Sunday, July 26, 2009

இருபதாவது வாரம் (week 20)

இப்பொழுது 'வெர்னிக்ஸ்' (vernix) என சொல்லப்படும் வெள்ளை நிற வழு வழுப்பான திரவம் குழந்தையின் தோலின் மேல் உருவாகி இருக்கும். இது குழந்தையின் தோலை "aminotic fluid" இல் இருந்து காபதாக சொல்லபடுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன் முற்றிலும் போய் விடும். எனினும் சில குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவை பிறந்த பின்னும் காணப்படும். ஆனால் இது கவலை கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 13 cms இருக்கும். முழு நீளம் 25.5 cms இருக்கும். எடை சுமார் 310gms இருக்கும்

கர்ப்ப காலத்தில் 10-12kgs வரை எடை கூடும். ஒரு சிலருக்கு அது கூடவோ குறையவோ இருக்கலாம். இப்பொழுது இந்த எடை எங்கெங்கு எந்த அளவு கூடும் என்று பாப்போம்:

  • குழந்தையின் எடை : 38%
  • நச்சுக்கொடி (PLACENTA): 9%
  • குழந்தை மிதந்து கொண்டு இருக்கும் நீர் (aminotic fluid) : 11%
  • உங்கள் உடலில் அதிகமாகி உள்ள இரதத்தின் எடை, திரவங்கள் :22%
  • உங்கள் கருப்பை, மார்பகங்கள், பிட்டம், கால், மாற்ற பாகங்கள்: 20%
இனிமேல் சிலருக்கு வயற்றின் தோல் விரிவடைய ஆரம்பிப்பதால் அடி வயற்றில் லேசான வலி இருக்கும். இப்பொழுதில் இருந்து வயறிற்கு நல்லெண்ணெய் தடவி 10 நிமிடங்கள் விட்டு பிறகு குளிக்கலாம். அவ்வாறு செய்வது தோல் வறண்டு போகாமல் இருக்க உதவும். தோலில் என்னை பசை இருப்பின் அது விரிவடையும் பொது ஏற்படும் அசொவ்கரியம் குறையும். மேலும் அது "stretch marks" எனப்படும் தோல் விரிவடைவதால் ஏற்படும் கோடுகள் விழுவதை குறைப்பதாக சொல்லபடுகிறது. சிலருக்கு மார்பகங்களிலும் இக்கோடுகள் விழும்.

Thursday, July 23, 2009

பத்தொன்பதாவது வாரம் (week 19)

குழந்தையின் கண் மற்றும் இமைகள் இப்பொழுது நல்ல வளர்ச்சி இருக்கும். எனினும் இமைகள் குழந்தை பிறக்கும் வரை மூடிய நிலையிலேயே இருக்கும். 24-25 வாரங்களில் குழந்தை பிறந்தாலும் கூட இமைகள் திறந்துகொள்ளும். குழந்தை இப்பொழுது நன்றாக எடை கூட ஆரம்பித்திருக்கும். இந்த வார இறுதியில் குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 12 cms இருக்கும். முழு நீளம் 23 cms இருக்கும். எடை சுமார் 250 gms இருக்கும்

இப்பொழுது நீங்கள் நன்றாக எடை கூட ஆரம்பித்திருபீர்கள். எனவே இப்பொழுது நீங்கள் உங்கள் உடலுக்கு தக்கவாறான உடைகள் வாங்க வேண்டி வரலாம். கர்ப்ப காலத்தில் உபயோகிப்பதற்கென்றே பிரத்யோக ஆடைகள் கடைகளில் கிடைக்கும். அவை மிகவும் சவ்கரியமாக இருக்கும். சல்வார் போன்ற உடைகளை விரும்புவோர் சற்று பெரிய அளவில் தைத்து கொள்ளலாம். அவ்வாறு தைபவர்கள் முன் பக்கம் ஹூக் வைத்து front open டைப் தைத்தால் குழந்தை பிறந்த பின் பாலுட்டவும் வசதியாக இருக்கும்.

கற்ப காலத்தில் பிரா அளவு 2-3 சைஸ் வரை கூடும். எனவே அதற்க்கு தக்கவாறு சரியான அளவு வாங்கி உபயோகிப்பது மிகவும் முக்கியம். இறுக்கமான உள்ளாடை அணிய கூடாது. தளர்த்தியான உள்ளாடை அணிந்தால் மார்பகங்கள் தொங்கி போகும். சரியான அளவு உள்ளாடை இப்போதிருந்து அணிந்து வந்தால் மார்பகங்கள் தொய்வடைந்து போகும் அளவு குறையும். ஆனால் எப்படி இருந்தாலும் கர்பத்துக்கு பின் மார்பகங்கள் முன் போல் இல்லாமல் சற்று தொய்வடைவது தவிர்க்க முடியாது. பாலுட்டுவதால் மார்பகங்கள் தொய்வடையும் என்று சொல்வது தவறான கருத்து. அது கற்ப காலத்தில் பால் சுரப்பிகள் செயல்பட தொடங்கி விரிவடைவதால் ஏற்படுவது. நீங்கள் குழந்தைக்கு பால் ஊட்டினாலும் இல்லை என்றாலும் குழந்தை பிறபிர்க்கு முன்பே அவை விரிவடைந்து இருக்கும். எனவே மார்பகங்கள் சற்று தொய்வடைவது தவிர்க்க இயலாதது. பால் ஊட்டுபவரானால் குழந்தை பால் மறந்த பின் மார்பகங்கள் மிகவும் தளர்ந்தது போல் காணப்படும். சுமார் 6 மாதங்களில் மார்பகங்களில் மீண்டும் கொழுப்பு சேர்ந்து அவை ஒரளவு சரி ஆகும்.

