும் மண்ணீரல் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. இப்பொழுது அதனுடன் சேர்ந்து எலும்பு மஜ்ஜையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கும். கல்லீரல் இரத்த அணு உற்பத்தியை குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன் நிறுத்தி விடும். அதே போல மண்ணீரல் முப்பதாவது வாரத்துடன் உற்பத்தியை நிறுத்தி கொள்ளும். முன்றாவது trimester முடியும் தருவாயில் இரத்த அணு உற்பத்தியை எலும்பு மஜ்ஜைகை முழுமையாக செய்ய ஆரம்பிக்கும். குழந்தை பிரபிர்க்கு பின்னும் இரத்த அணு உற்பத்தி செய்வது எலும்பு மஜ்ஜையின் வேலை ஆகா இருக்கும். இப்பொழுது உங்கள் குழந்தையின் எடை சுமார் 375 grams இருக்கும் .

கற்ப கால நீரிழிவு (Gestational Diabetes)

நீரிழிவு என்பது ஒருவரின் pancreas(இது இரைப்பையை ஒட்டயுள்ள ஒரு சுரப்பி)
போதிய அளவு இன்சுலின் எனும் ஹார்மோன்ஐ
உருவாக்க முடியாமல் போகும் போது உருவாகும் ஒரு நிலையாகும்.

கர்ப்ப காலத்தில் 2% முதல் 13% பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியாதபோதிலும் சில காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று இது கற்ப காலத்தில் குழந்தையின் தேவைக்கும் சேர்த்து தாயின் உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகும் பொது ஏற்படும் ஒரு நிலையாகும்.மற்றொரு காரணமாக கூறபடுவது, ஈஸ்ட்ரோஜென், கோரிச்டோல் போன்ற ப்லசெண்டா உற்பத்திசெய்யும் ஹோர்மோன்கள் இன்சுலினை எதிர்க்க ஆரம்பிப்பதால் உடல் அதை ஈடு செய்ய அதிகமாக இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது. அது முடியாமல் போகும் போது நீரிழிவு ஏற்படுகிறது. இதே காரணத்தால் தான் குழந்தை பிறப்பிற்கு பின் ப்லசெண்டா வெளியில் வந்தவுடன் ஹார்மோன் உற்பத்தி நின்று விடுவதால் நீரிழிவு சரியாகி விடுவதாக சொல்லபடுகிறது. பொதுவாக கர்பத்தின் 20-24 வாரம்(mid-pregnancy) போல் ஆரம்பமாகும். எனவே 24முதல் 28 ஆவது வாரத்தில் உங்கள் மருத்துவர் இரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்.

கற்ப கால நீரிழிவு குழந்தை பிறப்பிற்கு பின் தானாக சரி ஆகிவிடும். எனினும் கற்ப காலத்தில் சர்கரையின் அளவு கட்டுபாட்டில் இல்லை எனில் அது குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது.
  • அதிகபடியான சர்க்கரை குழந்தைக்கு போய் சேரும் என்பதால் குழந்தை எடை மிகுதியாக ஆகிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறானால் சுகப்ரசவம் கஷ்டமாகலாம்.
  • மேலும் சில குழந்தைகளுக்கு பிறந்த பின் hypoglycemia எனப்படும் சர்க்கரை அளவு குறைதல் மற்றும் காமாலை ஏற்படலாம்.
  • குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
என்ன பயமாக இருக்காதா? சில உணவு கட்டுப்பாடு மற்றும் மிதமான நடை பயிற்சி மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே பயம் கொள்ள வேண்டாம். அவ்வாறு சர்க்கரை அளவு கட்டுபாடுக்குள் வராவிடின் உங்கள் மருத்துவர் இன்சுலின் கு பரிந்துரைக்கலாம்.