Saturday, June 27, 2009

பதிணெட்டாவது வாரம்( week 18)

இப்பொழுது உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக அசைந்து விளையாடி கொண்டு
இருக்கும். சில சமயங்களில் அதிக அசைவும் சில சமயங்களில் அசைவில்லமலும் இருக்கும். நீங்கள் படுத்து இருக்கும் பொழுது குழந்தை சுறுசுறுப்பாக அசைவதை கவனிப்பீர்கள். நீங்கள் நடந்து கொண்டோ வேலை செய்து கொண்டோ இருக்கையில் அது குழந்தைக்கு தொட்டில் ஆடுவதை போல் இருக்கும். எனவே அவ்வாறான நேரங்களில் குழந்தை உறக்க நிலைக்கு சென்றுவிடுவதனால் அசைவுகள் குறைந்து காணப்படும். குழந்தையின் உடலில் இன்னும் கொழுப்பு சேர்ந்திருக்காது. எனவே அதனுடைய தோல் சுருக்கங்களுடன் காணப்படும். குழந்தையின் தலை முதல் பிட்டம் வரையிலான நீளம் சுமார் 11 cms இருக்கும். முழு நீளம் 21 cms இருக்கும். எடை சுமார் 210 gms இருக்கும்.

கர்ப்ப கால உணவு முறை :
கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துகளும்தாயின் மூலமாகவே குழந்தைக்கு கிடைக்கும். எனவே கர்ப்ப காலத்தில் தாய் சரிவிகித உணவே உண்பதில் கவனம் கொள்ள வேண்டும். கருவின் வளர்ச்சிக்கு தேவை என்று அதிக சக்தி தரும் உணவுகன் உன்ன வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பு சரியான கொண்டவரானால் கர்ப்ப காலத்தில் 200 கலோரி அதிகம் உண்டால் போதுமானதாகும். அதுவே நீங்கள் அதிக உடல் எடை அல்லது குறைந்த எடை கொண்டவரானால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு பிரத்தியோக உணவுமுறை பரிந்துரைக்கலாம்.

'junk food' மற்றும்
கடைகளில் கிடைக்கும் பழரசங்களையும் தவிர்க்கவும். சர்க்கரை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைத்து கொள்ளவும். உங்கள் இரத்த சொந்தத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருப்பின் இதில் கூடுதல் கவனம் கொள்ளவும். டி, காபி, cola, சாக்லேட் போன்றவைகளையும் முடிந்த வரை தவிர்க்கவும். தண்ணீர் மற்றும் நீர்த்த பழரசங்களை அருந்துவது மிக நல்லது.
உங்களுக்கு ஏதேனும் food allergy இருப்பின் அவ்வாறான உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடவும்.

சரிவிகித உணவு என்பது carbohydrates, protein, fats, minerals மற்றும் vitamins அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இப்பொழுது எந்த எந்த உணவுகளில் என்ன சத்து உள்ளது என்று பார்ப்போம்:

  • Carbohydrates: சாதம், சப்பாத்தி, ரொட்டி, தானியங்கள், உருளை கிழங்கு, பஸ்தா, நூடுல்ஸ், சேமியா,அரிசியில் செய்யப்பட்ட இட்லி, கொழுகட்டை, சேவை, கோதுமை சதம், உப்புமா போன்ற உணவுகளில் Carbohydrates நிறைந்து காணப்படும்.
  • Protein : பருப்பு வகைகள், முட்டை, மீன், இறைச்சி, பால் போன்றவற்றில் Protein மற்றும் மினரல்ஸ் உள்ளது.
  • Calcium: பால் , சீஸ், பனீர், தயிர் ஆகியவற்றில் calcium மற்றும் விடமின்ஸ் நிறைந்து உள்ளது.
  • Fibre: காய்கள், கீரை, பழங்களில் நார்சத்து(fibre) நிறைந்து உள்ளது. மலச்சிக்கலை(constipation) தவிர்க்க நார்சத்து மிக அவசியமாகும்.
  • Iron: சிவப்பு இறைச்சி , பேரிச்சை, பிக் போன்ற உலர்ந்த பழங்கள், கீரைகளில் உள்ளது. எனினும் உங்கள் மருத்துவர் கர்ப்ப காலத்தில் உங்களை Iron supplement எதுதுகொள்ள பரிந்துரைப்பார்.
சைவர்களுக்கு : உங்களுடைய protein மற்றும் கால்சியம் தேவையை நிறைவு செய்ய கர்ப்ப காலத்தில் தினமும் 600 ml பால் அல்லது அதுக்கு சமமான அளவு பால் கொண்ட பால் சார்ந்த பொருட்க்களை உணவில் சேர்த்துகொள்வது அவசியம். பால் பிடிகாதவறல் சோயா பால் அருந்தலாம்.